இன்று 12 ஆம் திகதி சுகாதாரப் போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் ஆலோசகர் வைத்தியர் கே.எல்.எம். நக்பர் (MSc. Medical Admin) அவர்கள் கிழக்கு மாகாணத்தில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக கடந்த 11 வருடங்களாகக் கடமையாற்றிவிட்டு இன்று பதவி உயர்வு பெற்று நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளராக பதவி ஏற்றார்.
இவர் வைத்திய நிருவாக முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டம் பெற்றுள்ளதுடன் கட்டார், சீனா, இந்தியா போன்ற நாடுகளில் இத்துறையில் விசேட பயிற்சிகளையும் நிறைவு செய்துள்ளார்.
சுகாதர அமைச்சின் ஆலோசகராக நியமனம் பெற்று சுதேச மருத்துவத் துறைக்கு பல்வேறு சேவைகள் புரிந்துவரும் இவரது கடமை ஏற்பு நிகழ்வில் சுகாதாரப் போசனை மற்றும் சுதேச மருத்துவப் பிரதி அமைச்சர் கௌரவ பைஸால் காஸிம் அவர்களின் பிரத்தியேக செயலாளர் திரு சப்றாஸ் அவர்களும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்ததுடன் தொற்றா நோயாளர்களுக்கான விஷேட விழிப்புணர்வு நிகழ்ச்சி, நடமாடும் கிளினிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
Post a Comment