Articles by "Kavithai"

Showing posts with label Kavithai. Show all posts


 -உதவிப் பிரதேச செயலாளர் அஸ்சேஷ் அன்சார் நளீமி பிரதம அதிதி-
                                      ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் நிந்தவூர் பிரதேச செயலகமும், கலாச்சார அதிகார சபையும் இணைந்து நடாத்திய 'நிந்தவூர் பிரதேச கலை இலக்கிய விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வும்' நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம் பெற்றது.

பிரதேச செயலக கலை இலக்கியக் குழுத் தலைவர் எஸ்.அஹமட் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் நிந்தவூர் உதவிப் பிரதேச செயலாளர் அஸ்சேஷ்.ரி.எம்.எம். அன்சார் நளீமி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


மேலும் இந்நிகழ்வுகளில் கோட்டக் கல்வி அதிகாரி திருமதி. பீ.ஜிஹானா அலீப் நிந்தவூர் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் டாக்டர்.ஏ.எம்.ஜாபீர், முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.றசீன், கலாச்சார அதிகார சபை உத்தியோகத்தர் எஸ்.ஏ.எஸ்.எம்.மௌலானா, கலாச்சார உத்தியோகத்தர்களான எஸ்.சுரேஷ் குமார், கே.சுதர்சன், ஜே.எம்.சிஹார் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களின் கலை, காலாச்சார நிகழ்ச்சிகளும், விவாதப் போட்டிகளும் இடம் பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள், பரிசுகள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது.





   
நிகழ்வின் இறுதியில் இளம் எழுத்தாளர் எம்.ஏ.எம்.ஜரீத் எழுதிய 'ஆழிவாசியும், அசாத்திய விஞ்ஞானமும்' எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது. 

பிரபல கவிஞரும், எழுத்தாளருமான எம்.ஐ.உசனார் சலீம் நூலின் முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.



உதவிப் பிரதேச செயலாளர் அஸ்சேஷ் அன்சார் நளீமி இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'நமது கலை இலக்கியங்கள் எப்போதும் நமது சமயம் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அப்போதுதான் எதிர்காலச் சந்ததியினர் பயன்பெறுவர். சமயத்தின் முககியத்துவத்தையும், அது கூறும் நல்வழிகளையும் அறிந்து செயற்படுவர். எனவே கலை இலக்கியங்களை வளர்ப்போர் இதில் அதிக கவனஞ் செலுத்த வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
  




























             (சப்னி அஹமட், எம்.ஜே.எம்.சஜீத்)
அட்டாளைச்சேனை அர்ஹம் வித்தியாலயத்தின் சாதனையாளர்களை பாராட்டி கெளரவம் செய்யும் நிகழ்வு இன்று (06) பாடசாலையின் அதிபர் இதிரிஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் கலந்துகொண்டதுடன் கெளரவ அதிதிகளா அக்கரைப்பற்று வலயக் கல்விப்பனிப்பாளர் ரஹ்மதுல்லாஹ், அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் கஸ்ஸாலி உள்ளிட்டவர்களுடன் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், 2017ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வும்,இம்முறை சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும், தவணைப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வும், சிறந்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும், பாடசாலையின் ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வும், அறபாவின் ஆளுமைகளாக செயற்பட்டும் பதவியில் முக்கிய இடத்தில் உள்ள ஆளுமைகளை கெளரவிக்கும் நிகழ்வும், இதன் போது, முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடாசாலைக்கான் போட்டோ கொப்பி இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.

                             -பிரதியமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதி-

                                ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கலாபூசனம் கவிஞர் நிந்தவூர் மக்கின் ஹாஜியார் எழுதிய 'பெருவிரல், கண்ணாடி, கடலுக்குப் போன மச்சான்' ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும், நிந்தவூர் பிரதேச கலாச்சார அதிகார சபையின் அனுசரணையில் நேற்று இடம் பெற்றது.

நிந்தவூர் கலை இலைக்கியப் பேரவைத் தலைவர் டாக்டர் ஏ.எம்.ஜாபீர் தலைமயில், நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில்  நடைபெற்ற இவ்விழாவில் சுகாதார பிரதியமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பிரபல கவிஞரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான சத்தார் எம்.பிர்தௌஸ், ஓய்வுபெற்ற அதிபர் எஸ்.அஹமது ஆகியோரினால் நூல் விமர்சனம், நயத்தல் என்பன இடம்பெற்றது.

நூலாசிரியர் மக்கீன் ஹாஜியார் பிரதம அதிதி, கௌரவ அதிதிகளுக்கு முதலாம் இரண்டாம் பிரதிகளை வழங்கியதன் மூலம் நூல் வெளியீட்டை ஆரம்பித்து வைத்தார்.

பிரதியமைச்சர் பைசால் காசீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'முஸ்லிம் கலாச்சார அமைச்சர் அவர்களின் தலைமையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று கூடி, எமது முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை இவர்கள் தீர்த்து வைக்கத்தவறினால், நாமெல்லோரும் பாராளுமன்றத்தில் ஒரு தனிக்குழுவாகச் செயற்படத் தீர்மானித்திருக்கிறோம் என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கு நானும் ஆதரவு வழங்குவதாகத் தீர்மானித்திருக்கின்றேன்' எனத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்;:-'யார் நினைத்தாலும் பாராளுமன்றத்தை 4 வருடங்களுக்கு முன்னர் கலைக்க முடியாது. அதுவும் ஜனாதிபதி நினைத்தால் மாத்திரமே 4 வருடத்தின் பின்னரும் கலைக்கலாம். ஆனால் சிலர் பாராளுமன்றத்தைக் கலைத்து, ஆட்சியைப் பிடிக்கலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றனர். எனத் தெரிவித்தார்.






















நாங்கள்

பிறை காண முன்
அவன்
சிறை காண வேண்டும்

நாங்கள்
கஞ்சி குடிக்கும் போது
அவன்
அஞ்சி துடிக்க வேண்டும்

நாங்கள்
நோன்பு பிடிக்க முன்
அவன்
கம்பி பிடிக்க வேண்டும்

நாங்கள்
ஈச்சம் பழம் உண்ண முன்
அவன்
பேச்சுப் பலம் மறைய வேண்டும்

நாங்கள்
கேட்டு அழும் துஆவால்
அவன்
கூட்டுள் விழ வேண்டும்

நாங்கள்
நம்பி எண்ணும் திக்ரால்
அவன்
கம்பி எண்ண வேண்டும்

நாங்கள்
எழுந்து சஹர் செய்ய முன்
அவன்
ஒழிந்து  போக வேண்டும்

நாங்கள்
தானம் செய்யும் மாதத்தில்
இந்த
ஞானம் பொய்யனாக வேண்டும்

நாங்கள்
கேட்டு அழும் குனூத்தால்
அவன்
ஆட்டம் நிற்க வேண்டும்...!


Mohamed Nizous

          -முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன்அலி பிரதம அதிதி-

                       ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
பிரபல கவிஞரும், எழுத்தாளருமான றாஜகவி றாஹிலின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவும், ஆர்.கே.மீடியாவின் கலைஞர்கள், சமூகசேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நிந்தவூர் பிரதேச சபை உள்ளக அரங்கில் நேற்று இடம் பெற்றது.

கவிஞரும், பொறியியலாளருமான ரீ.இஸ்மாயீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீ. லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹசன் அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கவிஞர் பேராசிரியர் துரைமனோகரன், எழுத்தாளர் அமைச்சுக்களின் செயலாளர் சதீஸ்குமார் சிவலிங்கம், பிறை எப்.எம் கட்டுப்பாட்டாளர் பசீர் அப்துல் கையூம், வர்த்தக முகாமையாளர் எஸ்.றபீக் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'மிட்டாய் மலையை இழுத்துச் செல்லும் எறும்பு(நாவல்), யாழ் மீட்டிய கண்கள்(பயண அனுபவக் கட்டுரை), தேவதையின் அந்தப் புரத்தில் பட்டாம் பூச்சிக் குடியிருப்பு(கவிதை வண்ண நூல்)' போன்ற மூன்று நூல்கள் இந்நிகழ்வில் வெளியீடு செய்து வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இடம் பெற்ற ஆர்.கே.மீடியாவின் கலைஞர்கள், சமூகசேவையாளர்கள் கௌரவிப்பில் றாஜகவி றாகிலின் தாயார் அவ்வா உம்மா, றாஜகவி றாகில், கலைஞர் எம்.ரி.ஹசன் அலி, பேராசிரியர் துரைமனோகரன், எழுத்தாளர் அமைச்சுக்களின் செயலாளர் சதீஸ்குமார் சிவலிங்கம், பேராசிரியர் அஷ்றப், கவிஞர் காத்தான்குடி பௌஸ் மௌலவி, பிறை எப்.எம் கட்டுப்பாட்டாளர் பசீர் அப்துல் கையூம், வர்த்தக முகாமையாளர் எஸ்.றபீக், அறிவிப்பாளர் எஸ்.ஸியாஉல் ஹக் போன்றோர் பொன்னாடை போற்றி, நிiனைவுச் சின்னங்கள் வழங்கி கௌரரவிக்கப்பட்டனர்.



முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'வெறும் சடங்குகள், சம்பிரதாயங்கள், மதஅடையாளங்களை வைத்துக் கொண்டு, இன்று எமது சமூதாயம் பிரிந்து நின்று தேவையில்லாத விடயங்களுக்காகச் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதே நேரம் எமது அடிப்படை உரிமைகள், எங்களுடைய தனித்துவ அடையாளங்கள், இருப்புக்கள், சுயநிர்ணய உரிமைகள், தேசிய அடையாளங்கள் எல்லாமே பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இவைகளை வெற்றி கொள்ள வேண்டுமானால் நமது தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுமைப்பட வேண்டும். சடங்குகளுக்கும், சம்பபிரதாயங்களுக்கும், மத அடையாளங்களுக்கு மிடையிலான வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாததனால்தான் இன்று தமிழ் முஸ்லிம் சமூகங்கள் பிரிந்து நிற்கின்றனர். இந்த நிலையை பெரும்பாண்மைச் சமூகம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு செல்கிறது. எனவே இந்நிலையை மாற்றாத வரையில், தமிழ் முஸ்லிம் உறவை மேம்படுத்தாதவரையில் இந்த நாட்டில் இரு சமூகங்களும் நிம்மதியாக வாழ முடியாது. எனவே தமிழ் முஸ்லிம் உறவு கட்டி வளர்க்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்' எனத் தெரிவித்தார்.





















-முஹம்மட் ஹஸ்னி-


*நான்... நான்... நான்...*

*நான்* சம்பாதித்தேன்,

*நான்* காப்பாற்றினேன்,


*நான்* தான் வீடு கட்டினேன்,

*நான்* தான் உதவி செய்தேன்,

*நான்* உதவி செய்யலனா? அவர் என்ன ஆகுறது!!!!!

*நான்* பெரியவன்,

*நான்* தான் வேலை வாங்கி கொடுத்தேன்,

*நான் நான் நான் நான்* என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!

*நான்* தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??

*நான்* தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?

*நான்* தான் காய்களை பழமாக மாற்றுகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?

*நான்* தான் கடலில் மீன் பிடிக்கிறவனுடைய வலையில் மீனை சிக்க வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..

ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருங்கள்.
*உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது அல்லாஹ்வுக்குரியது.*

*உணவைப்பற்றி கவலைப்படாதே !அது அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது.*

*எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே! அதுவும் அல்லாஹ்வின் கரத்தில் தான் உள்ளது*

*அல்லாஹ்வை எப்படி திருப்திப்படுத்துவது என்பது பற்றி மட்டும் கவலைப்படு*

முஸ்லீம் சமூகமே ! இன்னும் நீ ஏமாறத்தான் போகிறாயா? உனக்கு சூடு சொரணை இல்லையா?

சாக்கடையில் முளைத்த தகரக் கன்றுகள் 
வளர்ப்பும் வரலாறும் தெரியாமல்,
சாராய வெறியால் சலசலப்பதை பார்த்து
சமுதாய வளர்ச்சிக்காக்கவும் அதன் உயர்ச்சிக்காகவும்
உயிர் தியாகம் செய்த காங்கிரஸ் தொண்டர்களும் தியாகிகளும்
கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.

சாராய வெறியர்களெல்லாம்
தட்டுத் தடுமாறி தலைவர்களாக வந்து விட்ட
கேவலத்துக்கு யார் பொறுப்பு ?
காற்றுக்கு ஆடி கலகலக்கும் தகரக் கொத்துகளே..!
நீங்கள் சோற்றுக்கு போட்ட தாளங்கள் யாருக்கு தெரியாது.
மக்களின் சொத்தில் தாருல் ஸலாத்தை
கட்டிக் காத்த தலைவர் அஷ்ரப் கட்சிக்கு எழுதிய உறுதியை
அழித்து எளிதிப் பதிந்த அப்பன் சாமிகள் யார்?

இரவும் பகலும் விலை மாதர்களின் கச்சைக்குள்
கனியும் காவாலிப் பயல்களே !
இஸ்லாத்தை ஏமாற்றி முஸ்லிம்களை
பலிகொடுக்கும் பாவிகளே !

அல்லாஹ்வின் சாபம்
உங்களை அளிக்காமல் விடாது.
சமூகத்தை விற்று சாக்குகளை நிரப்பும்
சண்டாளர்களே! என்றோ ஒருநாள்
நீங்கள் அழிவது திண்ணம்.
முன்னுக்கு பின் முரணாக பேசும்
முகமூடித் தலைவனே !

உன் முகத் திரையை கிழித்து எறிவதற்கு
மக்கள் காங்கிரஸ் தலைவன் றிசாட் வந்து விட்டான்.!
உன்னையும் உன் கட்சியையும் கொத்திக் கிழிக்க
மயிலாக பறந்து வருவதை பார்…!
முஸ்லீம் சமூகமே…! இன்னும் நீ ஏமாறத்தான் போகிறாயா?
உனக்கு சூடு சொரணை இல்லையா?


--------------------------------------------------------------
கவிஞர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
--------------------------------------------------------------

ஆலமரம் சாய்ந்த போது (அஷ்ரஃப்)
அழுது புரண்ட நான்..
ஹக்கீம் தலைமையிலான மரம் 
சாய்ந்தாலும் சரிக்கப்பட்டாலும்
ஒரு கணம் கூட கலங்க மாட்டேன்

ஹக்கீம் நீங்கள் என்னை 
மன்னித்துக் கொள்ளுங்கள்!

அடிமரம் சாய்ந்த போது
அதன் விழுதான உங்களையே
தலைமையாய் ஏற்ற எம் சமூகம்
இன்று தலையில் கை வைத்து 
அடித்து,அழுது புலம்புகிறது
தாம் செய்த தப்புக்காக.!

ஹக்கீம் நீங்கள் என்னை 
மன்னித்துக் கொள்ளுங்கள்!

வீட்டுக்கு வீடு மரம் நடும்
உங்கள் திட்டம் 
நாட்டுக்கு சிலவேளை
நல்லதாக இருக்கலாம்…!
நம் சமூகத்துக்கோ
அது ஒரு சாபக்கேடு

ஏனெனில், எங்களை 
உங்கள் மனதிலிருந்து
அடியோடு நீங்கள் 
எப்போதோ பிடிங்கி 
எறிந்து விட்டீர்கள்..!
அது எங்களுக்கு ஞாபகம்
ஆனால்.. 
உங்களுக்கு ஞாபக மறதி!

ஹக்கீம் நீங்கள் என்னை 
மன்னித்துக் கொள்ளுங்கள்!

மரமா நடுகிறீர்கள்? 
சில அடிவேர்களையே 
பிடிங்கி விட்டு
புதிய மரங்களை நாட்டித்தான் 
என்ன பயன்?

விதைப்பதெல்லாம் 
கன்றுகளாவதும் இல்லை!
நடுவனவெல்லாம்
தளைக்கப் போவதும் இல்லை!

ஹக்கீம் நீங்கள் என்னை 
மன்னித்துக் கொள்ளுங்கள்!

நீங்கள் இன்று ஆலமரமாக 
மாயை கொள்ளலாம்..
ஆனால்.. உங்கள் அடியில்
நிழல் காய்வோர் யார்?
போராளிகளா? தொண்டர்களா?
கட்சி தொடக்கத்தினரா?
இல்லவே இல்லை…!

விஷத்தை துப்பி எறியும் 
விரியனை விஞ்சிய 
பாம்புகளும்..
சமூகத்தை அரைக்கும்
கறையான்களும் 
புற்றுகளை உருவாக்கி
உங்களின் அடியில் அல்லவா
நிழல் காய்கின்றன?

ஹக்கீம் நீங்கள் என்னை 
மன்னித்துக் கொள்ளுங்கள்!

சமூகத் தொண்டன் சத்திராதி, 
உண்மைப் போராளி உதவாக்கரை
இவையே இன்று கட்சி யாப்பில் 
திருத்தபட்ட சில ஷரத்துகள்..!

ஆயிரம் அம்புகளை 
நெஞ்சில் சுமந்த
அமரர் அஷ்ரஃப்
அடுத்தவனைப் பழி தீர்த்ததாக 
எனக்குத் தெரியாது!
ஆனால், அம்புகள் 
எய்யப்படாமலே
பழி தீர்க்கப்படும் இன்றைய காலம்
கண்டு என் மனம் கனக்கிறது!

ஹக்கீம் நீங்கள் என்னை 
மன்னித்துக் கொள்ளுங்கள்!

இரண்டும் இரண்டும் நான்கு என
சரியாகச் சொல்பவன் முட்டாள்!
இரண்டும் இரண்டும் ஐந்து என
உங்களுக்காக
சொல்பவன்
கெட்டிக்காரன்… 
இதனையே உங்கள் 
மேல்சபையின் கண்டேன்!
அவர்கள் புத்திசாலிகள்தான்!

அடிமட்ட தொண்டன்,
போராளி, சமூக விசுவாசி
அனைவரும் இன்று
அடிமாட்டு விலைக்கு 
சந்தையில் விலை போக…

அன்றாடம் உங்களை 
ஒட்டிப் பிழைத்து
சாமரம் வீசி சந்தனம் 
தெளிக்கும் சிலரோ
இப்போது சுப்பர் மார்கட் 
நிலையில்..!

ஹக்கீம் நீங்கள் என்னை 
மன்னித்துக் கொள்ளுங்கள்!

எல்லா தப்புகளையும் நீங்கள் 
செய்யவில்லைதான்!
ஆனால், தப்புகளுக்கு நீங்கள்
தாராள அங்கீகாரம் வழங்குவதுதானே 
மகா தப்பு!

கரு நாகங்களும் 
கறையான்களும்
இன்று உங்களுக்கு 
குரு நாதர்கள்! 
ஆனால்… 
அவைகளால் உங்கள்
நிழலில் கட்டப்படும் 
புற்றுகள் உங்களை 
நிச்சயம் அடியோடு 
சாய்த்து விடும்.. 
எச்சரிக்கிறேன்!

ஹக்கீம் நீங்கள் என்னை 
மன்னித்துக் கொள்ளுங்கள்!

நீங்கள் இன்று ஆயிரம் மரங்களை 
நாட்டி விடலாம்
ஆனால், ஆயிரமாயிரம் 
மனங்களை உங்களால் 
ஆட்கொள்வது இனி கஷ்டம்!

நீங்கள் சொன்னதற்காக 
இன்று மரம் நடுவோர்
நாளை இது ஒரு 
சாபத்தின் கேடு என
கூறினாலும்.. அது சரித்திரமாகும்
இருந்து பாருங்கள்!

இறுதியாக… நீங்கள் 
மக்களை வென்று
அவர்கள் மனங்களில் 
குடியேறுங்கள்..
அதற்காக முதலில் 
கூனிகளையும் சகுனிகளையும்
கூட வைப்பதனை 
விட்டு விடுங்கள்..

மக்களுக்காக எதனையும் 
செய்யுங்கள்…

மாக்களுக்காக 
எதனையுமே செய்யாதீர்கள்!

ஹக்கீம் நீங்கள் என்னை 
மன்னித்துக் கொள்ளுங்கள்!

கவிஞர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.