-இக்பால் அலி & தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி
தோப்பூரில் உள்ளைக் குளத்திற்கு குளிக்கச் சென்ற 14 வயதுடைய மாணவியை முதலை பிடித்து உயிரிழந்த சம்பவம் (11) இன்று காலை 9.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
தோப்பூர் அல்சிபா வித்தியாலயத்தில் 8 வகுப்பில் கல்வி பயிலும் முஹமட் நிஸ்பரா என்ற மாணவியே இந்தச் சம்பவத்தில் உயிரழந்தவராவர்.
தனது மைத்தினியுடன் குளித்துக் கொண்டு வெளியேறும் வேளை, சிறுமியின் காலில் முதலை கவ்விக் கொண்டதையடுத்து, மைத்தினி போராடியும், சிறுமியை, முதலை, குளத்துக்குள் இழுத்துச் சென்றுள்ளது.
பின்னர் ஊரார் இணைந்து, குளத்தில் நடத்திய தேடுதலில் குறித்த சிறுமி ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார். ஜனாஸா , தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது .
மேலதிக விசாரணைகளை தோப்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment