Articles by "World News"

Showing posts with label World News. Show all posts




எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் 
எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.


காலிமுகத்திடலில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் மக்கள் கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய அவர்,


தேசிய மக்கள் சக்தியின் சார்பில் என்னை தலைமையேற்க தெரிவு செய்தமைக்காக முதலில் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 


அதுமட்டுமல்லாது என்மீதான நம்பிக்கையை வைத்து என்னை தெரிவுசெய்தமைக்கு ஏற்றால் போல் தேசிய மக்கள் சக்திக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் எப்போதும் நன்றியுடையவனாகவும், நம்பிக்கையை காப்பாற்றும் நபராகவும் இருப்பேன் என உறுதிமொழி வழங்குகின்றேன்.



இந்த ஜனாதிபதி தேர்தல் முகவும் முக்கியமான ஒரு கட்டத்தில் உள்ளது. இதில் இரண்டு தெரிவுகள் மக்களுக்கு உள்ளது. ஒன்று பழைய மோசமான ஊழல்வாத ஆட்சியை கொண்டு செல்லும் வழி. மற்றையது மக்கள் மகிழ்ச்சியாக, ஒற்றுமையாக வாழக்கூடிய வழியும் உள்ளது.


காலாவதியான மோசமான ஆட்சி வேண்டுமா அல்லது மக்கள் நம்பிக்கையுடன் கட்டியெழுப்பகூடிய வழி வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டிய முக்கிய சந்தியில் உள்ளீர்கள்.



இந்த நாட்டினை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. முதலில் மோசமான அரசியலை இல்லாது செய்ய வேண்டும். நாட்டினை கட்டியெழுப்பும் நோக்கம் கொண்ட தொழிலாளர், அதனை ஏற்றுகொள்ளும் மக்கள் கூட்டத்தை கொண்டே முன்னெடுக்க வேண்டும்.



 இதில் முதல் கட்டம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும், இந்த நாட்டில் அரசியல் ஊழல், மோசடி, கப்பம், அடக்குமுறை என்பவற்றை கையாளும் நபர்களின் கைகளில் இன்று அரசியல் அதிகாரங்கள் உள்ளது. இவற்றை மாற்றியமைக்க வேண்டும்.


இந்த நாசகார ஊழல் மிக்க அரசியலுக்கு அப்பால் தூய்மையான உண்மையான மக்கள் நல அரசியலை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை இதில் நாம் முன்வைக்கின்றோம். 


இந்த நாட்டின் வளங்கள் அனைத்துமே கைப்பற்றப்பட்டுள்ளது.


சமூகமாக இன்று நாட்டு பிளவுபட்டுள்ளது. சமூகங்களை பிரித்து வைத்துள்ளனர். பிளவுபட்ட சமூகத்தை கொண்டு நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது. ஜாதி, மதம், இன பிளவுகளில் இருந்து விடுபட்டு ஐக்கிய நாட்டினை உருவாக்கும் சூழலை நாம் உருவாக்கிக்கொடுப்போம்.



எமது எதிர்கால சந்ததியினருக்கான உறுதியான நாட்டினையும் எமது இளம் சமுதாயத்தினருக்கு நிருவாகத்தை கையில் கொடுக்க வேண்டும். எமது நாட்டில் அப்பாவி மக்கள் வேதனையுடன், வருத்ததுடனும் வாழ்கின்றனர். ஆனால் இந்த வேதனைகளால் மாத்திரம் மாற்றத்தை உருவாக்கிவிட முடியாது. அதனையும் தாண்டி உறுதியான மன நிலையுடன் மக்கள் கூட்டத்தை உருவாக்க வேண்டும். 


அதற்கான நம்பிக்கையை இன்று காலிமுகத்திடலில் கூடியுள்ள மக்கள் கூட்டத்தின் மூலமாக எமக்கு கூறியுள்ளனர்.
இதுவரை காலமாக ஏனைய கட்சிகளை ஆதரித்த மக்கள் அனைருக்கும் நாம் இப்போது அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் எம்முடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிப்போம். போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம்.


அதற்கான இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றினைவோம். இனியும் மக்கள் மௌனிகளாக இருந்தால் இந்த நாட்டின் பாதையை மாற்றியமைக்க முடியாது. 


ஆகவே மக்களுக்கு இருக்கும் மிகவும் முக்கியமான சந்தர்ப்பம் இது. இதில் மக்கள் சகலரும் சரியான தீர்மானத்தை எடுத்து எம்முடன் கைகோர்க்க அலைப்புவிடுகின்றேன் என்றார்.

சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

                                        ( நமது விசேட நிருபர்  )
நிந்தவூரில் 10 வயது சிறுமி தூக்கிட்டுத் தொங்கியதாக, தொங்கியவரின் அம்மம்மாவினால் தெரிவிக்கப்படுகிறது. 

நிந்தவூர் - 21, தியேட்டர் வீதியைச் சேர்ந்த சூர்தீன் சப்னா( வயது 10) என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக தூக்கில் தொங்கி மரணத்தைத் தழுவியவராவார்.

இவரது சடலம் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தெரியவருவதாவது:- 
மருதமுனையைச் சேர்ந்த சூர்தீன் என்பவருக்கும், நிந்தவூரைச் சேர்ந்த அலியார் ஜவாஹிறா என்பவருக்கும் மகளாகப் பிறந்தவரே மறணத்தைத் தழுவிக் கொண்ட சூர்தீன் சப்னா என்பவராவார்.

சூர்தீன் சப்னாவின் பிறப்பின் பின்னர் சூர்தீனும், ஜவாஹிறாவும் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து, சூர்தீன் வேறு திருமணஞ் செய்து கொண்டார். ஜவாஹிறா வெளிநாடு சென்று விட்டார். 
குழந்தை சூர்தீன் சப்னாவை இரண்டு மாதக் குழந்தையாக இருக்கும் போது அவரது அம்மம்மா இப்றாலெவ்வை ஆசியா உம்மா(65) எடுத்து வளர்த்து வந்துள்ளார். சப்னாவை வளர்த்ததோடு கல்வி கற்பிக்கவும் செய்துள்ளார். சப்னா இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையும் எழுதியுள்ளார்.

சம்பவ தினத்தன்று அம்மம்மா கொடுத்த அப்பத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு, பிள்ளளைகளுடன் விளையாடிக் கொண்டு நின்ற சப்னாவை சிறிது நேரத்தின் பின்னர் காணாது தேடியபோது வீட்டின் அறையினுள் தொங்கிய நிலையில் கண்டு, மீட்டு வைத்திய சாலைக்குக் கொண்டு வந்ததாக சப்னாவின் அம்மம்மா இப்றாலெவ்வை ஆசியா உம்மா வைத்தியசாலையிலும், ஊடகவியலாளர்களிடமும் தெரிவித்தார்.

பி.ப. 12.50 மணிக்கு வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்ட சடலம் தற்போது பி.ப.3.58 மணிவரை( செய்தி அச்சிக்குப் போகும் வரை பொலிஸ் விசாரணைகளின்றி வைத்தியசாலையிலேயே வைக்கப்பட்டுள்ளது).

இன்று இரவு 8.30 மணியளவில் சடலத்தைப் பார்வையிட்ட சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி சபீர் அஹமட் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
18.08.2019 இன்று!!! 
பிரேத பரிசோதனைக்காக நிந்தவூர் ஆதார வைத்தியசாலையிலிருந்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இரவு கொண்டு செல்லப்பட்ட சடலம் (இச் செய்தி அச்சுக்குப் போகும் வரை பி.பகல் 2.45 மணிவரை) பிரேத பரிசோதனைகள் இடம்பெறாத நிலையிலேயே சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஏ.நவ்பர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.





                             -இக்பால் அலி-
சிங்கள அரசர்களுடைய ஆ;ட்சிக் காலத்தில்  முஸ்லிம்களைப் பற்றி  
அவர்களுடைய பாதுகாப்பு விடயத்தில் மிகுந்த நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள்.

அந்த நம்பிக்கையை நாம் இலங்கையர் என்ற வகையில் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து தொடர்ந்து கட்டி எழுப்ப வேண்டும்.

எனினும் அரசியல் நோக்கத்திற்காக முஸ்லிம்களை வேறுபடுத்த சிலர் ;முயற்சி செய்கின்றனர். 

இவை எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து அதை தோல்வியடையச் செய்வோம் என்று பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பறகஹதெனிய தேசிய பாடசாலையில் 12 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு கட்டிடத் தொகுதிகளும் மாணவர்களின் பாவனைக்காக பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்களினால் திறந்து கையளிக்கும் வைபவம் அதிபர் சபருல்லாக்கான் தலைமையில் இடம்பெற்றது 
அவர் அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் 

உண்மையிலேயே பறகஹதெனிய ஒரு பழைமைவாய்ந்த கிராமம்.  அரசர்கள் முஸ்லிம் மக்கள் வெளிநாடுகளில் இருந்து வந்த சமயங்களில் இங்கே அழைத்து வந்து குயேற்றினர். 

சிங்கள அரசர்கள் பறகஹதெனியவில் முஸ்லி;களைக் குடியேற்றியதற்கான காரணம் கலகெதரைக்குச் செல்லும் வீதியை பாதுகாப்பதற்காகும். அதே போன்று கலதெதர கிராமத்திலும் முஸ்லிம் கிராமங்கள் தோற்றம் பெற்றன. 

சிங்கள அரசர்கள் மத்தியில்  முஸ்லிம்கள் எந்தவிதமான பிரச்சினைகளுமின்றி சிங்கள அரசர்களைப் பாதுகாப்பார்கள்  என்ற மிகுந்த நம்பிக்கையிருந்தது. 1815 ஆண்டில் இடம்பெற்ற கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கூட எந்த முஸ்லிமும் கையொப்பம் இடவும் இல்லை. சம்மந்தப்படவும் இல்லை. 

அந்த வகையில்  பழைமைவாய்ந்த வரலாறு ஒன்று இருக்கிறது. அந்தப் பாதையினை  நாம் முன்னேற்ற வேண்டும்.

தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக முஸ்லிம்களை வேறுபடுத்தி சிலர் முயற்சி செய்கின்றனர். எந்த சமயத்திலும் எந்தக் குழுவிலும் பிழைகள் செய்கின்ற மரணிக்கின்ற அடிப்படைவாதிகள் இருக்கின்றார்கள். அதை தடுக்க முடியாது. அவற்றை தெரிந்து கொண்டு தான் அதை இல்லாமற் செய்ய முடியும்.

சிங்கள அரசர்கள் அனைத்து மக்களும்; பாதுகாப்பு வழங்கினார்கள். எல்லோரும் ஒன்றிணைந்து நாம் இலங்கையர் என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் நாம் முகம் கொடுத்து அதனை தோல்வியடையச் செய்ய வேண்டும்.
பறகஹதெனிய பாடசாலைக்கு வரும் போது விசேடமாக கல்வி அபிவிருத்தி தொடர்பாக  கூடுதல் கவனம் செலுத்தி கல்வி மட்டத்தை அதிகரிக்க வே;ண்டும் என்று தெரிவித்திருந்தேன். 

பாடசாலை வளங்கள் கட்டிடங்கள் வழங்கினாலும் கல்வி மட்டத்தை அடைந்து கொள்ள முடியாது என அப்பொழுது தெரிவித்தேன். இன்று நான் வரும் போது கட்டிட வளங்களும் கிடைக்கப் பெற்று கல்வி மட்டமும் முன்னேற்ம் கண்டுள்ளது என்று கூற விரும்புகின்றேன். வைத்தியத் துறைக்கும் பொறியயியல் துறைக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்ப்ட்டுள்ளனர்.

நாங்கள் இவை பற்றி எல்லோரும் பெருமைப்பட வேண்டும். அதற்காக அயராது உழைத்த ஆசிரியர் குழாத்துக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

இனிவரும் காலங்களில் இப்பாடசாலையில்  கல்வி வளர்ச்சி; தொகை அதிகரிக்குமே தவிர குறையாது. தற்போது இருக்க வேண்டி நடவடிக்கைகள் இவையே. 12 கோடி பெறுமதியான  பாடசாலைக்கான கட்டிடங்கள் திறந்து வைக்கப்ப்ட்டுள்ளன. விசேடமாக பாடசாலை அபிவிருத்தி செய்யப்படுவதுடன் இந்தப் பிரதேச அபிவிருத்தி செய்யப்படும். கல்வி இல்லையென்றால் எங்களால் வாழ்க்கை நடத்த முடியாது. கல்வியின் மூலம தான் ; எதிர்காலத்தை நோக்கிச் செல்ல முடியும். தங்களுடைய பாடசாலையிலும் கல்வி வளர்ச்சி உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இதில் பாடசாலை நிர்வாகக் கட்டிடம், தொழில் நுட்ப கூடம்,  அதிபர் விடுதி, நவீன வசதிகளுடனான தேநீர்ச் சாலை ஆகியவற்றுக்கான புதிய நான்கு கட்டிடடங்கள்  மாணவர்களின் பாவனைக்காக பிரதமரினால் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இராஜாங்க அமைச்சர் ஜே. சி அலவத்துவெல, மாவத்தகம பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் முஹம்ட ரிபாழ் உட்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.







                                   -எப்.முபாரக் -
போதைப்பொருள் தொடர்புடைய வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட கைதியொருவர்
திருகோணமலை சிறைச்சாலையில் நேற்றிரவு (17) உயிரிழந்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு - 12 மாட்டிஸ்லேன், இலக்கம் 6 வசித்து வந்த ஜயசிங்க ஆராய்ச்சிலாகே ஜகத் சின்தக (49 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது - கொழும்பு, கெசல்வத்த பொலிஸாரினால் கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பட்டது நிலையில் அவரை மூன்று மாதத்திற்கு கடூழிய சிறை தண்டனை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து திருகோணமலை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றிரவு (17) உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறைக்கைதியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தமை தொடர்பில் சட்ட வைத்திய பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இருந்தபோதிலும் தனது தந்தை உயிரிழந்தமை தொடர்பில் தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவரின் மகன் பிரதீப் நிரோசன பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த 12ஆம் திகதி தந்தையை கைது செய்யும்போது கொழும்பு-கெசல்வத்த பொலிஸார் தந்தையை தாக்கியதாகவும் இதனால் தந்தைக்கு ஏதாவது ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் நிலவி உள்ளதாகவும் மகன் பொலிஸாரிடம் தெரிவித்தார்.


    -பாட்டனின் அசமந்தமே காரணம்! பாட்டன் பொலிசாரால் கைது!!

 ( நமது விசேட நிருபர் )
நிந்தவூர்,  வவ்வாலோடை பிரதேசக் கடலில்,  நீரில் மூழ்கி ஒன்றரை வயதுக் குழந்தையொன்று பரிதாபகரமாக மறணித்துள்ளது.

நிந்தவூர்-09, 3ம் குறுக்குத் தெருவில் வசித்து வரும் இல்லியாஸ்(வயது 32)-நிசா( வயது 30)  தம்பதிகளின் குழந்தையான இல்லியாஸ் முஹம்மட் ஆதில்( வயது-ஒன்றரை) என்பவரே அண்மையில் கடலில் மூழ்கி மரணித்தவராவார்.

இதுபற்றித் தெரியவருவதாவது:- 
இன்று காலை 8.00 மணியளவில் குழந்தையின் பாட்டனான உதுமான் கலந்தர் ( பீத்ர இளையதம்பி ) என்பவர் தனது பேரரான முஹம்மட் ஆதிலை அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றுள்ளார். பேரனைக் கடற்கரை மணலில் விளையாட விட்ட இவர், தனக்கு வந்த தொலைபேசி அழைப்புக்குப் பதில் கூறிவிட்டுத் தனது பேரனைப் பார்த்துள்ளார். பேரனைக் காணவில்லை.

அங்குமிங்கும் தேடிவிட்டு, வீட்டிலுள்ளவர்களுக்கு இவ்வதிர்ச்சிச் செய்தியைச் சொல்லியுள்ளார். உடனே வீட்டிலுள்ளவர்கள் எல்லோரும் பதறியடித்துக் கொண்டு கடற்கரைக்கு ஓடிவந்த போது, அங்குள்ள மீனவர்களால் கடலில் மிதந்து வந்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டடுள்ளதைக் கண்டுள்ளனர். 
குழந்தை காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 800 மீற்றர் தூரத்திற்கு அப்பாலே குழந்தையின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


குழந்தையின் தந்தை ஒரு மாதத்திற்கு முன்னர் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கிற்குச் சென்றுள்ளார். தாய் எட்டு நாட்களுக்கு முன்னர் இரண்டாவது குழந்தையைப் பிரசவித்துள்ளார். இந்நிலையிலெயே முதலாவது குழந்தையான ஆதில் பரிதாபகரமாக மறணித்துள்ளார். இப்பரிதாபச் சம்பவம் பாட்டனின் அசமந்தப் போக்கினால் ஏற்பட்டுள்ளது என்று ஊரவர்களும், உறவினர்களும், பொலிசாரும் தெரிவிக்கின்றனர்.

தற்போது குழந்தையின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பாட்டனான உதுமான் கலந்தர் சம்மாந்துறைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஏ.நவ்பர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்காலத்தில் பொழுதை இன்பமாகக் கழிப்பதற்கென்று அதிகமானவர்கள் கடற்கரைப் பிரதேசத்திற்கு வருகை தருகின்றனர். இவர்களில் ஆண், பெண், சிறுவர்கள், வயோதிபர்கள், வாலிபர்கள் என்று எல்லோருமே கடற்கரைக்கு வருகின்றனர். அதிலும் பெண்களும், பாலர்களும் அதிகமாக கடற்கரைப் பிரதேசத்தை நேசிக்கின்றனர். 

இவ்வாறு வருபவர்களில் அதிகமானோர் சிறுவர்களையும், குழந்தைகளையும் கடற்கரை மணலில் விளையாட விட்டு விட்டு, அவர்கள் கையடக்கத் தொலை பேசிகளில் மூழ்கி விடுகின்றனர். தொலைபேசி உரையாடல்களின் இன்பம் மழலைகளைக் கூட மறக்கச் செய்து விடுகிறது.

இவ்வாறானவர்களின் செயல்களால் தான் அண்மையில் நிந்தவூர் பிரதேசத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை பட்டப்பகலில் கடலில் மூழ்கி மறணித்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. இது போன்ற பல நிகழ்வுகள் நாட்டின் பல பிரதேசங்களிலும் அடிக்கடி நிகழ்ந்து வருவதை நாம் அறிந்துள்ளோம். 

எனவே அன்புக்குரிய பெற்றோர்களே, அன்பர்களே, நண்பர்களே இனிவரும் காலங்களிலாவது, கடற்கரைப் பிரதேசத்திற்கு சிறுவர்கள், குழந்தைகளைக் கொண்டு வருவோர் தயவு செய்து தன்னை மறந்து தொலைபேசி உரையாடல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் அவ்வாறான இன்பகரமான உரையாடல்களில் ஈடுபடுவதற்காக கடற்கரைப் பிரதேசத்தை நாடுவோர் தயவு செய்து குழந்தைகளைக் கடற்கரைப் பிரதேசத்திற்குக் கொண்டு வரவேண்டாம் என உங்களை வினயமாக வேண்டுகிறோம்.







மனநிலை பாதிக்கப்பட்ட தாய் மருத்துவமணையில்! பொலிஸ் விசாரணை!!

( நமது விசேட நிருபர் )
நிந்தவூர்-14ம் பிரிவு, மௌலானா வீதியில் வசித்து வந்த மனநிலை பாதிக்கப்பட்ட தாயொருவர் தான் பெற்ற, ஒன்பது மாத இரட்டைக் குழந்தைகளை ஒரே நேரத்தில் வெட்டிக் கொலை செய்த பரிதாப நிகழ்வொன்று அண்மையில் நிந்தவூரில் இடம் பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது:-

கிண்ணியாவைச் சேர்ந்த கியாவுடீன் அஸ்மத் அனீசா என்பவரே இவ்வாறு தான் பெற்ற இரட்டைக் குழந்தைகளை பரிதாபகரமாகக் கொன்றவராவார்.

கிண்ணியாவைச் சேர்ந்த அனீசா(வயது-26) நிந்தவூரைச் சேர்ந்த அலியார் சியாதுல்ஹக்(வயது-36) என்பவரை கடந்த 04 வருடங்களுக்கு முன்னர் திருமணஞ் செய்து, மணமகன் வீட்டில்(நிந்தவூரில்) வசித்து வந்துள்ளனர்.

இவர்களுக்குப் பிறந்த சியாதுல் ஹக் உபைத்துல்லாஹ்(வயது-02) ஆண் குழந்தையொன்று கடந்த இரு வருடங்களுக்கு முதல்(25.11.2017) வீட்டில் பாவிக்கப்பட்டு வந்த சலவை இயந்திரத்திற்குள் விழுந்து மறணமடைந்துள்ளார்.

இந்நிகழ்வால் மனநிலை பாதிக்கப்பட்ட அனீசா, இரு தடவைகள் தன்னைத் தானே கொல்லும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவரைக் காப்பாற்றி, அதற்கான சிகிச்சைகளை வழங்கியதன் மூலம் அனிசாவைக் காப்பாற்றித் தேற வைத்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

அதன் பின்னர் அனீசா-சியாதுல் ஹக் என்பவர்களுக்கு 'அயினா-செயினப்' எனும் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். ஒன்பது மாதங்களைப் பூர்த்தி செய்து, பத்தாம் மாதத்திற்குள் கால்பதிக்கும் இக்குழந்தைகள் இருவருமே இன்று காலை அத்தாயினால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். வீட்டில் உள்ளவர்கள் தூக்கத்தில் இருந்த போது, குழந்தைகள் இருவரையும் குளியலறைக்குள் கொண்டு சென்று, கொன்றிருக்கிறார் என பொலிசார் தெரிவிக்கின்றனர். சடலங்கள் இரண்டும் குளியலறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மீண்டும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள தாயை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டுள்ளதாகவும் எமது விசேட பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.






                 (ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
மட்டக்களப்பு மத்தி  வலயக்கல்விப்  பணிப்பாளராக  மருதமுனையை சேர்ந்த Dr. எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா நியமிக்கப் பட்டுள்ளார் .
கிழக்கு மாகாண கல்வி  அமைச்சின் செயலாளர்  ஐ.ஜி .கே. முத்துபண்டாவினால் இவருக்குரிய நியமனக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடந்த 13.11.2018 இலிருந்து செயற்படும் வண்ணம் இந்த நியமனம் வழங்கப் பட்டுள்ளது. இன்னிலையில் இன்று (23) தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளாா்.
அரச கல்வி நிருவாக சேவை தரம்- 11 அதிகாரியான டொக்டர்  எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா  1964-09-18 ஆம் திகதி மருதமுனையில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியிலும் கற்றுக் கொண்டார்.
1984 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்ட Dr.  எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா அவர்கள் தனது முதல் நியமனத்தை பண்டாரவளை நீட்வூட் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பெற்றுக் கொண்டார். 1989 ஆண்டு அட்டாளைச் சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை பூர்த்தி செய்தார். இதனை தொடர்ந்து 1990 அண்டு தான் கல்வி கற்ற அல்-மனார் மத்திய கல்லூரிக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார். மிக நீண்ட காலமாக ஆசிரியர் சேவையை மேற்கொண்ட இவர் 2006 ஆம் ஆண்டு தனது கல்விமாணி பட்டத்தை தேசிய கல்வி நிறுவகத்தில் பூர்த்தி செய்து கொண்டார்.
2007 ஆம் அண்டு இலங்கை கல்வி நிருவாக சேவைக்குள் உள்வாங்கப்பட்ட இவர் 2007 தொடக்கம் 2009 ஆம் ஆண்டுவரை கல்முனை கல்வி வலையத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றினார். பின்னர் 2009 ஆண்டு அல்-மனார் மத்திய கல்லூரிக்கு ஆதிபராக நியமனம் பெற்றார். இவரது 5 ஆண்டு அதிபர் சேவைக் காலத்தில் அல்மனார் மத்திய கல்லூரி பல் வேறு வளர்சிப் படிகளை தொட்டது எனலாம்.
2014 ஆண்டு கல்விமுதுமாணி பட்டத்தை பூர்த்தி செய்து கொண்ட இவர்  சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் நிருவாக பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளராக 2014 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் கல்முனை கல்வி வலயத்தின் நிருவாகம் மற்றும் முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இன்னிலையிலேயே தற்போது மட்டக்களப்பு மத்தி   வலயக்கல்விப்  பணிப்பாளராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வித்துறைக்கு அப்பால் பல்வேறு சமூக நிறுவனங்களிலும் பொறுப்புள்ள பதவிகளிலிருந்து தனது சமூகத்திற்கு சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2007 ஆம் ஆண்டு முதல் அம்பாறை மாவட்ட விசேட தேவையுடையோர் வலையமைப்பின் தலைவராக இருந்து சேவையாற்றி வருகின்றார். மருதமுனை அபிவிருத்தி மக்கள் கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளராக இருந்து மருதமுனையின் நெசவுத் தொழிலுக்கு உயிரூட்டியுள்ளார். st.Johns Ambulance உதவி மாவட்ட ஆணையாளராகவும் கல்முனை ஆயுள்வேத பாதுகாப்புச் சபையின் தலைவராகவும் இருந்து சேவையாற்றும் இவர் இன்னும் பல்வேறு சமூக அமைப்புக்கள், விளையாட்டுக்களகங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார்.
ஆயுள்வேதம் மற்றும் கொமியோபதி வைத்தியரான Dr.  எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா அவர்கள் மருத்துவத்துறையில் DHMS(SL),PIMP(Ind),DAMP(Ind),RAMP(SL) ஆகிய பட்டங்களையும் பூர்த்தி செய்துள்ளார்.
மருதமுனை செய்யது உமர் மௌலான செய்யது முகம்மது மௌலானா, முஹம்மது அப்துல்லாஹ் ஜமாலியா உம்மா ஆகியோரது 4வது புதல்வரான இவர் மருதமுனையை சேர்ந்த செய்னுலாப்தீன் றிஸ்வானாவை கரம் பிடித்துக் கொண்டார்.
Dr.  எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா அவர்களுக்கு 2 பிள்ளைகள், தனது மூத்தமகள் உமர் மௌலானா அப்றோஸ் இந்தியா கல்கத்தா மேற்கு பல்கலைக்கழகத்தில் கொமியோபதி விசேட வைத்திய அறுவைச் சிகிச்சை பட்டத்தை அண்மையில் பூர்த்தி செய்துள்ளார். இந்தத் துறையில் கிழக்கிலங்கையில் முதல் பட்டதா ரி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இரண்டாவது மகன் உமர் மௌலானா அப்ஸர் லபீப்  மௌலானா தற்போது வர்தகப் பிரிவில் கல்வி கற்று வருகின்றார்.
வலயக்கல்விப்  பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள Dr.  எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா அவர்களை எமது திங்கள் செய்திப் பிரிவு வாழ்த்துவதில் பெருமிதம் அடைகின்றது. இன்னும் இன்னும் Dr.  எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா அவர்களின் சேவை இந்த மண்ணுக்கு கிடைக்க வேண்டும் எனப் பிராத்திக்கின்றோம்.



குவைத் நாட்டில் உள்ள எண்ணெய் கிணறு நிறுவனத்துக்கு சொந்தமான பஸ் எதிர்திசையில் வந்த பஸ் மீது இன்று நேருக்குநேர் மோதிய விபத்தில் 7 இந்தியர்கள் உள்பட 15 பேர் உயிரிழ்ந்தனர். #Kuwait #BusAccident

குவைத் நாட்டில் அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய கிணறுகளில் தனியார் நிறுவத்தை சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமித்து கச்சா எண்ணெய் உற்பத்தி தொழிலை செய்து வருகின்றனர்.

அவ்வகையில், புர்கான் டிரில்லிங் என்ற நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை இன்று ஏற்றிச்சென்ற பஸ் எதிர்திசையில் வந்த பஸ்சின் மீது பயங்கரமாக நேருக்குநேர் மோதியது.

இந்த விபத்தில் 7 இந்தியர்கள், எகிப்து நாட்டை சேர்ந்த 5 பேர், பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த இரு இந்தியர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



ஒடிசா மாநிலத்தில் தாயுடன் உறங்கிய 16 நாள் ஆண் குழந்தையை தூக்கிகொண்டு ஓட்டம்பிடித்த குரங்கு அருகில் கிணற்றில் வீசியதால் இன்று அந்த குழந்தை பிணமாக கண்டெடுக்கப்பட்டது. #Monkey

ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்துக்கு கிராமப்பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

நேற்று இங்குள்ள டலபட்ஸா என்ற கிராமத்தில் தனது தாயின் அருகில் படுத்து தூங்கி கொண்டிருந்த 16 நாள் ஆண் குழதையை ஒரு குரங்கு தூக்கிச் சென்றது. குழந்தையின் அழுகுரலை கேட்டு பதறித்துடித்த அந்தப் பெண் இதைக்கண்டு பீதீயில் கூச்சலிட்டார்.

கூச்சல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இதுதொடர்பாக வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். குரங்கின் கையில் சிக்கியுள்ள குழந்தையை உயிருடன் மீட்க வனச்சரக அதிகாரி தலைமையில் 30 பேர் கொண்ட 3 தனிப்படையினர் அமைக்கப்பட்டது.

அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அந்த குழந்தையால் பெரிதாக குரல் எழுப்பி அழ முடியாததால் குரங்கு அந்த குழந்தையை எங்கே வைத்துள்ளது? என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்நிலையில், அருகாமையில் உள்ள கிணற்றில் இன்று குழந்தையின் பிரேதம் மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் குதித்து பிரேதத்தை மீட்டனர்.

இந்த சம்பவம் டலபட்ஸா கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

                             ( சௌத்துல் உம்மத் )
இன்று(26) பி.பகல் 2.30 மணியளவில் நிந்தவூர் 2ம் குறுக்குத் தெரு வீதியில் ( றுவில் ஹாட்வெயாருக்குப் பக்கத்தில் அமைந்துள்ள பலசரக்குக் கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கெஸ் சிலின்றறைத் திருடி எடுத்துச் செல்கையில் கடை உரிமையாளரால்(பழைய பொலிஸ்காரரால்) மடக்கிப் பிடிக்கப்பட்டார். 
இந்தப் படத்தில் காணப்படுபவரே திருடனாவார். இவர் கையும், களவுமாக மாட்டிக் கொண்டார். இவர் கொண்டு வந்த பெசன் மோட்டார் சைக்கிளும், 07 மோட்டார் சைக்கிள், ஆட்டோ போன்றவற்றின் திறப்புக்களும் காணப்பட்டன. இவரிடத்தில் ஆள் அடையாள அட்டையோ, சாரதி அனுமதிப் பத்திரமோ, மோட்டார் சைக்கிளுக்குரிய வேறு எந்தவொரு ஆவனங்களோ காணப்படவில்லை.
திருடன் தான் சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும், தனது பெயர் மஜீட் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இவ்விடத்தில் கூடிய எவரும் இவரது கதையை நம்பவில்லை. திருடனின் கைகளைக் கட்டி எடுத்துச் சென்று சம்மாந்துறைப் பொலிசாரிடம் ஒப்படைத்திருப்பதாக அறிய முடிகிறது. 
கடந்த ( 23) வெள்ளிக் கிழமை நிந்தவூர் ஜூம்ஆப்பள்ளி வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றும் திருட்டுப் போயிருந்தது.  இத்திருட்டிலும் மேற்படி திருடனிலேதான் சந்தேகம் மேலோங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது. மேலும் இத்திருடனுக்கும் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள வேறு திருடர்கள் பலருக்கும் சம்பந்தம் இருப்பதாக பிடிபட்ட திருடன் தெரிவித்துள்ளார்.
விரைவில் அவர்களும் கைது செய்யப்பட்டு சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனப்பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடந்த வாரம் ஒரு கொழும்புத் திருடனும் மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் உண்டியலை உடைக்கும் போது வசமாக மாட்டிக் கொண்டார்.
வெட்கம், சூடு, சுரணை இல்லாத மானங் கெட்ட பிறவிகள். ஊழைத்து வாழ வக்கற்ற அயோக்கியர்கள்! குடும்பத்தினரதும், சமூகத்தினதும் மரியாதைகளைப் போக்குகின்ற போக்கிரிகள். இவர்களுக்கு மக்கள் மத்தியில் வைத்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும். இது பிறர் சொத்தில் ஆசை கொள்ளும் அயோக்கியர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும் என மக்கள் பேசிக் கொண்டனர்.







மகாமங்கலேஷ்வர் மா பவானி என்ற திருநங்கை கின்னர் அகதா என்ற ஆன்மிக இயக்கத்தில் உறுப்பினராக உள்ளார்.

மனித நேயத்தை பரப்பும் கொள்கை கொண்ட இந்த இயக்கத்தில் திருநங்கை சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளார்கள்.

சிறுவயதிலிருந்து சமூகத்தில் பல்வேறு சவால்கள் மற்றும் இன்னல்களை சந்தித்தே இன்று தன்னம்பிக்கை மனிதராக பவானி வலம் வருகிறார்.

அவர் கூறுகையில், நான் பிறப்பதற்கு முன்னரே உத்தரபிரதேசத்திலிருந்து டெல்லிக்கு என் குடும்பம் குடிபெயர்ந்தது.

என் பெற்றோருக்கு என்னுடன் சேர்த்து மொத்தம் எட்டு பிள்ளைகள் உள்ளார்கள்.

மிகவும் வறுமையான குடும்பம் என்பதால் உணவுக்கே மிகவும் சிரமப்பட்டோம்.

எனக்கு பத்து வயதாக இருக்கும் போது நான் திருநங்கை என்பதை எனது உடல் உணர்த்தியது. என் அழகு காரணமாக என்னை பலர் தவறாக அணுகினார்கள். என் அழகே எனக்கு பிரச்சனையாகி போனதால் வீட்டை விட்டு 13 வயதில் வெளியேறினேன், பள்ளியிலும் இது போன்ற பிரச்சனை இருந்ததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தினேன்.

பின்னர் திருநங்கைகளுக்கான சமூகத்தில் இணைந்து செயல்பட தொடங்கினேன் என கூறியுள்ளார்.
பவானி சில காலம் இஸ்லாமியத்துக்கு மாறி ஷப்னம் பேகம் என பெயரை மாற்றி கொண்டார், ஹஜ் பயணத்துக்கு கூட சென்றுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு இந்துவாக மாறி ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Comments


முகநூல் ஊடாக ஏற்பட்ட காதலினால் 17 வயதான யுவதியொருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். உடவளவ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.

முகநூலின் ஊடாக காதல் வயப்பட்ட யுவதியொருவரை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவமொன்று பலாங்கொட, வெலிகெபொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உடவளவ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒரு மாத காலமாக முகநூல் ஊடாக இளைஞர் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். முகநூலில் இளைஞரின் புகைப்படங்களைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டே யுவதி காதல் வயப்பட்டுள்ளார்.

யுவதியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த 20ம் திகதி கொழும்பிற்கு வருமாறு யுவதிக்கு குறித்த இளைஞர் அறிவித்துள்ளார். இதனை நம்பிய யுவதி இளைஞரின் அழைப்பினை ஏற்று வீட்டாருக்குத் தெரியாமல் பஸ் மூலம் கொழும்பிற்கு சென்றுள்ளார்,

பஸ்ஸில் கொழும்பை நெருங்கும் போது தமக்கு இன்று அலுவலகத்தில் அதிக வேலைப்பளு காணப்படுவதாகவும் நண்பர் ஒருவர் அழைத்து வர வருவார் எனவும் இளைஞர் கூறியுள்ளார். அலுவலகத்தில் தாம் காருடன் காத்திருப்பதாகவும் பஸ் தரிப்பிடத்திற்கு வர முடியாது எனவும் குறித்த இளைஞர் யுவதியிடம் கூறியுள்ளார்.

பயம் கொள்ளத் தேவையில்லை, நண்பரின் தொலைபேசி இலக்கம் அங்க அடையாளங்கள் என்பனவற்றை யுவதிக்கு தொலைபேசி மூலம் குறித்த இளைஞர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் நண்பருடன் குறித்த யுவதி பஸ்ஸில் பயணித்துள்ளார். குளிர்பானம் ஒன்றையும் குடித்த யுவதி எழுந்து பார்க்கும் போது பலாங்கொடை பிரதேசத்தில் இருப்பதனை உணர்ந்துள்ளார்.

நண்பர் காலையில் வந்து அழைத்துச் செல்வார். நாம் இப்போது அக்காவின் வீட்டுக்குச் செல்வோம் என குறித்த யுவதியை வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்ற காதலனின் நண்பர், பாலியல் ரீதியாக யுவதியை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

வீட்டில் மகள் இல்லாத காரணத்தினால் பெற்றோர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். யுவதியும் தமக்கு நேர்ந்த கதி பற்றி பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் குறித்த யுவதி மருத்துவ பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகநூலில் கவர்ச்சியான வேறு ஒருவரின் புகைப்படத்தை பதிவேற்றி அதன் ஊடாக யுவதியை ஏமாற்றி, அவரை துஸ்பிரயோகம் செய்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. நண்பராகவும் முகநூலில் காதலனாகவும் தோன்றி யுவதியை ஏமாற்றியுள்ளார்.


டெல்லியின் ரோகினி என்ற பகுதியில் உள்ளது ஆத்யத்மிக் விஷ்வ வித்யாலயா என்ற ஆஸ்ரமம்.

இங்கு சாமியார் விரேந்திர தேவ் திக்ஷித் மீது பல பெண்கள் பாலியல் புகார் அளித்தும், போலீஸார் கண்டுகொள்ளவில்லை எனவும், பலர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சாமியாரின் பிடியில் பெண்கள் இந்நிலையில் இங்கிருந்து தப்பி வந்த 32 வயதான ஒரு பெண் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,

அந்த ஆஸ்ரமத்தில் 100க்கும் அதிக பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு சாமியார் விரேந்திர தேவ் திக்ஷித்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.

மகளிர் நல அமைப்பு அங்கு இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டு, யாரும் யாரிடமும் பேசக்கூடாது என கட்டளைகள் விதிக்கப்படுவதாகவும், பல பெண்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

என்னையும் பல முறை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இவரின் பேட்டியை தொடர்ந்து அரசு சாரா அமைப்பு அந்த ஆஸ்ரமம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

வழக்கை விசாரித்த இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் போலீசார் உதவியுடன் டெல்லி பெண்கள் ஆணையம் மற்றும் குழந்தைகள் நலக் குழு வெள்ளிக்கிழமையன்று சோதனையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறுகையில், ஆசிரமத்தில் இருந்து 41 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த ஆசிரமம் ஒரு குகை போல் இருக்கிறது.

இதற்கு திகார் சிறையின் நிலை பரவாயில்லை. இதற்குள்ளே செல்வது என்பது மிகவும் கடினமானது. ஒருவேளை ஒருவர் உள்ளே சென்று விட்டால், திரும்பி வருவது என்பது இயலாத ஒன்று. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி துன்புறுத்தப்பட்டுள்ளனர். ஆசிரமத்தின் உரிமையாளரான பாபா விரேந்தர் திக்சித் கைது செய்யப்பட வேண்டும் என கூறினார்.

டெல்லி உயர் நீதிமன்றம் ஆசிரமத்தின் நிறுவனரை ஜனவரி 4ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறியுள்ளது. ஆனால் சாமியார் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

இதனிடையே சாமியார் பாபா விரேந்தர் திக்சித், தன்னை பகவான் கிருஷ்ணர் போல சித்தரித்துக்கொண்டு 16000 பேரை திருமணம் செய்ய முயற்சி செய்ததாகவும், 10 பேரை தினசரியும் படுக்கைக்கு அழைப்பார் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.

சாமியாரின் கொடுமையை தாங்க முடியாமல் பல பெண்கள் குதித்து உயிரிழந்தனர் என்றும் பெண்கள் அச்சத்துடன் கூறியுள்ளனர். சாமியார் ஆசிரமம் பற்றி தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தற்போது வெளியிட்டுள்ளார்.

20 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்த நிலையில், பழச்சாறு பருகியபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார். ஜெ.வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், முதன் முதலாக தினகரன் தரப்பில் இருந்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு ஜெ. மாற்றப்பட்ட போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வீடியோ பற்றி பல சந்தேகங்கள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. அந்த வீடியோவில் உள்ள அறையின் பக்கவாட்டில் மரங்கள் தெரிகிறது. ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்தது அப்போலோ மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில். அங்கு அவ்வளவு உயரமான மரங்கள் கிடையாது என சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்த மரங்கள் போயஸ் கார்டனில் உள்ள ஜெ.வின் வீட்டில் இருக்கிறது. போயஸ்கார்டன் இல்லத்தில் முதலாம் மாடியில்தான் ஜெ.வின் அறை இருக்கிறது.


அதேபோல், அப்போலோ மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் அறையில் உள்ள அனைத்து பொருட்களிலும் அந்த மருத்துவமனையின் குறியீடு இருக்கும். ஆனால், வெளியாகியுள்ள வீடியோவில் அப்படி எதுவும் இல்லை. அதோடு, மருத்துவமனையில் ஜெயலலிதா மிகவும் சீரியஸான நிலையில்தான் அனுமதிக்கப்பட்டார் என அப்போலோ பிரதாப் ரெட்டியும் கூறியிருந்தார்.

எனவே, இந்த வீடியோ போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெ.விற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது எடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், போயஸ்கார்டனிலும் இதுபோன்ற சிகிச்சை செட்டப் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அப்போலோ மருத்துவமனையிலிருந்து போயஸ்கார்டனுக்கு அவரை கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதோ அல்லது அப்போலோ கொண்டு செல்லப்படுவதற்கு முன்பே அவருக்கு கார்டனில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதே இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என சிலர் கூறி வருகின்றனர்.

இதே சந்தேகத்தை விடுதலை சிறுத்தை தொல். திருமாவளவனும் எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெ.வின் மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகம் தற்போது வெளியான வீடியோவிலும் தொடர்கிறது.




                                       (Maalaimalar)
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது ஜெருசலேம் நகரை பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றியது.

இதனையடுத்து, 1980-ம் ஆண்டில் இருந்து அந்நகரை தன்னுடன் இணைத்து இஸ்ரேல் நிர்வகித்து வருகிறது. மேலும், அருகாமையில் உள்ள வெஸ்ட் பேங்க் பகுதியில் சில புதிய குடியேற்றங்களை இஸ்ரேல் அமைத்துள்ளது. எனினும், ஜெருசலேம் நகரம் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட நகராகவே கருதப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும் வெடித்தது. 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

மேற்கு ஆசிய நாடுகளான ஜோர்டான், துருக்கி, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிலும் போராட்டம் வெடித்தது. லட்சக் கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிரம்ப்பின் அறிவிப்பையடுத்து எதிர் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் (Organisation
of Islamic Cooperation (OIC) அவசர மாநாடு பாலஸ்தீனம் நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில் 13-12-2017 அன்று நடைபெற்றது. 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 57 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2008-ம் ஆண்டு நிலவரப்படி இந்நாடுகளில் வாழும் சுமார் 160 கோடி இஸ்லாமியர்களின் நலன்களை பாதுகாப்பதற்காகவும், சர்வதேச அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இஸ்தான்புல் நகரில் இன்று நடைபெற்ற இந்த அமைப்பின் அவசர மாநாட்டில் உரையாற்றிய பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேம் இருந்து வந்துள்ளது. இனி எப்போதும் அப்படியே இருக்கும். ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் தலைநகராக நீடிக்காத வரையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியோ, நிரந்தரத்தன்மையோ ஏற்படாது என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புக்கு பதிலடியாக கிழக்கு ஜெருசலேம் நகரில் புதிய தூதரகத்தை திறப்போம் என துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் இன்று தெரிவித்துள்ளார்.

கடவுளின் அனுமதிப்படியும், விருப்பத்தின்படியும் கிழக்கு ஜெருசலேம் நகரில் எங்கள் நாட்டு தூதரகத்தை திறப்பதற்கான நாள் நெருங்கி விட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.





(அபூ நமா)

இலங்கை தேர்தல் வரலாற்றில் 2018 ம் ஆண்டு உள்ளூராட்சி, நகர சபைத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வேட்பாளர்கள் அதிகமாக தேர்தலில் குதிக்கின்ற ஆண்டு என அடையாளப்படுத்த முடியும்.

சென்ற ஆண்டுகளில் மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்களின் அனுதாப ஆண்டில் பேரியல் அஷ்ரஃப் போன்ற பெண்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

பெண்கள் தமது கணவன்மார்களுக்காக வாக்கு கேட்கும் நிலை மாறி தனக்குப் போடுங்கள் என ஓட்டுப் பிச்சை கேட்கும் நிலை இவ்வாண்டு உருவாக்கப்படுள்ளது.

பரவா இல்லை. அது பொதுவாக ஒரு நாட்டின் ஜனநாயக அரசியல் நீரோட்டம் என நாம் வைத்துக் கொண்டு, இஸ்லாமிய விழுமியங்களைப் பின்பற்றும் முஸ்லிம் பெண்கள் இது தொடர்பாக பின்வரும் சட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

(1). அல்குர்ஆனில் 33 அத்தியாயத்தில் 33 வது வசனமாக இடம் பெறும் பின்வரும் இறைக்கட்டளை மீறப்படுகின்றதா இல்லையா என சிந்திக்க வேண்டும்.
وقرن في بيوتكن
பெண்களே உங்கள் வீடுகளில் தங்கி இருங்கள்.
ولا تبرجن تبرج الجاهلية الأولى
ஆரம்பகால ஜாஹிலிய்யாவில் போல் அலங்காரங்களோடு வெளியேறித் திரியாதீர்கள்.

மேற்படி குர்ஆனிய வசனம் பின்வரும் முக்கிய அம்சங்களைக் போதிக்கின்றது.

1) பெண்கள் வீட்டில் தங்கி வாழ வேண்டும்; இந்த வசனம் இறங்கியதும் நபித்தோழர்கள் அதை நடைமுறைப்படுத்துவதில் கவனமாக இருந்தார்கள்.

நபி ஸல் அவர்களின் மனைவி ஸவ்தா ரழி அவர்கள் கொழுத்த பெண்ணாக இருந்தார்கள். அவர்கள்தனது தேவைக்காக வெளியேறிச் செல்வதைக் கண்ட உமர் (ரழி) அவர்கள் ஸவ்தா ரழி அவர்களைக் கண்டித்தார்கள். அதனால் தமது அவசியத் தேவைகளின் நிமித்தமாக வெளியில் செல்ல அனுமதி கோரி வந்து நபி ஸல் அவர்களிடம்,
، فقالت: يا رسول الله، إني خرجت لبعض حاجتي، فقال لي عمر كذا وكذا، قالت: فأوحى الله إليه ثم رفع عنه، وإن العرق في يده ما وضعه، فقال: «إنه قد أذن لكن أن تخرجن لحاجتكن»

அல்லாஹ்வின் தூதரே! எனது சில தேவைகளுக்காக வெளியில் சென்றேன். எனக்கு உமர் ரழி அவர்கள் இப்படி இப்படி எல்லாம் சொன்னார் என முறையிட்ட போது, பெண்களே! உங்கள் தேவைக்காக வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் (ஆதாரம்: புகாரி)

2) பெண்கள் வெளியில் அலங்காரமாகத் திரிவது பிற ஆடவருக்கு பல்லிளிப்பது ஓட்டுக் கேட்டு ஊர்ஊராக அலைவது அனைத்தும் ஜாஹிய்யாலாக் காலப் பழக்கமாகும். எனவே இந்த இறைவசனத்தையும் கவனத்தில் செயலாற்றுவோம் .

(3) ஸஹாபாப் பெண்மணிகள் மஸ்ஜிதுன் நபவியில் பஜ்ர் தொழுகை முடிந்து செல்லும் போது எவ்வாறான அமைப்பில் காணப்பட்டனர் என்பதை பின்வரும் ஹதீஸ் பொடம் போடுகின்றது.

٥٧٨ – حدثنا يحيى بن بكير، قال: أخبرنا الليث، عن عقيل، عن ابن شهاب، قال: أخبرني عروة بن الزبير، أن عائشة أخبرته، قالت: «كن نساء المؤمنات يشهدن مع رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر متلفعات بمروطهن، ثم ينقلبن إلى بيوتهن حين يقضين الصلاة، لا يعرفهن أحد من الغلس»

முஃமினான பெண்கள் நபி ஸல் அவர்களோடு பஜ்ர் தொழுகையில் தமது நீண்ட முந்தானைகளை அணிந்லது கொள்வார்கள். தொழுகை முடிந்ததும் பின்னர் மீண்டும் திரும்பிச் செல்வார்கள். அதிகாலையின் இருளால் அவர்களை யாரும் அடையாளம் காண முடியாது என நபித் தோழர்கள் குறிப்பிடும் செய்தி புகாரியில் இடம்பெறுகிறது.

இது அந்தப் பெண்மணிகள் ஊர் சுற்றித்திரியும் குருவிகள் அல்லர் என்பதையும் வீட்டில் தங்கி ஒழுக்கமாக வாழ்ந்தவர்கள் என்பதையும் சுட்டிக் காட்டும் நிகழ்வாகும்.

குறிப்பு: அவசியபப்பட்ட தாதியர் சேவைக்காக போர்காலத்தில் கலந்து கொண்டனர் என்பது தேர்தலில் பங்குபற்றலாம் என்பதற்கு போதுமான பலமான ஆதாரம் கிடையாது.

இதே நிலைதான் ஆர்ப்பாட்டம் தொடர்பிலும் கொள்ள வேண்டும். ஆர்ப்பாட்டம் ஜனநாயக வழிமுறையில் அனுமதிக்கப்பட்டது. ஜிஹாத் அல்லாஹ் தனது தூதருக்கு சொன்ன கட்டளை. அதில் கலந்து கொள்வோருக்கு தேவைப்படும் மருத்துவ உதவி வேண்டப்பட்டதே அன்றி பர்ள் அல்ல.

: لما بلغ رسول الله صلى الله عليه وسلم أن أهل فارس، قد ملكوا عليهم بنت كسرى، قال: «لن يفلح قوم ولوا أمرهم امرأة»
நபி ஸல் அவர்களிடம் பாரசீக மக்களை கிஸ்ரா மன்னனின் மகள் ஆட்சி அதிகாரம் செலுத்துவதாகச் செல்லப்பட்ட போது எந்த சமூகத்தைப் பெண் பொறுப்பேற்று நடத்துகின்றாரோ அந்த சமூகம் ஒருபோதும் வெற்றி பெறமாட்டார்கள் . ((ஆதாரம் புகாரி)

அஷ்ஷெய்க் :M.J.M ரிஸ்வான் மதனி M.A.(Cey)




பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இருநாடுகளுமே அந்த நகரை தங்கள் நாட்டின் தலைநகரம் என்று அறிவித்துள்ளன. ஆனால், அதை பெரும்பாலான நாடுகள் ஏற்கவில்லை.

இந்த நிலையில் ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் என்பதை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாலஸ்தீனத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிலர் பலியானார்கள்.


இந்நிலையில், தற்போது பாலஸ்தீனத்தின் பல பகுதிகளில் மீண்டும் கலவரம் வெடித்தது. இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனம் மக்களுக்கும் இடையே நேற்று கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடந்தனர்.

இதுகுறித்து பாலஸ்தீனம் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் நாட்டின் எல்லையில் காசா ஸ்ட்ரிப் பகுதியில் 2 பேர் கொல்லப்பட்டனர். ஜெருசேலமின் வடக்கு பகுதியில் ஒருவர் இஸ்ரேல் ராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மற்றொரு நபர் ஜெருசேலத்தின் ராம்ல்லா நகரில் உள்ள சோதனைச்சாவடிக்கு அருகில் இஸ்ரேல் எல்லை பாதுகாப்பு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார் எனக் குறிப்பிட்டிருந்தது.

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் இஸ்ரேலுக்கு வருவதாக இருந்த நிலையில், கலவரம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனம் மக்களின் நிலைமை புரிகிறது. அவர்கள் சாதாரண நிலைக்கு வர கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்காக நாங்கள் காத்திருப்போம் என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.