அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாக அமைய வேண்டும்





- Nகுபுபு தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான்-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்; )
'கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட அரசியல் தீர்வுகள் அரசியல்வாதிகளுக்கு புதிய புதிய பதவிகளையும் வரப்பிரசாதங்களையும்பெற்றுக்கொடுத்திருக்கின்றதே தவிரஇ அவை மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளை தீர்ப்பதாக அமையவில்லை. எனவேதான் இதற்போது உத்தேசிக்கப்படும் அரசியல் தீர்வு என்பது அரசியல்வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாக அமையவேண்டும் என்பதில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்' எனபொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் திருகோணமலை மாவட்டசெயற்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் அண்மையில் மூதூரில்நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதேNகுபுபுயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: 

'கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தொடரும் இன முறுகலும்அதனோடு தொடர்புபட்ட தேசியப் பிரச்சினையும் நமது நாட்டைசின்னாபின்னப்படுத்தியிருக்கிறது. மாத்திரமின்றி நாட்டு மக்களைஇலங்கையர் என்ற பொது அடையாளத்திருந்தும் தூரமாக்கி இனஇமொழிஇ மத அடிப்படைகளில் பிரித்தும் வைத்திருக்கிறது.

பயங்கரவாதம்இ தோற்கடிக்கப்பட்டு இனவாதம் அடக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிலவும் அரசியல்சூழ்நிலையானது நாட்டின் தேசிய பிரச்சினைக்கான ஒரு நிரந்தரஅரசியல் தீர்வினை கொண்டு வருவதற்கு ஏற்ற மிகப் பொருத்தமானசூழ்நிலையாகும். இந்த இறுதி சந்தர்ப்பத்தினை தவறவிட்டுவிடக்கூடாது என்பதனை சகல தரப்பினரும் புரிந்து வைத்திருக்கின்றார்கள். 

அரசியல் தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்ற பல்வேறுவிவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த 35 வருடங்களில்பலவகையான அரசியல் தீர்வுகள் கொண்டு வரப்பட்டன. மாவட்டஅபிவிருத்தி சபைஇ மாகாண சபைஇ மற்றும் வடகிழக்கிற்கானஇடைக்கால நிர்வாகம் எனப் பல்வேறு வடிவங்களிலான தீர்வுகள்கொண்டு வரப்பட்டன. மிக முக்கியமாக தற்போதுநடைமுறையிலிருக்கும் மாகாண சபைக் கட்டமைப்புகளைச்சொல்லலாம். 

13ஆவது திருத்தத்தின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குபகிர்ந்தளிக்கப்பட்ட பல்வேறு அதிகாரங்கள் இருக்கின்றன. அங்குமக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினால் நிர்வாகம்நடாத்தப்படுகின்றது. வடக்கில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்முதலமைச்சராக இருக்கும் நிலையில் கிழக்கில் முஸ்லிம் ஒருவர்முதலமைச்சராக இருக்கிறார்.கடந்த 8 வருடங்களாக கிழக்கு மாகாணசபை இயங்கி வரும் அதேவேளை கடந்த இரண்டரை வருடங்களாகவடக்கு மாகாணசபை இயங்கி வருகிறது. அங்கு பல புதிய புதியஅரசியல் வாதிகள் தோன்றியிருக்கிறார்கள். பலவகையானபதவிகளையும்இ அதிகாரங்களையும் வரப்பிரசாதங்களையும் அவர்கள்பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்இ இந்த இரண்டு சபைகளுக்கும்ஊடாக மக்களின் பிரச்சினைகள் எந்தளவு தூரம் தீர்க்கப்பட்டுள்ளன..?

மீள் குடியேற்றம்இ புனர்வாழ்வுஇ வாழ்வாதாரம்இ காணி விவகாரங்கள்இவேலைவாய்ப்புஇ பொருளாதார அபிவிருத்தி என்று பல விடயங்களைஅம்மக்களின் அன்றாடப் பிரச்சினைகளாக பட்டியலிடலாம்.இதில் காணி மற்றும் புனர்வாழ்வு போன்ற அதிமுக்கியபிரச்சினைகளுக்காவது திருப்பதிப்படும் படியான தீர்வுகள் எதுவும்கிடைத்திருக்கிறதா..? 'இல்லை' என்பதனை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

அப்படியென்றால் அரசியல் வாதிகளின் பதவிப்பிரச்சினைகளுக்குதீர்வுகளைக் கொடுத்த மாகாண சபைகள் ஏன் மக்களின்பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கொடுக்கவில்லை..?

அரசியல் தீர்வினைப் பேரம் பேசுகின்ற அரசியல் வாதிகளும்இகட்சிகளும் தமது எதிர் கால அரசியல் நலன்களைமுதன்மைப்படுத்தியே தீர்மானங்களை மேற் கொள்கின்றனர்.மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளும் நியாயமான எதிர்பார்ப்புகளும் இறுதிக் கட்டங்களில் புறந்தள்ளப்படுகின்றன.

எனவேதான்இ நமக்குக் கிடைத்திருக்கும் இந்த இறுதிசந்தர்ப்பத்திலாவது கொண்டு வரப்படும் அரசியல் தீர்வு என்பதுஅரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும். இது தொடர்பில் நாமெல்லோரும்முன்னெச்சரிக்கையுடன் விழிப்புடனும் செயற்பட வேண்டும்.'

இந்நிகழ்வில் Nகுபுபு யின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட்அவர்களும்இ தலைமைத்துவ சபை உறுப்பினர்களான னுச. முஆ சாகீர்இசகோ. சிராஜ் மஸூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு Nகுபுபுயின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சபையின்செயலாளர ஆயுஊஆ ஜவாஹிர் அம்பாரை மாவட்ட செயற்குழுஉறுப்பினர் சட்டத்தரணி றிபாஸ்இ மற்றும் உவைஸ் பாவா உட்படதிருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தசெயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.