அமெரிக்கா, புளோரிடாவில் மிருககாட்சிசாலை பராமரிப்பாளரை அங்குள்ள மலாயன் புலி ஒன்று கடித்து கொன்றது.
சம்பவத்தின் போது, ஸ்டேசி கொன்வைசர் என்ற அந்த 38 வயது மிருக காட்சி சாலை பராமரிப்பாளர் உரை நிகழ்த்துவதற்குத் தயார் நிலையில் இருந்தார்.
கடந்த 3 ஆண்டுகளாக அந்த மிருக காட்சி சாலையில் பணியாற்றி வந்த பராமரிப்பாளரை அப்புலி பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்ட இடத்தில் தாக்கியுள்ளது.
புளோரிடா மிருககாட்சி சாலையில், புளோரிடா, தென் மற்றும் வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மடகாஸ்கார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மிருகங்கள் உள்ளன.

Post a Comment