( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
வரட்சியினால் பாதிக்கப்பட்டு, தமது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேச விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று நிந்தவூர் அட்டப்பள்ளம் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத் தொகுதியில் இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜ.எல்.சாறூன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி றிபா உம்மா ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ரூபாய். 25 இலட்சம் பெறுமதியான உலருணர்வுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
இப்பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 1015 குடும்பங்களுக்கு சுமார் ரூபாய் 25 இலட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.திரவியராஜ், கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.றபீக் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment