அட்டாளைச்சேனையில் ஹக்கீமுக்கு எதிராக கறுப்புக் கொடி கடையடைப்பு




ஏ.எல்.றியால்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் எதிர்வரும் 16ம் திகதி அட்டாளைச்சேனைக்கு வருவதை கண்டித்து கறுப்புக் கொடி மற்றும் கடையடைப்பு ஒன்றுக்கு தயாராகுமாறு அட்டாளைச்சேனை இளைஞர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

அட்டாளைச்சேனைக்கு உரித்தான தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்காமல் தனது குடும்ப உறவுகளுக்கு வழங்கி எம் மண்ணை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் ரவுப் ஹக்கீம் நமது மண்ணுக்கு வருவது நியாயமா? என அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

ஒவ்வொறு வருட புனித நோன்பு காலத்தில் இப்தாரின் பெயரால் பிரதேசங்களுக்கு வரும் ஹக்கீம் நோன்பை திறந்து விட்டு பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

கடந்த வருடத்திலும் அதற்கு முன்னைய இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீம் புனித நோன்பை திறந்து விட்டு மக்கள்முன் உரையாற்றும் போது அட்டாளைச்சேனைக்கு எம்.பி வழங்குவேன் என சத்தியம் செய்தார்.

இப்படியான நிலையில் எதிர்வரும் 16ம் திகதி மீண்டும் நமது அட்டாளைச்சேனை மண்ணுக்கு பொய் மூட்டைகளைக் கொண்டு வருவதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.

நமது உள்ளுர் அரசியல் வாதிகள் தமது சுயநலன்களுக்காக ரவுப் ஹக்கீமுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள்.


எனவே உள்ளுர் சுயநல அரசியல் வாதிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நமது மண்ணுக்கான போராட்டத்தை இளைஞர்களான நாம் கையில் எடுப்போம்.இதற்காக நாம் துணிந்து வீதிக்கிறங்குவோம் எமது எதிர்கால சந்ததினருக்காக. வர்த்தக சமூகம் எமது இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.