ஒலுவில் பிரதேச மக்களுக்கு மாகாண அமைச்சர் நஸீரின் நிதிஒதுக்கீட்டில் பல்வேறு உதவிகள்.


                 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
ஒலுவில்; பிரதேச மக்களுக்கு மாகாண அமைச்சர் நஸீரின் நிதிஒதுக்கீட்டில் பல்வேறு உதவிகள வழங்கும் நிகழ்வு நேற்று ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. 

மின்னா முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வு பிரதேச சபை முன்னாள் உபதவிசாளர் ஏ.எல்.அமானுல்லாஹ் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், நன்நடத்தை, சிறுவர் பராமரிப்பு மற்றும் சமூகசேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மது நஸீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் ஒலுவில் பிரதேசத்திலுள்ள 100 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அவர்களது முச்சக்கர வண்டிகளுக்கான டயர்களும், குடிசைக் கைத்தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கான பாத்திரங்களும், மற்றும் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.{hபீர், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் யூ.எம்.வாஹீட், பொது மக்கள் தொடர்பு அதிகாரி எம்.ஐ.எம்.நயீம் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இன்றைய நிகழ்வில் சுமார் ரூபாய் 18 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மாகாண அமைச்சர் நஸீர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'நம்மவர்களில் சிலர் இருக்கின்றனர். சும்மா கிடைப்பதென்றால் ஏன் நாமும் இரண்டு டயர்களைப் பெற்றுக் கொள்வோமே என நினைப்பதுண்டு. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு நம் எல்லோரிடத்திலும் வரவேண்டும். எதிலும் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொண்டால் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும்' எனத் தெரிவித்தார்.











Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.