கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண்னொருவர் கைது

                         (அப்துல்சலாம் யாசீம்)
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஆலங்கேணி பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண்னொருவரை நேற்று (19) காலை 9.00 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அங்கு சென்று சோதனையிட்ட போது 02 லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச்சேர்ந்த பாலச்சந்திரன் கோகிலா (29 வயது) எனவும் தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட பெண்ணை திருகோணமலை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.