-தமிழ் தேசியக் கூட்டமைப்பு
எம்.பிக்கள்,
ஆண்மீக அருளாளர்கள்
பங்கேற்பு-
( ஏ.எல்.ஏ.றபீக்
பிர்தௌஸ் )
நிந்தவூர் ஸ்ரீ முத்துமாரியம்மன்
ஆலய அறநெறிப்பாடசாலைக்
கட்டிடத் திறப்பு
விழாவும், அகில
இலங்கை இந்து
மாமன்றத்தின் அனுசரணையில் சிவநெறி அறப்பணி மன்றம்
நடாத்தும் சிவதொண்டர்
மாநாடும் இன்று நிந்தவூர்
ஸ்ரீ முத்துமாரியம்மன்
ஆலய வளாகத்தில்
இடம் பெற்றது.
சிவநெறி அறப்பணி மன்றத்
தலைவர் சைவவித்தகர்
யோ.கஜேந்திரா
தலைமையில் இடம்
பெற்ற இந்நிகழ்வுகளில்
பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், கவீந்திரன்
கோடீஸ்வரன், க.துரைரெட்ணசிங்கம் ஆகியோர் பிரதம
அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆன்மீக அருளாளர்களாக ஸ்ரீலஸ்ரீ
சோமசுந்தர தேசிய
ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சிவஸ்ரீ.க.வைத்தீஸ்வர குருக்கள்,
சிவஸ்ரீ.மு.நல்லதம்பி குருக்கள்,
லண்டன் சைவ
முன்னேற்றச் சங்க அறங்காவலர் சிவத்திரு.சூ.பாலசிங்கம் உள்ளிட்ட
அகில இலங்கை
இந்து மாமன்றத்தின்
பிராந்திய இணைப்பாளர்கள்
பலரும் இதில்
கலந்து கொண்டு
சிறப்பிதனர்.
அறநெறிப்பாடசாலைக் கட்டிடத்தை அமைப்பதற்கு
லண்டன் சைவ
முன்னேற்றச் சங்கத்தின் நிதியுதவியைப் பெற்றுக் கொடுத்து
உதவிய லண்டன்
சைவ முன்னேற்றச்
சங்க அறங்காவலர்
சிவத்திரு.சூ.பாலசிங்கமும், அவர்
பாரியாரும் இந்நிகழ்வில் பொன்னாடை போற்றி, வாழ்த்துப்
பத்திரங்கள் வழங்கி முதன்மை அதிதிகளாகக் கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து பிரதம அதிதிகள்,
ஆன்மீக அருளாளர்கள்
போன்றோரும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.
அம்பாரை மாவட்டப் பாராளுமன்ற
உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இங்கு கருத்துத்
தெரிவிக்கையில்:- 'தமிழ் மக்களுக்கு
நல்லதீர்வு கிடைக்கக் கூடாது. அவர்கள் சமாதானமாக
வாழக் கூடாது.
மீண்டும் இந்த
நாட்டில் ஒரு
யுத்தம் வரவேண்டும்.
தமிழ் மக்கள்
நிம்மதியாக வாழக்கூடாது என நினைத்து, செயற்படும்
மட்டக்களப்பு மங்களா விகாராதிபதியான பௌத்த பிக்குவின்
செயற்பாடுகள் வெறுக்கத் தக்கவை. கண்டிக்கத்தக்கவை. எனவே தமிழ் மக்கள் மிகவும்
விளிப்புடன் செயற்படவேண்டும். மிகவும் அமைதியாகவிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரின்
வழிகாட்டலில் கொண்டுவரப்படும் சமாதானத்தை
உறுதி செய்கின்றவர்களாக,
செயற்படுத்துகின்றவர்களாக
இருக்கவேண்டிய ஒரு கடைசிக்
காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை நினைவுபடுத்துகின்றேன்' எனத் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற
உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் இங்கு கருத்துத்
தெரிவிக்கையில்;:- 'நாம் இப்போது
ஒரு புதிய
பாதையை நோக்கிச்
சென்று கொண்டிருக்கிறோம்.
இந்த நாட்டில்
எமக்கு எதிரும்
புதிருமாக செயற்பட்டுக்
கொண்டிருந்த பெரிய கட்சிகளான ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க ஆகியன
இப்போது ஒன்றிணைந்து
எமது பிரச்சினைகளுக்கு
தீர்வு காண
முன்வந்துள்ளது. இதே வேளை முஸ்லிம் சகோதரர்களும்,
ஏனைய கட்சிகளும்
முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படுகின்றனர்.
இவை எமது
பிரச்சினைகள் தீர்வதற்கான ஒரு ஒளிக்கீற்றாகத் தெரிகிறது.
எனவே இச்சந்தர்ப்பத்தில்
எமக்குத் தேவை
எம்மிடையே ஒற்றுமை!'
எனத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற
உறுப்பினர் சீ.யோகஸ்வரன் இங்கு கருத்துத்
தெரிவிக்கையில்:- 'இந்த நாட்டில்
அதி உச்சமாக
மதிக்கப்படுவது பௌத்த ஆதிக்கம். இன்று புதிதாக
வரையப்படும் அரசியல் யாப்பிலும் பௌத்த ஆதிக்கத்தைத்தான்
அவர்கள் கொண்டு
வருகின்றார்கள். இதுதான் நல்லிணக்கத்திற்குக்
குந்தகமான நிலையைத்
தொற்றுவிக்கின்றது. நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாக
இருந்தால் பெரும்பாண்மையாக
இருக்கின்ற மதம், சிறுபாண்மைச் சமயங்களை மதிக்கவேண்டும்.
இந்த நிலை
இந்த நாட்டிலே
இல்லை. இதற்குச்
சிறந்த உதாரணம்
அண்மையில் மட்டக்களப்பிலுள்ள
ஒரு பிக்கு
நடந்து கொண்ட
விதம். இந்த
நிலை மாற்றப்பட
வேண்டும். எல்லா
மதங்களும். இனத்தவரும் மதிக்கப்படும் நிலை உருவாக
வேண்டும்' எனத்
தெரிவித்தார்.
Post a Comment