நிந்தவூர் 03ம் பிரிவைச் சேர்ந்த திருமதி கதீஜா உம்மா அப்துல் மஜீட் தனது 37 வருட நிர்வாக சேவைக்காலத்திலிருந்து இன்றுடன்
(10) ஓய்வு பெறுகின்றார்.
கடந்த 1981ம் ஆண்டு; முதல் பெண் இலிகிதராக கடமையேற்ற இவர்
அம்பாறை மாவட்டத்தின் முதல் முஸ்லிம் பெண் பிரதேச சபை செயலாளராகவும் சுமார் 04 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளதோடு, வரலாற்றில் இடம்பிடித்த முதலாவது முஸ்லிம் பிரதேச சபை செயலாளர் என்கின்ற கௌரவத்தையும் நிந்தவூரிற்கு பெற்றுத்தந்துள்ளார்.
இதன்பின்பு நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இணைந்து கொண்ட இவர் இறுதியாக நிர்வாக உத்தியோகத்தராக கடமைபுரிந்ததோடு, 37 வருட அரச சேவைக்காலத்தின் பின் இன்றுடன் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்கின்றார்.
இன்றைய தினம் ஓய்வு பெற்றுக் கொண்ட திருமதி கதீஜா மஜீட்டினை, நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ரி அன்சார் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் அவரது வீடு சென்று கௌரவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
"முதற்பெண்மணி கதீஜா மஜீட்" அவர்களின் வரலாற்றை vkJ jpq;fs; ,izaj;jsk; போற்றிப் புகழ்வதுடன் வாழ்த்தி வழியனுப்புகிறது!



Post a Comment