-வரவு செலவுத் திட்டத்தில் ரூ.200 மில்லியன் ஒதுக்கீடு-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நிந்தவூர் ஆதார வைத்தியசாலையினைப் புதிய, பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கான முததற்கட்டப் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்;பட்;டது.
முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளரும், நிந்தவூர் நலன்புரிச் சபைத் தலைவருமான எம்;.எச்.யாக்கூப் ஹசன் தலைமையில் இடம் பெற்;ற இந்நிகழ்வில் சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, முதற்கட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல், நிந்தவூர் ஆதார வைத்தியசாலை அத்தியேட்சகர் திருமதி.பேபி சஹீலா இஸ்ஸதீன், சுகாதார பிரதியமைச்சரின் ஆலோசகரும், அட்டாளைச்சேனை ஆயூர்வேத ஆதார வைத்தியசாலை அத்தியேட்சகருமான கே.எல்.நக்பர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேரித்தம் பழம், கற்கண்டு போன்ற இனிப்புப் பண்டங்கள் வழங்கப்பட்டன.
2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இவ்வைத்தியசாலை அபிவிருத்திப் பணிகளுக்கு ரூ.200 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்;;:- 'நமது புதிய வைத்தியசாலையைப் பொருத்தமான இடத்தில் அமைப்பதற்கு நிதி ஒதுக்கித்தந்ததோடு, இதனை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய எமது சுகாதார அமைச்சர் றாஜித சேனாரத்ன அவர்களுக்கும், கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் நான் இந்த ஊர் மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் இப்பிரதேச வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன' எனத் தெரிவித்தார்.
Post a Comment