( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் 1119 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் நேற்று (25) கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம தலைமையில் திருகோணமலையில் நடைபெற்றது.
தற்போதைய அரசாங்கம் பட்டதாரிகள் தொடர்பில் கூடிய கரிசனை காட்டுகின்றது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது அரசாங்கத்தின் நோக்கங்களுள் ஒன்றாக உள்ளது.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரவை பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கு கூடிய கரிசனை கொண்டு செயற்பட்டார்கள். கிழக்க மாகாண சபை கலைக்கப்பட்டமையால் அவர்கள் செய்த அந்த பணியை ஆளுநர் என்ற அடிப்படையில் நிறைவு செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. அதனடிப்படையிலே இன்று இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றது. இந்நியமனங்கள் யாவும் வெளிப்படையான முறையிலே மேற்கொள்ளப்பட்டது.
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட்டது. அங்கு எவ்வித அரசியல் தலையீடும் இருக்கவில்லை என்று கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம இதன்போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் நியமனம் பெறுகின்ற நீங்கள் உன்னதமான ஒரு சேவையில் இணைகின்றீர்கள். உங்களது கடமையை பொறுப்புணர்வுடன் செய்ய வேண்டும். ஆசிரியர்களாகிய உங்களிடத்தில் ஒழக்க விழுமியங்கள் கட்டாயம் காணப்படல் வேண்டும். சில ஆசிரியர்களிடம் ஒழுக்கம் காணப்படுவதில்லை. அதனை நான் நேரடியாக பாடசாலைகளுக்கு கள விஜயம் மேற்கொண்டு அவதானித்துள்ளேன். மாணவர்களது ஒவ்வொறு திறமையையும் சரியான முறையில் இணங்காண வேண்டிய பொறுப்ப ஆசிரியர்களுக்க இருக்கின்றது. கல்விக்காக மேற்கொள்ளப்படும் செலவினத்தை ஒரு செலவாக கருத முடியாது. ஒரு முதலீடாகவே நாம் அதனை கருதுகின்றோம்.
எதிர்காலத்தில் இன்னும் பல பட்டதாரிகளை இணைக்கவுள்ளோம். நிலவுகின்ற வெற்றிடங்களை உடன் இணங்கண்டு அவற்றை நிரப்புவதற்கு தேiவாயன தகவல்களை உடன் தமக்கு வழங்குமாறு திணைக்கள தலைவர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன். கிழக்கு மாகாணத்தை கல்வித்துறையில் ஒரு படிநிலையாவது முன்னிலை பெற்ற மாகாணமாக மாற்றியமைக்க தேiவாயன நடவடிக்கை எடுப்பேன் என்றும் அது தனது நோக்கங்களுள் ஒன்றாக இருப்பதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்கள், உறுப்பினர்கள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபேகுணவர்தன, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா, கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திஸாநாயக்க உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.





Post a Comment