Articles by "Medical"

Showing posts with label Medical. Show all posts




                           எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை உள்ளடங்கிய பல பிரதேசங்களில் காணப்படும் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான பொருள் ஒன்று காணப்படுவதை இன்று (18) காலை அவதானிக்க முடிகின்றது.
குறித்த பொருளானது வான்பரப்பில் பறந்து திரிவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.
பஞ்சு வகை போன்ற குறித்த பொருளை சிலர் கையிலெடுத்து பார்த்த போது அவை மென்மையாக காணப்படுவதாகவும் அதில் சிறு பூச்சி இனம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

                 (ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
மட்டக்களப்பு மத்தி  வலயக்கல்விப்  பணிப்பாளராக  மருதமுனையை சேர்ந்த Dr. எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா நியமிக்கப் பட்டுள்ளார் .
கிழக்கு மாகாண கல்வி  அமைச்சின் செயலாளர்  ஐ.ஜி .கே. முத்துபண்டாவினால் இவருக்குரிய நியமனக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடந்த 13.11.2018 இலிருந்து செயற்படும் வண்ணம் இந்த நியமனம் வழங்கப் பட்டுள்ளது. இன்னிலையில் இன்று (23) தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளாா்.
அரச கல்வி நிருவாக சேவை தரம்- 11 அதிகாரியான டொக்டர்  எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா  1964-09-18 ஆம் திகதி மருதமுனையில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியிலும் கற்றுக் கொண்டார்.
1984 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்ட Dr.  எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா அவர்கள் தனது முதல் நியமனத்தை பண்டாரவளை நீட்வூட் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பெற்றுக் கொண்டார். 1989 ஆண்டு அட்டாளைச் சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை பூர்த்தி செய்தார். இதனை தொடர்ந்து 1990 அண்டு தான் கல்வி கற்ற அல்-மனார் மத்திய கல்லூரிக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார். மிக நீண்ட காலமாக ஆசிரியர் சேவையை மேற்கொண்ட இவர் 2006 ஆம் ஆண்டு தனது கல்விமாணி பட்டத்தை தேசிய கல்வி நிறுவகத்தில் பூர்த்தி செய்து கொண்டார்.
2007 ஆம் அண்டு இலங்கை கல்வி நிருவாக சேவைக்குள் உள்வாங்கப்பட்ட இவர் 2007 தொடக்கம் 2009 ஆம் ஆண்டுவரை கல்முனை கல்வி வலையத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றினார். பின்னர் 2009 ஆண்டு அல்-மனார் மத்திய கல்லூரிக்கு ஆதிபராக நியமனம் பெற்றார். இவரது 5 ஆண்டு அதிபர் சேவைக் காலத்தில் அல்மனார் மத்திய கல்லூரி பல் வேறு வளர்சிப் படிகளை தொட்டது எனலாம்.
2014 ஆண்டு கல்விமுதுமாணி பட்டத்தை பூர்த்தி செய்து கொண்ட இவர்  சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் நிருவாக பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளராக 2014 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் கல்முனை கல்வி வலயத்தின் நிருவாகம் மற்றும் முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இன்னிலையிலேயே தற்போது மட்டக்களப்பு மத்தி   வலயக்கல்விப்  பணிப்பாளராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வித்துறைக்கு அப்பால் பல்வேறு சமூக நிறுவனங்களிலும் பொறுப்புள்ள பதவிகளிலிருந்து தனது சமூகத்திற்கு சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2007 ஆம் ஆண்டு முதல் அம்பாறை மாவட்ட விசேட தேவையுடையோர் வலையமைப்பின் தலைவராக இருந்து சேவையாற்றி வருகின்றார். மருதமுனை அபிவிருத்தி மக்கள் கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளராக இருந்து மருதமுனையின் நெசவுத் தொழிலுக்கு உயிரூட்டியுள்ளார். st.Johns Ambulance உதவி மாவட்ட ஆணையாளராகவும் கல்முனை ஆயுள்வேத பாதுகாப்புச் சபையின் தலைவராகவும் இருந்து சேவையாற்றும் இவர் இன்னும் பல்வேறு சமூக அமைப்புக்கள், விளையாட்டுக்களகங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார்.
ஆயுள்வேதம் மற்றும் கொமியோபதி வைத்தியரான Dr.  எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா அவர்கள் மருத்துவத்துறையில் DHMS(SL),PIMP(Ind),DAMP(Ind),RAMP(SL) ஆகிய பட்டங்களையும் பூர்த்தி செய்துள்ளார்.
மருதமுனை செய்யது உமர் மௌலான செய்யது முகம்மது மௌலானா, முஹம்மது அப்துல்லாஹ் ஜமாலியா உம்மா ஆகியோரது 4வது புதல்வரான இவர் மருதமுனையை சேர்ந்த செய்னுலாப்தீன் றிஸ்வானாவை கரம் பிடித்துக் கொண்டார்.
Dr.  எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா அவர்களுக்கு 2 பிள்ளைகள், தனது மூத்தமகள் உமர் மௌலானா அப்றோஸ் இந்தியா கல்கத்தா மேற்கு பல்கலைக்கழகத்தில் கொமியோபதி விசேட வைத்திய அறுவைச் சிகிச்சை பட்டத்தை அண்மையில் பூர்த்தி செய்துள்ளார். இந்தத் துறையில் கிழக்கிலங்கையில் முதல் பட்டதா ரி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இரண்டாவது மகன் உமர் மௌலானா அப்ஸர் லபீப்  மௌலானா தற்போது வர்தகப் பிரிவில் கல்வி கற்று வருகின்றார்.
வலயக்கல்விப்  பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள Dr.  எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா அவர்களை எமது திங்கள் செய்திப் பிரிவு வாழ்த்துவதில் பெருமிதம் அடைகின்றது. இன்னும் இன்னும் Dr.  எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா அவர்களின் சேவை இந்த மண்ணுக்கு கிடைக்க வேண்டும் எனப் பிராத்திக்கின்றோம்.





போலி வைத்தியர்களை கைது செய்ய பொலிசாரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போலி வைத்தியர்களை கைது செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான தகவல்களை தனியார் மருத்துவ சேவைகள் ஒழுங்குறுத்தல் பேரவைக்கு வழங்க முடியும்.

இதுதொடர்பாக சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவிக்கையில் நாடு பூராவும் 30 ஆயிரம் வைத்தியர்கள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தனிப்பட்ட ரீதியில் மருத்துவ சேவைகளில் ஈடுபட தனியார் மருத்துவ சேவைகள் ஒழுங்குறுத்தல் பேரவையில் பதிவு செய்யப்படுவது அவசியமாகும் என்றூர்.




-சுகாதாரப் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சப்றாஸ் பிரதம அதிதி-                                              
                          (    ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சிறுநீரக நோய்த்தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிமின் வழிகாட்டலில் 'நிந்தவூர் பிரதேசத்திலுள்ள நீரிழிவு நோயாளர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வும், இலவச மருத்துவப் பரிசோதனையும், சிகிச்சையளிக்கும் நிகழ்வுகளும் இன்று(12) நிந்தவூர் தொற்றா நோய் ஆயூர்வேத ஆராட்சி நிலையத்தில் இடம் பெற்றன.

நிந்தவூர் தொற்றா நோய் ஆயூர்வேத ஆராட்சி வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் சுகாதாரப் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.ரி. முகம்மட் சப்றாஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஏ.ஹில்மியா, ஆயூர்வேத ஆராட்சி நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.றியால்டீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இன்றைய தினம் 120க்கு மேற்பட்ட நிந்தவூர் பிரதேசத்திலுள்ள நீரிழிவு நோயாளர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட்டதோடு, இலவச மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
பரிசோதனைகளுக்காகப் பசித்திருந்த அனைவருக்கும் இயற்கை மூலிகைத் தாவரங்கலந்த இலைக்கஞ்சியும், முட்டைகளும் வழங்கப்பட்டன.மேலும் அவர்களுக்கு இரு வாரங்களுக்குத் தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டன.

இது போன்ற நிகழ்ச்சிகள் எதிர்காலத்தில் இவ்வைத்தியசாலையினூடாக ஏனைய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், மாதத்தில் 2வது மற்றும் 4வது வாரங்களில் ( செவ்வாய் கிழமைகளில் ) இதே போன்று தொற்றா நோயாளர்களுக்கான கிளினிக்குகளும் இவ்வைத்தியசாலையில் தொடராக நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆயூர்வேத ஆராட்சி வைத்தியசாலைப் பணிப்பாளர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'எமது இந்த ஆயுர்வேத ஆராட்சி வைத்தியசாலையில் உங்களுக்குத் தேவையான அனைத்து மருந்து வகைகளும் இருக்கின்றன. நீரிழிவு , கொழுப்பு, இரத்தழுத்தம் போன்ற பல்வேறு பெறுமதியான பரிசோதனைகள் இலவசமாக இடம் பெறுகின்றன. இவற்றை அனுபவியுங்கள். இவற்றுக்காக உழைத்து வருபவர்களுக்கு இறைவனிடம் பிரார்த்தனை புரியுங்கள்' எனக் கேட்டுக் கொண்டார்.

பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.ரி. முகம்மட் சப்றாஸ் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'இந்த வைத்தியசாலையை 2020ம் ஆண்டுக்குள் அதற்குரிய காணியில் முழுமையாக கட்டி முடித்துவிட வேண்டுமென்று நமது பிரதியமைச்சர் கடினமாக உழைத்து வருகிறார். விரைவில் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாங்கள் இலங்கையின் நாலாபக்கங்களிலுமுள்ள இது போன்ற வைத்தியசாலைகளுக்குச் சென்று பார்த்திருக்கின்றோம். அவைகளோடு ஒப்பிடுகையில் நமது வைத்தியசாலையில் நடைபெறுகின்ற சேவைகள் அதிகமென்றுதான் சொல்ல வேண்டும். இதற்குக் காரணம் எமது வைத்தியசாலைகளில் பணியாற்றி வரும் வைத்தியர்கள், ஏனைய உத்தியோகத்தர், ஊழியர்களின் தியாகமே! எனவே, அவர்களின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்திக்க வேண்டியது நமது கடமையாகும்' எனத் தெரிவித்தார்.












 



இன்று 12 ஆம் திகதி சுகாதாரப் போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின்  ஆலோசகர் வைத்தியர் கே.எல்.எம். நக்பர் (MSc. Medical Admin) அவர்கள் கிழக்கு மாகாணத்தில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக கடந்த 11 வருடங்களாகக் கடமையாற்றிவிட்டு இன்று பதவி உயர்வு பெற்று நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளராக பதவி ஏற்றார். 

இவர் வைத்திய நிருவாக முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டம் பெற்றுள்ளதுடன் கட்டார், சீனா, இந்தியா போன்ற நாடுகளில் இத்துறையில் விசேட பயிற்சிகளையும் நிறைவு செய்துள்ளார்.

சுகாதர அமைச்சின் ஆலோசகராக நியமனம் பெற்று சுதேச மருத்துவத் துறைக்கு பல்வேறு சேவைகள் புரிந்துவரும் இவரது கடமை ஏற்பு நிகழ்வில் சுகாதாரப் போசனை மற்றும் சுதேச மருத்துவப் பிரதி அமைச்சர் கௌரவ பைஸால் காஸிம் அவர்களின் பிரத்தியேக செயலாளர் திரு சப்றாஸ் அவர்களும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்ததுடன் தொற்றா நோயாளர்களுக்கான விஷேட விழிப்புணர்வு நிகழ்ச்சி, நடமாடும் கிளினிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும். 

















































































































                                    ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச சபைக்குட்பட்ட கரவாகு வயல் பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் கப்பல்ல பாலம் எனுமிடத்தில் இனந்தெரியாத ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சடலம் பல நாட்கள் ஆற்று நீரில் அமிழ்ந்திருந்து நேற்று(09) மீட்கப்பட்ட நிலையில் உடலின் சில பாகங்கள் அழுகியதாகக் காணப்படுகிறது. சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண்மகன். சடலத்தின் நாக்கு வெளியே தள்ளிய நிலையில் உடல் ஊதிப்பெருத்துக் காணப்படுகிறது. கறுப்பு நிற பொட்டன் எனும் காற்சட்டையும், வெள்ளை நிற சேட்டும் அணிந்த நிலையில் சடலத்தின் இடது கையில் இரண்டு காப்புக்கள் அணிந்து காணப்படுகிறது.

இச்சடலம் இவ்விடத்திற்கு எவ்வாறு வந்தது?, இது கொலையா? தற்கொலையா? கழுத்து நெரித்துக் கொன்று விட்டுப் பின்னர் ஆற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளதா? அல்லது வலிப்பு நோயுள்ளவரா? அல்லது வேறு எங்கோ உள்ள சடலம் ஆற்று நீரில் அடிபட்டு வந்துள்ளதா? போன்ற பல்வேறு சந்தேகங்கள் இதன்மேல் தோன்றுகிறது. இனங்கண்டு சடலத்திற்கு உரிமை கோருவதற்கு எவரும் முன்வராத காரணத்தால் எந்த இனத்தைச் சேர்ந்த சடலம் என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது! 

சடலத்தை நேரடியாகப் பார்வையிட்டு, பொலிசார் - அருகிலுள்ளோர் போன்றவர்களை விசாரணை செய்த சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம்.நஸீல் ' சடலத்தை உறவினர் எவராவது வந்து இனங் காட்டும் வரை, இன்றிலிருந்து 14 நாட்களுக்கு அம்பாரை போதனா வைத்தியசாலை பிரேத அறையில் பாதுகாப்பாக குளிரூட்டி வைக்குமாறும், 14 நாட்கள் கடந்தும் எவரும் இனங்காட்டத் தவறினால், அரச செலவில் சடலத்தைப் புதைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்' பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

தற்போது சடலம் அம்பாரை போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது வரை எவரும் சடலத்தை இனங்காட்டவில்லை. சடலம் இனங்காட்டப்பட்ட பின்னரே ஏனைய விசாரணைகளைத் தொடர முடியுமெனவும், சடலத்தை இனங்காண்பதற்குப் பொது மக்களின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மஜீட் தெரிவித்தார்.

சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம்.இபுனு ஹஸார் அவர்களின் விசேட பணிப்பின் பேரில் பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மஜீட் தலைமையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. 



  -மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிசாம் பிரதம அதிதி-
                           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர்க் கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் 'பொலித்தீனுக்கு மாற்றுப் பொருள் என்ன' எனும் தலைப்பில் நிந்தவூர் நலன்புரிச் சபை நடாத்திய சித்திரம், கட்டுரை, மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வும், சித்திரக் கண்காட்சியும் நேற்று நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில் இடம்பெற்றது.

முன்னாள் மாகாணக் கல்விப்பணிப்பாளரும், நிந்தவூர் நலன்புரிச் சபைத் தலைவருமான எம்.எச்.யாக்கூப் ஹசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிசாம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும், இந்நிகழ்வுகளில் நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ஜிஹானா அலீப், தென்கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.ஏ.நசீர் அஹமட், கல்முனைக் கல்வி வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.றசீன், அம்பாரை மாவட்ட நீர்வழங்கல் பிரதம பொறியியலாளர் ரி.இஸ்மாயில், அமைப்பின் நிகழ்ச்சித் திட்டப்பணிப்பாளர் யூ.எல்.உமர் அலி, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

போட்டிகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்குப் பெறுமதியான பரிசில்களும், சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி, கௌரவிக்கப்பட்டது.

மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிசாம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ' ஒரு சிறந்த ஓவியன் எதையும் நேரியதாகப் பார்க்கின்ற பண்புடையவனாக இருப்பான். சமூதாயத்தை அல்லது சூழலைப் பார்க்கின்ற போது, அந்த சூழலில் எது கோணலாக இருக்கின்றதோ, அதைச் சரியாக அல்லது, நேரியதாக உருவாக்க வேண்டும் என்று நினைப்பவன்தான் ஓவியன். எனவே நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஓவியனின் பங்கும் அழப்பரியது' எனத் தெரிவித்தார்.



















-தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி இஸ்ஷாக் பிரதம அதிதி-
                        ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் நலன் புரிச்சபையின் வருடாந்த ஒன்று கூடலும்,  NWC செய்திச் சஞ்சிகை வெளியீடும் நேற்று நிந்தவூர் அல்-அமீர் பிளேசில் இடம் பெற்றது.

முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளரும், நிந்தவூர் நலன் புரிச்சபைத் தலைவருமான எம்.எச். யாக்கூப் ஹசன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி எம்.எம்.இஸ்ஷாக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வுகளில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், உதவிப் பிரதேச செயலாளர் அஸ்சேஷ்.ரி.எம்.எம்.அன்சார் நளீமி, தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களான ஏ.ஏ.நசீர் அஹமட், ஏ.ஜமால்டீன் உள்ளிட்ட கல்விமான்கள், உலமாக்கள், வைத்தியக்கலாநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

நிந்தவூர் நலன் புரிச்சபைத் தலைவர் எம்.எச். யாக்கூப் ஹசன் கருத்துத் தெரிவிக்கையில்:- 'எமது நலன்புரிச் சபை மூலம் உருவாக்கியிருக்கும் வட்டியில்லா வங்கியில் தற்போது ஒரு கோடியே 30 இலட்சம் இருக்கிறது. ஆரம்பித்த ஒரு வருடகாலத்துக்குள் 10 மில்லியனுக்கு மேல் ஏழை மக்களுக்காக உதவி செய்துள்ளோம். இறைவன் நாடினால் இன்னும் அதிகமாகச் செய்யவிருக்கிறோம். எனவே எல்லோரும் எம்முடன் இணைந்து செயற்படுமாறு அன்பாய் வேண்டுகிறேன்' எனக் கேட்டுக் கொண்டார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி எம்.எம்.இஸ்ஷாக் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'சமூகப் பணிகளில் ஈடுபடுவோர் என்றும் பெருந்தியாகிகளாவர். இவர்களுக்கு இதற்கான கூலி மறுமையில் தான் இறைவனால் வழங்கப்படும். எனவே சமூகத்திலுள்ள சிலரின் ஆதாரமற்ற  குற்றச்சாட்டுக்களுக்கு அஞ்சத்தேவையில்லை. நாம் இறைவனைப் பயந்து நேரான வழியில் சென்றாலே போதும். அது எப்போதும் சமூக சேவையாளர்களைக் காப்பாற்றும்' எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ' NWC செய்திகள்' எனும் சிறப்புச் சஞ்சிகையொன்றும் வெளியிடப்பட்டது.  இதன் முதற் பிரதியை நிந்தவூர் நலன் புரிச்சபைத் தலைவர் எம்.எச். யாக்கூப் ஹசன் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீலுக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார். 



















Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.