இன்று(26) பி.பகல் 2.30 மணியளவில் நிந்தவூர் 2ம் குறுக்குத் தெரு வீதியில் ( றுவில் ஹாட்வெயாருக்குப் பக்கத்தில் அமைந்துள்ள பலசரக்குக் கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கெஸ் சிலின்றறைத் திருடி எடுத்துச் செல்கையில் கடை உரிமையாளரால்(பழைய பொலிஸ்காரரால்) மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
இந்தப் படத்தில் காணப்படுபவரே திருடனாவார். இவர் கையும், களவுமாக மாட்டிக் கொண்டார். இவர் கொண்டு வந்த பெசன் மோட்டார் சைக்கிளும், 07 மோட்டார் சைக்கிள், ஆட்டோ போன்றவற்றின் திறப்புக்களும் காணப்பட்டன. இவரிடத்தில் ஆள் அடையாள அட்டையோ, சாரதி அனுமதிப் பத்திரமோ, மோட்டார் சைக்கிளுக்குரிய வேறு எந்தவொரு ஆவனங்களோ காணப்படவில்லை.
திருடன் தான் சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும், தனது பெயர் மஜீட் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இவ்விடத்தில் கூடிய எவரும் இவரது கதையை நம்பவில்லை. திருடனின் கைகளைக் கட்டி எடுத்துச் சென்று சம்மாந்துறைப் பொலிசாரிடம் ஒப்படைத்திருப்பதாக அறிய முடிகிறது.
கடந்த ( 23) வெள்ளிக் கிழமை நிந்தவூர் ஜூம்ஆப்பள்ளி வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றும் திருட்டுப் போயிருந்தது. இத்திருட்டிலும் மேற்படி திருடனிலேதான் சந்தேகம் மேலோங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது. மேலும் இத்திருடனுக்கும் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள வேறு திருடர்கள் பலருக்கும் சம்பந்தம் இருப்பதாக பிடிபட்ட திருடன் தெரிவித்துள்ளார்.
விரைவில் அவர்களும் கைது செய்யப்பட்டு சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனப்பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடந்த வாரம் ஒரு கொழும்புத் திருடனும் மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் உண்டியலை உடைக்கும் போது வசமாக மாட்டிக் கொண்டார்.
வெட்கம், சூடு, சுரணை இல்லாத மானங் கெட்ட பிறவிகள். ஊழைத்து வாழ வக்கற்ற அயோக்கியர்கள்! குடும்பத்தினரதும், சமூகத்தினதும் மரியாதைகளைப் போக்குகின்ற போக்கிரிகள். இவர்களுக்கு மக்கள் மத்தியில் வைத்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும். இது பிறர் சொத்தில் ஆசை கொள்ளும் அயோக்கியர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும் என மக்கள் பேசிக் கொண்டனர்.


Post a Comment