பிரதான செய்திகள்

 


கோட்டாபய அதிகாரத்தில் இருக்கும் போது பரிந்துரை செய்த ஜப்பானுக்கான தூதுவரை, தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார். 

ஜப்பானுக்கான சிறிலங்கா தூதுவராக பரிந்துரைக்கப்பட்ட, ஓய்வுபெற்ற அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் நியமனத்தையே, அதிபர் ரணில் விக்ரமசிங்க நிறுத்தியுள்ளார்.

வெளிநாட்டுச் சேவை அதிகாரி அருணி விஜேவர்தன மே மாத இறுதியில் வெளிவிவகாரச் செயலாளராக நியமிக்கப்பட்டமையை அடுத்து, கொலம்பகே ஜப்பானில் பதவியேற்பதற்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பரிந்துரைத்தார்.

இவ்வாறான நிலையிலேயே கொலம்பகேவின் நியமனமத்தை தற்போது ரணில் நிறுத்தியுள்ளார்.

அவருக்கு பதிலாக மூத்த வெளிநாட்டுச் சேவை அதிகாரி ரொட்னி பெரேராவை ரணிலின் புதிய நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

கொலம்பகேவுக்கு பதிலாக பெரேராவை நியமிக்கும் முடிவை அரசாங்கம், நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் குழுவிற்கு (HPC) அறிவித்துள்ளது.

இத்தகைய இராஜதந்திர நியமனங்களை சபாநாயகர் தலைமையிலான குழு ஆராய்வது ஒரு சம்பிரதாயமாக கருதப்படுகிறது.

அரசாங்கத்தை பதவி விலகக்கோரிய அரசியல் பிரசாரங்களுக்கு மத்தியில் இந்த நியமனம் வழங்கப்பட்டது. ரொட்னி பெரேராவின் மூத்த சகோதரரான ரொனால்ட் பெரேரா, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் (SLIC) தலைவராக அண்மையில் நியமனம் பெற்றார்.

அவர்கள் இருவரும் ரணில் விக்ரமசிங்கவின் விசுவாசியான மறைந்த முன்னாள் அமைச்சர் போல் பெரேராவின் மகன்களாவர்.

ரொட்னி பெரேரா முன்னர் சிறிலங்காவின் தூதுவராக வோஷிங்டனில் பணியாற்றினார். JAICA(ஜெய்க்கா)நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் திட்டம், முன்னாள் அதிபர் கோட்டாபயவினால் ரத்து செய்யப்பட்டதால், மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானுடனான உறவை சரிசெய்ய வேண்டும் என்பதற்காகவே கொலம்பகேக்கு பதிலாக, ரொட்னி பெரேரா நியமிக்கப்படவுள்ளார் என்று அரசாங்கம் கூறுகிறது.






கிளர்ச்சிகள் உருவானால், அவற்றை ஒடுக்குமுறை மூலம் மாத்திரமே அடக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக மேற்கொள்ளப்படும் சிறந்த பணிகளுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கூடியளவில் ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு முழுமையான ஒத்துழைப்பு


பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சி என்ற வகையில் சிறந்த அரசாங்கத்தை அமைத்து திட்டங்களை முன்னெடுத்து, நாட்டு மக்களின் தேவை பூர்த்தி செய்ய பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.
சர்வகட்சி அரசாங்கத்திற்கான சூழலை ஏற்படுத்தவே கோட்டாபய பதவி விலகினார்




சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் சூழலை உருவாக்கவே கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினார். இதற்கான சூழலை ஏற்படுத்த மகிந்த ராஜபக்சவும் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரினர். கோட்டாபய விலகிய பின்னர் அடுத்த திட்டம் என்ன என்ற புரிதல் இவர்களுக்கு இருக்கவில்லை.

கோட்டாபய பதவி விலகினார், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தின் ஊடாக நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானார். தற்போது அவரது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

கிளர்ச்சி உருவானால், அதனை ஒடுக்குமுறை மூலம் மட்டுமே அடக்க முடியும் எனவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.



அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத்

பதியுதீன் எம்.பி. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஒன்றுக்கு இன்று சி .ஐடியினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.


நீண்ட நேரம் இடம்பெற்ற இந்த விசாரணையின் பின்னர் அவர் சி.ஐ.டியினரால் விடுவிக்கப்பட்டார்.

                        ( நமது விசேட நிருபர் )
நிந்தவூரில் காட்டு யானை தாக்கி 14 வயதுச் சிறுவன் பரிதாபகரமாக மரணமான சம்பவமொன்று நிந்தவூர் நெல்வயல் பகுதியில் அமைந்துள்ள பரவட்டப்பிட்டி, பனையடிவட்டையில் இன்று(30) இடம்  பெற்றுள்ளது.

நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் ஆண்டு 9ல் கல்வி பயின்று வந்த முஹம்மது ஜாபீர் முஹம்மது முன்சிப் (வயது 14) என்பவரே யானைத் தாக்கத்திற்கு உள்ளாகி மரணத்தைத் தழுவியுள்ளவராவார்.

மேலும் இதுபற்றித் தெரியவருவதாவது:- 
பி.ப.2.00 மணிக்குப் பாடசாலை கலைந்து வீடு வந்த மாணவன் பகற் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, பாடசாலை மைதானத்தில் நண்பர்களுடன் விளையாடப் போவதாக தனது தாயிடம் பொய்யைச் சொல்லி விட்டு, பாடசாலை நண்பர்களுடன் வயல் வெளியில் வந்து நிற்கும் யானைக் கூட்டத்தைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார்.

ஆத்திரங் கொண்ட யானை துரத்தியபோது பாடசாலைச் சிறுவர்கள் சிதறுண்டு ஓடித் தப்பியுள்ளனர். மரணமடைந்த முன்சிப் எனும் மாணவனைத் துரத்திச் சென்ற யானை அவரைகக் கோபங் கொண்டு தாக்கியதில் அவரது தலைப்பகுதியும், உடல் பாகங்களும் சிதைவடைந்த நிலையில் மறணித்துள்ளார்.

இச்செய்தியை அறிந்த சம்மாந்துறைப் பொலிசாரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நிந்தவூரிலிருந்து சுமார் 3.5 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பரவட்டப்பிட்டி பனையடிவட்டையிலிருந்து மாணவனின் சடலத்தை மீட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை பிரதே அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.ஐ.நஸ்றுல் இஸ்லாம் அவர்களினால் பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டதோடு, சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய உதவிப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.நவ்பர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

'யானையின் தாக்குதலினால் தலையிலும், உடல் பாகங்களிலும் ஏற்பட்ட கடுங்காயங்களினாலும், இரத்தப் பெருக்கினாலும் ஏற்பட்ட மரணம் எனத் தீர்பளித்து'  பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.ஐ.நஸ்றுல் இஸ்லாம் இரவு 11.00 மணிக்கு ஜனாசாவை நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டார்.

இரவு 12.மணியளவில் நிந்தவூர் மஸ்ஜிதுல் றவாஹா பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு, றவாஹா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இம்மாணவனின் சடலத்தைக் கண்டு பிடித்து மீட்பதற்கு உதவிய சம்மாந்துறைப் பொலிசார், திடீர் மரண விசாரணை அதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், வன இலாகா அதிகாரிகள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், நிந்தவூர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், நிந்தவூர் ஜனாசா நலன் புரிச் சபையினர், நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊர் நலன் விரும்பிகள், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள், அழைக்காமல் வந்து உதவியோர் அனைவருக்கும் மறணித்த மாணவனின் பெற்றோர்களான முஹம்மது ஜாபீர்-சாகுல் ஹமீது ஹைறுன்னிசா ஆகியோர் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.









எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் 
எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.


காலிமுகத்திடலில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் மக்கள் கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய அவர்,


தேசிய மக்கள் சக்தியின் சார்பில் என்னை தலைமையேற்க தெரிவு செய்தமைக்காக முதலில் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 


அதுமட்டுமல்லாது என்மீதான நம்பிக்கையை வைத்து என்னை தெரிவுசெய்தமைக்கு ஏற்றால் போல் தேசிய மக்கள் சக்திக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் எப்போதும் நன்றியுடையவனாகவும், நம்பிக்கையை காப்பாற்றும் நபராகவும் இருப்பேன் என உறுதிமொழி வழங்குகின்றேன்.



இந்த ஜனாதிபதி தேர்தல் முகவும் முக்கியமான ஒரு கட்டத்தில் உள்ளது. இதில் இரண்டு தெரிவுகள் மக்களுக்கு உள்ளது. ஒன்று பழைய மோசமான ஊழல்வாத ஆட்சியை கொண்டு செல்லும் வழி. மற்றையது மக்கள் மகிழ்ச்சியாக, ஒற்றுமையாக வாழக்கூடிய வழியும் உள்ளது.


காலாவதியான மோசமான ஆட்சி வேண்டுமா அல்லது மக்கள் நம்பிக்கையுடன் கட்டியெழுப்பகூடிய வழி வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டிய முக்கிய சந்தியில் உள்ளீர்கள்.



இந்த நாட்டினை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. முதலில் மோசமான அரசியலை இல்லாது செய்ய வேண்டும். நாட்டினை கட்டியெழுப்பும் நோக்கம் கொண்ட தொழிலாளர், அதனை ஏற்றுகொள்ளும் மக்கள் கூட்டத்தை கொண்டே முன்னெடுக்க வேண்டும்.



 இதில் முதல் கட்டம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும், இந்த நாட்டில் அரசியல் ஊழல், மோசடி, கப்பம், அடக்குமுறை என்பவற்றை கையாளும் நபர்களின் கைகளில் இன்று அரசியல் அதிகாரங்கள் உள்ளது. இவற்றை மாற்றியமைக்க வேண்டும்.


இந்த நாசகார ஊழல் மிக்க அரசியலுக்கு அப்பால் தூய்மையான உண்மையான மக்கள் நல அரசியலை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை இதில் நாம் முன்வைக்கின்றோம். 


இந்த நாட்டின் வளங்கள் அனைத்துமே கைப்பற்றப்பட்டுள்ளது.


சமூகமாக இன்று நாட்டு பிளவுபட்டுள்ளது. சமூகங்களை பிரித்து வைத்துள்ளனர். பிளவுபட்ட சமூகத்தை கொண்டு நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது. ஜாதி, மதம், இன பிளவுகளில் இருந்து விடுபட்டு ஐக்கிய நாட்டினை உருவாக்கும் சூழலை நாம் உருவாக்கிக்கொடுப்போம்.



எமது எதிர்கால சந்ததியினருக்கான உறுதியான நாட்டினையும் எமது இளம் சமுதாயத்தினருக்கு நிருவாகத்தை கையில் கொடுக்க வேண்டும். எமது நாட்டில் அப்பாவி மக்கள் வேதனையுடன், வருத்ததுடனும் வாழ்கின்றனர். ஆனால் இந்த வேதனைகளால் மாத்திரம் மாற்றத்தை உருவாக்கிவிட முடியாது. அதனையும் தாண்டி உறுதியான மன நிலையுடன் மக்கள் கூட்டத்தை உருவாக்க வேண்டும். 


அதற்கான நம்பிக்கையை இன்று காலிமுகத்திடலில் கூடியுள்ள மக்கள் கூட்டத்தின் மூலமாக எமக்கு கூறியுள்ளனர்.
இதுவரை காலமாக ஏனைய கட்சிகளை ஆதரித்த மக்கள் அனைருக்கும் நாம் இப்போது அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் எம்முடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிப்போம். போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம்.


அதற்கான இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றினைவோம். இனியும் மக்கள் மௌனிகளாக இருந்தால் இந்த நாட்டின் பாதையை மாற்றியமைக்க முடியாது. 


ஆகவே மக்களுக்கு இருக்கும் மிகவும் முக்கியமான சந்தர்ப்பம் இது. இதில் மக்கள் சகலரும் சரியான தீர்மானத்தை எடுத்து எம்முடன் கைகோர்க்க அலைப்புவிடுகின்றேன் என்றார்.

சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

                                        ( நமது விசேட நிருபர்  )
நிந்தவூரில் 10 வயது சிறுமி தூக்கிட்டுத் தொங்கியதாக, தொங்கியவரின் அம்மம்மாவினால் தெரிவிக்கப்படுகிறது. 

நிந்தவூர் - 21, தியேட்டர் வீதியைச் சேர்ந்த சூர்தீன் சப்னா( வயது 10) என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக தூக்கில் தொங்கி மரணத்தைத் தழுவியவராவார்.

இவரது சடலம் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தெரியவருவதாவது:- 
மருதமுனையைச் சேர்ந்த சூர்தீன் என்பவருக்கும், நிந்தவூரைச் சேர்ந்த அலியார் ஜவாஹிறா என்பவருக்கும் மகளாகப் பிறந்தவரே மறணத்தைத் தழுவிக் கொண்ட சூர்தீன் சப்னா என்பவராவார்.

சூர்தீன் சப்னாவின் பிறப்பின் பின்னர் சூர்தீனும், ஜவாஹிறாவும் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து, சூர்தீன் வேறு திருமணஞ் செய்து கொண்டார். ஜவாஹிறா வெளிநாடு சென்று விட்டார். 
குழந்தை சூர்தீன் சப்னாவை இரண்டு மாதக் குழந்தையாக இருக்கும் போது அவரது அம்மம்மா இப்றாலெவ்வை ஆசியா உம்மா(65) எடுத்து வளர்த்து வந்துள்ளார். சப்னாவை வளர்த்ததோடு கல்வி கற்பிக்கவும் செய்துள்ளார். சப்னா இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையும் எழுதியுள்ளார்.

சம்பவ தினத்தன்று அம்மம்மா கொடுத்த அப்பத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு, பிள்ளளைகளுடன் விளையாடிக் கொண்டு நின்ற சப்னாவை சிறிது நேரத்தின் பின்னர் காணாது தேடியபோது வீட்டின் அறையினுள் தொங்கிய நிலையில் கண்டு, மீட்டு வைத்திய சாலைக்குக் கொண்டு வந்ததாக சப்னாவின் அம்மம்மா இப்றாலெவ்வை ஆசியா உம்மா வைத்தியசாலையிலும், ஊடகவியலாளர்களிடமும் தெரிவித்தார்.

பி.ப. 12.50 மணிக்கு வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்ட சடலம் தற்போது பி.ப.3.58 மணிவரை( செய்தி அச்சிக்குப் போகும் வரை பொலிஸ் விசாரணைகளின்றி வைத்தியசாலையிலேயே வைக்கப்பட்டுள்ளது).

இன்று இரவு 8.30 மணியளவில் சடலத்தைப் பார்வையிட்ட சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி சபீர் அஹமட் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
18.08.2019 இன்று!!! 
பிரேத பரிசோதனைக்காக நிந்தவூர் ஆதார வைத்தியசாலையிலிருந்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இரவு கொண்டு செல்லப்பட்ட சடலம் (இச் செய்தி அச்சுக்குப் போகும் வரை பி.பகல் 2.45 மணிவரை) பிரேத பரிசோதனைகள் இடம்பெறாத நிலையிலேயே சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஏ.நவ்பர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.





                             -இக்பால் அலி-
சிங்கள அரசர்களுடைய ஆ;ட்சிக் காலத்தில்  முஸ்லிம்களைப் பற்றி  
அவர்களுடைய பாதுகாப்பு விடயத்தில் மிகுந்த நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள்.

அந்த நம்பிக்கையை நாம் இலங்கையர் என்ற வகையில் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து தொடர்ந்து கட்டி எழுப்ப வேண்டும்.

எனினும் அரசியல் நோக்கத்திற்காக முஸ்லிம்களை வேறுபடுத்த சிலர் ;முயற்சி செய்கின்றனர். 

இவை எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து அதை தோல்வியடையச் செய்வோம் என்று பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பறகஹதெனிய தேசிய பாடசாலையில் 12 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு கட்டிடத் தொகுதிகளும் மாணவர்களின் பாவனைக்காக பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்களினால் திறந்து கையளிக்கும் வைபவம் அதிபர் சபருல்லாக்கான் தலைமையில் இடம்பெற்றது 
அவர் அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் 

உண்மையிலேயே பறகஹதெனிய ஒரு பழைமைவாய்ந்த கிராமம்.  அரசர்கள் முஸ்லிம் மக்கள் வெளிநாடுகளில் இருந்து வந்த சமயங்களில் இங்கே அழைத்து வந்து குயேற்றினர். 

சிங்கள அரசர்கள் பறகஹதெனியவில் முஸ்லி;களைக் குடியேற்றியதற்கான காரணம் கலகெதரைக்குச் செல்லும் வீதியை பாதுகாப்பதற்காகும். அதே போன்று கலதெதர கிராமத்திலும் முஸ்லிம் கிராமங்கள் தோற்றம் பெற்றன. 

சிங்கள அரசர்கள் மத்தியில்  முஸ்லிம்கள் எந்தவிதமான பிரச்சினைகளுமின்றி சிங்கள அரசர்களைப் பாதுகாப்பார்கள்  என்ற மிகுந்த நம்பிக்கையிருந்தது. 1815 ஆண்டில் இடம்பெற்ற கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கூட எந்த முஸ்லிமும் கையொப்பம் இடவும் இல்லை. சம்மந்தப்படவும் இல்லை. 

அந்த வகையில்  பழைமைவாய்ந்த வரலாறு ஒன்று இருக்கிறது. அந்தப் பாதையினை  நாம் முன்னேற்ற வேண்டும்.

தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக முஸ்லிம்களை வேறுபடுத்தி சிலர் முயற்சி செய்கின்றனர். எந்த சமயத்திலும் எந்தக் குழுவிலும் பிழைகள் செய்கின்ற மரணிக்கின்ற அடிப்படைவாதிகள் இருக்கின்றார்கள். அதை தடுக்க முடியாது. அவற்றை தெரிந்து கொண்டு தான் அதை இல்லாமற் செய்ய முடியும்.

சிங்கள அரசர்கள் அனைத்து மக்களும்; பாதுகாப்பு வழங்கினார்கள். எல்லோரும் ஒன்றிணைந்து நாம் இலங்கையர் என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் நாம் முகம் கொடுத்து அதனை தோல்வியடையச் செய்ய வேண்டும்.
பறகஹதெனிய பாடசாலைக்கு வரும் போது விசேடமாக கல்வி அபிவிருத்தி தொடர்பாக  கூடுதல் கவனம் செலுத்தி கல்வி மட்டத்தை அதிகரிக்க வே;ண்டும் என்று தெரிவித்திருந்தேன். 

பாடசாலை வளங்கள் கட்டிடங்கள் வழங்கினாலும் கல்வி மட்டத்தை அடைந்து கொள்ள முடியாது என அப்பொழுது தெரிவித்தேன். இன்று நான் வரும் போது கட்டிட வளங்களும் கிடைக்கப் பெற்று கல்வி மட்டமும் முன்னேற்ம் கண்டுள்ளது என்று கூற விரும்புகின்றேன். வைத்தியத் துறைக்கும் பொறியயியல் துறைக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்ப்ட்டுள்ளனர்.

நாங்கள் இவை பற்றி எல்லோரும் பெருமைப்பட வேண்டும். அதற்காக அயராது உழைத்த ஆசிரியர் குழாத்துக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

இனிவரும் காலங்களில் இப்பாடசாலையில்  கல்வி வளர்ச்சி; தொகை அதிகரிக்குமே தவிர குறையாது. தற்போது இருக்க வேண்டி நடவடிக்கைகள் இவையே. 12 கோடி பெறுமதியான  பாடசாலைக்கான கட்டிடங்கள் திறந்து வைக்கப்ப்ட்டுள்ளன. விசேடமாக பாடசாலை அபிவிருத்தி செய்யப்படுவதுடன் இந்தப் பிரதேச அபிவிருத்தி செய்யப்படும். கல்வி இல்லையென்றால் எங்களால் வாழ்க்கை நடத்த முடியாது. கல்வியின் மூலம தான் ; எதிர்காலத்தை நோக்கிச் செல்ல முடியும். தங்களுடைய பாடசாலையிலும் கல்வி வளர்ச்சி உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இதில் பாடசாலை நிர்வாகக் கட்டிடம், தொழில் நுட்ப கூடம்,  அதிபர் விடுதி, நவீன வசதிகளுடனான தேநீர்ச் சாலை ஆகியவற்றுக்கான புதிய நான்கு கட்டிடடங்கள்  மாணவர்களின் பாவனைக்காக பிரதமரினால் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இராஜாங்க அமைச்சர் ஜே. சி அலவத்துவெல, மாவத்தகம பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் முஹம்ட ரிபாழ் உட்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.







                                   -எப்.முபாரக் -
போதைப்பொருள் தொடர்புடைய வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட கைதியொருவர்
திருகோணமலை சிறைச்சாலையில் நேற்றிரவு (17) உயிரிழந்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு - 12 மாட்டிஸ்லேன், இலக்கம் 6 வசித்து வந்த ஜயசிங்க ஆராய்ச்சிலாகே ஜகத் சின்தக (49 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது - கொழும்பு, கெசல்வத்த பொலிஸாரினால் கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பட்டது நிலையில் அவரை மூன்று மாதத்திற்கு கடூழிய சிறை தண்டனை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து திருகோணமலை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றிரவு (17) உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறைக்கைதியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தமை தொடர்பில் சட்ட வைத்திய பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இருந்தபோதிலும் தனது தந்தை உயிரிழந்தமை தொடர்பில் தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவரின் மகன் பிரதீப் நிரோசன பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த 12ஆம் திகதி தந்தையை கைது செய்யும்போது கொழும்பு-கெசல்வத்த பொலிஸார் தந்தையை தாக்கியதாகவும் இதனால் தந்தைக்கு ஏதாவது ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் நிலவி உள்ளதாகவும் மகன் பொலிஸாரிடம் தெரிவித்தார்.


    -பாட்டனின் அசமந்தமே காரணம்! பாட்டன் பொலிசாரால் கைது!!

 ( நமது விசேட நிருபர் )
நிந்தவூர்,  வவ்வாலோடை பிரதேசக் கடலில்,  நீரில் மூழ்கி ஒன்றரை வயதுக் குழந்தையொன்று பரிதாபகரமாக மறணித்துள்ளது.

நிந்தவூர்-09, 3ம் குறுக்குத் தெருவில் வசித்து வரும் இல்லியாஸ்(வயது 32)-நிசா( வயது 30)  தம்பதிகளின் குழந்தையான இல்லியாஸ் முஹம்மட் ஆதில்( வயது-ஒன்றரை) என்பவரே அண்மையில் கடலில் மூழ்கி மரணித்தவராவார்.

இதுபற்றித் தெரியவருவதாவது:- 
இன்று காலை 8.00 மணியளவில் குழந்தையின் பாட்டனான உதுமான் கலந்தர் ( பீத்ர இளையதம்பி ) என்பவர் தனது பேரரான முஹம்மட் ஆதிலை அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றுள்ளார். பேரனைக் கடற்கரை மணலில் விளையாட விட்ட இவர், தனக்கு வந்த தொலைபேசி அழைப்புக்குப் பதில் கூறிவிட்டுத் தனது பேரனைப் பார்த்துள்ளார். பேரனைக் காணவில்லை.

அங்குமிங்கும் தேடிவிட்டு, வீட்டிலுள்ளவர்களுக்கு இவ்வதிர்ச்சிச் செய்தியைச் சொல்லியுள்ளார். உடனே வீட்டிலுள்ளவர்கள் எல்லோரும் பதறியடித்துக் கொண்டு கடற்கரைக்கு ஓடிவந்த போது, அங்குள்ள மீனவர்களால் கடலில் மிதந்து வந்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டடுள்ளதைக் கண்டுள்ளனர். 
குழந்தை காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 800 மீற்றர் தூரத்திற்கு அப்பாலே குழந்தையின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


குழந்தையின் தந்தை ஒரு மாதத்திற்கு முன்னர் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கிற்குச் சென்றுள்ளார். தாய் எட்டு நாட்களுக்கு முன்னர் இரண்டாவது குழந்தையைப் பிரசவித்துள்ளார். இந்நிலையிலெயே முதலாவது குழந்தையான ஆதில் பரிதாபகரமாக மறணித்துள்ளார். இப்பரிதாபச் சம்பவம் பாட்டனின் அசமந்தப் போக்கினால் ஏற்பட்டுள்ளது என்று ஊரவர்களும், உறவினர்களும், பொலிசாரும் தெரிவிக்கின்றனர்.

தற்போது குழந்தையின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பாட்டனான உதுமான் கலந்தர் சம்மாந்துறைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஏ.நவ்பர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்காலத்தில் பொழுதை இன்பமாகக் கழிப்பதற்கென்று அதிகமானவர்கள் கடற்கரைப் பிரதேசத்திற்கு வருகை தருகின்றனர். இவர்களில் ஆண், பெண், சிறுவர்கள், வயோதிபர்கள், வாலிபர்கள் என்று எல்லோருமே கடற்கரைக்கு வருகின்றனர். அதிலும் பெண்களும், பாலர்களும் அதிகமாக கடற்கரைப் பிரதேசத்தை நேசிக்கின்றனர். 

இவ்வாறு வருபவர்களில் அதிகமானோர் சிறுவர்களையும், குழந்தைகளையும் கடற்கரை மணலில் விளையாட விட்டு விட்டு, அவர்கள் கையடக்கத் தொலை பேசிகளில் மூழ்கி விடுகின்றனர். தொலைபேசி உரையாடல்களின் இன்பம் மழலைகளைக் கூட மறக்கச் செய்து விடுகிறது.

இவ்வாறானவர்களின் செயல்களால் தான் அண்மையில் நிந்தவூர் பிரதேசத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை பட்டப்பகலில் கடலில் மூழ்கி மறணித்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. இது போன்ற பல நிகழ்வுகள் நாட்டின் பல பிரதேசங்களிலும் அடிக்கடி நிகழ்ந்து வருவதை நாம் அறிந்துள்ளோம். 

எனவே அன்புக்குரிய பெற்றோர்களே, அன்பர்களே, நண்பர்களே இனிவரும் காலங்களிலாவது, கடற்கரைப் பிரதேசத்திற்கு சிறுவர்கள், குழந்தைகளைக் கொண்டு வருவோர் தயவு செய்து தன்னை மறந்து தொலைபேசி உரையாடல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் அவ்வாறான இன்பகரமான உரையாடல்களில் ஈடுபடுவதற்காக கடற்கரைப் பிரதேசத்தை நாடுவோர் தயவு செய்து குழந்தைகளைக் கடற்கரைப் பிரதேசத்திற்குக் கொண்டு வரவேண்டாம் என உங்களை வினயமாக வேண்டுகிறோம்.







Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.