( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை சார்பாகக் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி ஆகிய பதக்கங்களை வென்று தாய்நாட்டிற்கும் பிறந்த மண்ணிற்கும் பெருமை சேர்த்த நிந்தவூர் உமர்லெப்பை சியாட் முஹம்மட் எனும் விளையாட்டு வீரனுக்கு அவரது சொந்த ஊரான நிந்தவூரில் நேற்று (10) மாலை பெருவரவேற்பு அளிக்கப்பட்டது.
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், குண்டு போடுதலில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று நிந்தவூரிற்கு முதன் முறையாக வருகை தந்த வெற்றி வீரன் உமர்லெப்பை சியாட் முஹம்மட் ஐ பொது மக்களும், விளையாட்டுக் கழகங்களும், அல்-அஸ்றக் தேசியக் கல்லூரி மாணவர்களும் இணைந்து வரவேற்று, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
நிந்தவூர் பிரதேச செயலக முன்றலில் வரவேற்கப்பட்ட வெற்றி வீரன் உமர்லெப்பை சியாட் முஹம்மட் கென்ற் விளையாட்டுக் கழகத்தினராலும், பொது மக்களாலும் வரவேற்கப்பட்டு, திறந்த வாகன ஊர்திகள் மூலம் பிரதான வீதிவழியே நிந்தவூர் சிறிகொத்தா (ஐக்கிய தேசிய கட்சி காரியாலயம்) வரை சென்று, தியேட்டர் வீதியினூடாக இரண்டாம் குறுக்குத் தெரு வழியே ஊடறுத்து, இறுதியாக நிந்தவூர் ஜூம்ஆப்பள்ளி வாசலடியில் முடிவுற்றது.
இவ்வூர்வலத்தில் நிந்தவூர் கென்ற் விளையாட்டுக் கழகத் தலைவரும், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான எம்.எல்.எம்.றபீக், அல்-அஷ்றக் தேசியக் கல்லூரி அதிபர் எஸ்.எம்.ஜாபீர், மதீனா விளையாட்டுக் கழகத் தலைவர் ஏ.எம்.அன்சார், ஜாபீர் கபூர், அம்பாரை மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.அனஸ் அஹமட் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இவ்வூர்வலத்தில் கலந்து கொண்டனர்.






Post a Comment