நீங்கள் உண்மையில் இடையன் அல்ல, இடையன் போல் நடிக்கிறீர்கள் , தலைவன் போல் நடிப்பது மாதிரி



மனிதர்களை உங்களால் மேய்க்க முடியாது என்று தெரிந்து நீங்கள் மந்தைகளை மேய்க்க ஆரம்பித்திருப்பதை மிகவும் பாராட்டுகிறேன். கையும் வாயும் மூக்கும் முழியும் இருக்கும் மானிடப்பிறவிகளுக்கே உங்கள் பேச்சு புரியவில்லை என்றிருக்க வாய் பேசத்தெரியாத இந்த அப்பாவி மந்தைகளுக்கு உங்கள் பேச்சுப் புரியும் என்றா நினைத்தீர்கள்?

மனிதர்களுக்குப் பயன்படாத உங்கள் மரம் மந்தைகளுக்கு உணவாகவாவது போகட்டும் என்று நீங்கள் அவைகளுக்கு உங்கள் கைகளாலேயே ஊட்டும் உங்கள் மனிதாபிமானத்தையும் நான் பாராட்டுகிறேன்.

நீங்கள் உண்மையில் இடையன் அல்ல.இடையன் போல் நடிக்கிறீர்கள்.தலைவன் போல் நடிப்பது மாதிரி.

மந்தை மேய்ப்பவன் REEBOK shoe போட்டுக்கொண்டு மேய்ப்பதில்லை.ஆடுகளுக்குப் பொருத்தமான இடையன் தேவை.நீங்கள் மனிதர்களுக்குப் பொருத்தமான தலைவன் அல்ல என்று புரிகிறது.

உங்கள் கவனம் ஆடுகளை விட்டு வேறு எங்கோ திரும்பியிருக்கிறது.ஆனால் உங்கள் கை உணவு கொடுப்பது மாதிரி நடிக்கிறது.மக்களை கவனிப்பது போல் நடித்துக்கொண்டு பதவியின் பக்கம் திரும்பும் உங்கள் கவனம் போல.

நீங்கள் மலைக்கல்லில் உயர உட்கார்ந்து கொண்டு மரத்தைக் காட்டி ஆடுகளை உங்கள் காலடியில் வரவழைக்கிறீர்கள்.அவை இடரி விழுந்தாலும் உங்களுக்குக் கவலை இல்லை.ஆடுகளை காலடிக்கு வரவழைப்பவன் அல்ல நல்ல இடையன்.ஆடுகளின் கால்தடம் தேடி அலைபவன் தான் நல்ல இடையன்.

வெள்ளைத் தோல் போர்த்திய ஆடுகளுக்கு கறுத்த ஆடை பூண்ட இடையன் பொருத்தமானவனல்ல. வயலில் உழுது கஞ்சி குடிக்கும் எங்களுக்கு மலைநாட்டில் கொழுந்து பறித்து ஏற்றுமதி செய்யும் நீங்கள் பொருத்தமில்லாதவர் போல. 

கவனம் உங்கள் ஆதவன் பாட்டைக் கொண்டு கட்டிப்போடுவதற்கு அவை ஒன்றும் மனிதர்கள் அல்ல.மந்தைகள்.குத்திக் குதறிவிடும் கவனம்.
ராசி முகம்மத் ஜாபிர்

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.