இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து



T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

இந்தியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்றச் செல்லும் இலங்கை அணியின் வீரர்களுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

ஜனாதிபதி இலங்கை கிரிக்கட் அணியினரை இன்று (8) மாலை கொழும்பு குதிரைப்பந்தையத் திடலில் சந்தித்தார். இச்சந்தர்ப்பத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களும் உடனிருந்தார்.

‘ஒரே அணி – ஒரே தேசம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை இலங்கைக் கிரிக்கட் அணியினரின் உலகக்கிண்ணப் போட்டிகளில் கலந்து கொள்கின்றார்கள். இதைமுன்னிட்டு ‘ஒரே அணி – ஒரே தேசம்’ எனும் வாக்கியம் பொறிக்கப்பட்ட இலட்சினை இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவினால் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது.

‘ஒரே அணி – ஒரே தேசம்’ (One Team – One Nation) உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கமும் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. (ஸ)

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.