தனது மனைவியை தீ வைத்து கொலை செய்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த பெண்ணின் கணவரை சம்மாந்துறை பொலிஸார் இன்று (16/04/2016)சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
தனது மனைவி மீது தாக்குதல் நடத்தி அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீயிட்டு கொழுத்தியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே சந்தேக நபர் கைது செயயப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் தீக்காயங்களுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகைளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment