தூங்கிக்கிடக்கும் விளையாட்டு கழகங்களும், விளையாட்டு குழுவும்.

                                -நிந்தவூர் எஸ்.ஸாபீ-

அன்பின் விளையாட்டு கழகங்களின், தலைவர்கள் , நிர்வாக சபை உறுப்பினர்கள், விளையாட்டு வீர்களே, நமக்கு தேவையாக இருந்த விளையாட்டு மைதானம் தற்போது எம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக கைநழுவி போவதை உங்களுக்கு தெரியப்படுத்தலாம் என்று நினைக்கின்றேன்,

மைதானத்தின் தேவை அறிந்து முன்னாள் நிந்தவூர் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம் ஏ எம் தாஹிர் அவர்கள் இந்த மைதானத்தை புனரமைத்து பாவனைக்கு உகந்ததாக ஆக்கியிருந்தார், அதற்கு அவர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு நிதிகளை பெற்று மைதானத்தினை செப்பனிடுவது முதல் பார்வையாளர் அரங்கு வரை அமைத்து கொடுத்தார், பின்னர் பிரதேச சபை கலைக்கப்பட்டதும் பல்வேறு செயற்பாடுகள் நடைபெற்று கொண்டு வருகின்றது.

* தவிசாளர் தாஹிர் அவர்கள் விளையாட்டு பிரதி அமைச்சரிடம் வேண்டிக்கொண்டதற்கு இணங்க மண்போட்டு நிரப்புதல் " Land Filling" காக சுமார் 30 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. 
இதற்கு நடந்தது என்ன ????????

* தவிசாளர் தாஹிர் அவர்கள் பதவியில் இருந்த போது 'நெல்சிப் " திடத்தின் கீழ் மைதானத்திற்கு சிறந்த நவீன பார்வையாளர் அரங்கு அமைக்க நடவடிக்கை எடுத்திருந்தார், பின்னர் பிரதேச சபை கலைக்கப்பட்டதும் தற்போது அதன் நிலை என்ன ???

போன்ற கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான விளக்கங்களை விளையாட்டு கழகம், வீரர்களுக்கும், ஊரில் உள்ள புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்களுக்கு தெரிவிக்கலாம் என்று நினைக்கின்றேன்.

முதலில், 30இலட்ச்சம் ரூபா பணம் தொடர்பாக.!
********************************
இந்த பணம் விளையாட்டு அமைச்சினால் நிந்தவூர் பிரதேச செயலாளர் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது , இதை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சுகாதார பிரதி அமைச்சர், தனது அரசியல் அதிகாரத்தினை பயன்படுத்தி வவ்வளோடையில் ஒரு புதிய மைதானம் அமைக்க இந்த பணத்தினை மாற்றி தற்பொழுது வேலைகள் நடைபெறுகின்றது.ஏற்கனவே இதற்கு நிதி வழங்கப்பட்டு மண் போடுவதாக கூறி அதை இடையில் விட்டார்கள்.
ஏன் அமைச்சர் இவ்வாறு செய்யவேண்டும் ??? பொது மைதானத்தினை முதலில் தவிசாளர் புனரமைத்ததனாலா???

வாவ்வளோடை மைதானம் அமைக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை...! அப்படி மைதானம் அமைக்க வேண்டும் என்றால் அமச்சர் தனது செல்வாக்கை பயன்படுத்தி கோடிக்கணக்கில் நிதிகளை கொண்டு வந்து செய்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். அதைவிடுத்து அறையும் , குறையுமாக இருக்கும் இந்த பொது மைதானத்தினை புறக்கணித்து வேறு ஒன்றுக்கு செலவிடுவது அவரின் அரசியல் அறியாமையே, ஏனெனில் பொது மைதானம் இன்னும் பூரணமாக நிரப்பப்படாமல் உள்ளது. பிரதியமைச்சர் ஒரு நிகழ்வில் அதிதியாக இருக்கும் போதே பேய்த மழையில் மைதானம் நீரில் மூழ்கி இருந்தது. அப்பொதாவது அவர் சிந்தித்து நிதி ஒதிக்கிருக்க வேண்டும், அதையும் கூட அவர் செய்யவில்லை.... 
வந்த பணத்தினையும் பயன்படுத்த விட வில்லை எது என்ன அரசியல் தர்மம் ????

உங்கள் கட்சியின் உட்பூசலுக்கு வீரர்களும் , விளையாட்டு மைதானமுமா பழி?? நாளை உங்கள் கட்சியின் தலைவர் உங்கள் இருவரையும் அழைத்து சமாதானம் பேசினால் நீங்கள் இருவரும் ஒன்றாகுவீர்கள். அதன் பின் பாதிக்கப்படுவது யார் ?????

எமது பொது மைதானம் கூடியது 6 / 7 மாதங்களுக்குத்தான் பயன்படுத்துவார்கள், 9 ஆம் மாதம் - 3 மாதம் வரை நீரில் மூழ்கி "படகு ஓட்ட போட்டிதான் " நடத்த கூடிய நிலயில் இருக்கும். இது அமைச்சருக்கும், அவர் பின்னால் இருக்கும் அரசியல் ஜானிகளுக்கும் விளங்குவதில்லையா ????

மேலும் இவ்வாறு வந்த பணம் வேறு மைதானத்திற்கு செல்ல போகின்றது என்பதை அறிந்து மர்சூக் JP Mahroof Ahamed Marzook JP அவர்களின் தலைமையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டு ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருந்தது. அதில் முக்கிய விளையாட்டு கழகங்களின் தலைவர்கள் , செயலாளர்கள் பங்கு பற்றி இருந்தார்கள், இவர்கள் எடுத்த நடவடிககை என்ன ???? தர்காலிகமாக கடித தலைப்பு ஒன்றை தயாரித்து , குறித்த பணம் பொது மைதனத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று கையொப்பமிட்டு பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டும் இருந்ததாக மர்சூக் தெரிவித்தார், (பிரதி இணைக்கப்பட்டுள்து) அப்போ விளையாட்டு கழகங்களின் தேவகைளயும், வேண்டுதலையும் பிரதி அமைச்சர் நிராகரித்து இருக்கின்றார், அவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு விளையாட்டு கழகங்கள் பாடுபட்டதற்கு அவர்கொடுத்த சிறந்த பரிசு இதுதானா???

இது பற்றி பேசுவதற்கு நியமித்தவர்கள் தற்போது வாய் அடைத்தது போய் இருப்பதற்கு காரணம் என்ன?? இவர்களுக்கு தேர்தலில் "சீட்" தருவது என்று சொல்லையும், மௌனித்திட்டு விட்டார்களா?? அவர்களுள் சிலர் அடுத்தமுறை தேர்தல் கேட்பதற்க்காக பிரதி அமைச்சரை எதிர்த்து எப்படி வெற்றி பெறுவது என்று பயத்தில் மௌனமாக உள்ளார்..! ஒரு சில கழகங்கள் மர்சூக் வேற பார்ட்டி ஆளாம் என்று, இவர் சொல்லி கேட்குறாயா என்று இருக்காங்க. இப்படி எல்லாரும் தாழ்வுச்சிக்கல் மன நிலையில் இருந்தால் எவ்வாறு ஊரையும், விளையாட்டையும் முன்னேற்றுவது??? இவர்கள்தான் எதிர் காலத்தில் மக்களுக்கு சேவை செய்ய தம்மை விளம்பரம் படுத்திடுகின்றவர்கள் ??? நல்லா இருக்கும்.! பதவிகளுக்கு, பணத்திற்கும் சோரம் போகும் கழகங்களையும் , தலைவர்களையும், மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். 
"வளரும் பயிரை முளையில் தெரியும். " தெரிந்து கொள்ளுங்கள்...!!!!

இப்பொழுது புது கதை ஒன்று உலாவுகின்றது இருக்கிற எல்லாத்தையும் உடைத்து , மீண்டும் தோண்டி , சிறுவர் பூங்கா , கலாசார மண்டபம் வரையில் மைதானத்தை அகற்றி செப்பனிடுவதாக அமைச்சர் அறிவித்ததாக அவரது அரசியல் ஜானிகள் சொல்லுகின்றார்கள், சரி அவ்வாறு செய்ய தேவைப்பாடு இருந்தாலும், அது சார்த்தியமாகுமா ?? தலைவர் அஷ்ரப் அவர்கள் அடிக்கல் நட்ட கலாசார மண்டபம் 16 வருடம் கழிந்தும் இன்னும் பூரண படுத்தப்பட வில்லை. இதையும் தோண்டினா எங்கே போய் விளையாடுவது ?? 10 வருடங்கள் முன் ஆரம்பிக்கப்பட்ட பொது மைதானமே இன்னும் பூரணம் அடைய வில்லை. அப்படி இருக்கும் பொது அங்கெ (வவ்வால் ஓடை) போய் எப்படி விளையாடுவது ? ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்திகள் முற்றுப் பெறாத நிலையில் மீண்டும் ஒரு முற்றுப்பெறாத அபிவிருத்தி தேவைதானா?? ? இது சாத்தியமா ? கழகங்களே சிந்தியுங்கள். !!!!!!
எமது விளையாட்டை அழிக்கின்ற செயலாகவே நான் கருதுகின்றேன்.

"" கேற்றா சொல்ராங்க அது சேர்மன் அமைச்ச,, நாங்க அமைக்கம் பாருங்க என்று வெட்டி பேச்சு பேசுறாங்க.
."" அவங்கட உம்மா உம்மா ,மற்றவண்ட உம்மா சும்மாவா "" ?????

ஒருவிடயம் ; வாவ்வால் ஓடையில் அமைய பெற்றுள்ள "பேட்மின்டன்ட் போர்ட்" சரியாக அமைய பெற்றுள்ளதா?? அதை இன்னும் விரிவாக அமைத்து இருந்தால், கபடி, நெட்போல், போன்ற விளையாட்டுக்களையும் விளையாடி இருக்க முடியும், அது கூட முறையாக திட்டம் இடாமல் செய்துள்ளார்கள், இது பற்றி விளையாட்டில் பாண்டித்தியம் பெற்ற கழகங்கள் மௌனமாக உள்ளது கவலை. வெறுமனே சேர்மனை "மட்டம் தட்ட வேண்டும்", என்பதர்கா நீங்கள் செய்யும் செயலால் பாதிக்கப்படுவது நங்கள் தான். இவ்வாறு செய்வதால் சேர்மனுக்கும் ஒன்னும் குறைய போவதில்லை. அவருக்கு வாக்களத்து வாங்க இதை சொல்லவில்லை. இதுதான் உண்மை. அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.

உங்களின் அரசியல் இருப்பிற்க்காக வீரர்களின் உரிமையில் விளையாடாதீர்கள். இந்த பதிவை கூட நீங்கள் எவ்வாறு நோக்கினாலும் பிரச்சினை இல்லை. ஆனால் விளையாட்டு கழகங்கள் ஒன்று சேராதவரை இவர்கள் நம்மை அவர்களின் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு, கைவிட்டு செல்லும் நிலை ஏற்படும். எனவே அரசியல் சாரதா ஒரு விளையாட்டு குழுவையா அமைக்க எந்த கழகம் முன்வரும், சொல்லுங்கள்... எங்கள் கழகம் டைட்டன்ஸ் தயார். நீங்கள் தயாரா ???? அரசியல் சாராத விளையாட்டு குழு அமைக்கப்படல் வேண்டும்.

இந்த பதிவை 100 பேர் பார்த்து , 40 பேர் கமெண்ட் பண்ணி, 150 பேர் லைக் பண்ணிட்டு போரத்திற்கு பதிவிடவில்லை. தீர்வு கிடைக்க அனைத்து விளையாட்டு கழகங்களும் ஒற்றுமைப்படல் வேண்டும்.

சிந்தியுங்கள்..!

இந்த விளக்கம் சுமார் 30 இலட்சம் ரூபா மைதானத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த பணத்திற்கு நடந்த சம்பவம் மற்றும் பின்னணி.

அடுத்தது பார்வையாளர் அரங்கு தொடர்பாக எதிர் பாருங்கள்...!! காத்திருங்கள்...!!
முழு தகவல்களும் பெறப்பட்டுள்ளது..



Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.