ஏறாவூரில் திருமண உணவு நஞ்சாகியதில் 40 பேர் வைத்தியசாலையில் அனுமதி

                            (ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
ஏறாவூரில் உள்ள திருமண வீடொன்றில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட பலர், உடல் உபாதைக்குள்ளாகிய நிலையில், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று (26) ஞாயிற்றுக்கிழமை காலை வரை சுமார் 40 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூர், பள்ளியடி வீதி திருமண வீடொன்றில் வெள்ளிக்கிழமை (24) உணவு உண்டவர்களே, தற்போது உடல் உபாதைக்குள்ளான நிலையில், வைத்தியசாலைக்கு வந்து கொண்டிருப்பதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், எவரும் கவலைக்கிடமான நிலையில் சுகவீனமடையவில்லை என்று, பொறுப்பு வைத்திய அத்தியட்சகர் எஸ்.ஏ.சி.எம். பழீல் தெரிவித்தார்.

இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.