( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நற்பிட்டிமுனைச் சேர்ந்த வேலுப்பிள்ளை தியாக மூர்த்தியின் அளப்பரிய தபால் சேவையைப் பாராட்டி உலக தபால் தினத்தில் 'சிறந்த தபால் சேவகருக்கான விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது.
1957.06.15ல் பிறந்த வேலுப்பிள்ளை தியாக மூர்த்தி 1985.07.11ல் கல்முனை பிரதம தபாலகத்தில் தபால் ஊழியராக இணைந்து கொண்டார். அகில இலங்கை தபால் தந்தி தொடர்புகள் சேவையாளர் சங்கத்தின் கிளைச் செயலாளராகப் பணியாற்றிய இவர் பல்வேறு சமூக சேவை அமைப்புக்களிலும் தன்னை இணைத்துக் கொண்டு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார். இதனால் 2010ம் ஆண்டில் நீதி அமைச்சினால் சமாதான நீதிவானாகவும் நியமிக்கப்பட்டார்.
2017.06.14ல் தனது 60வது வயதில் 32 வருட சிறந்த தபால் சேவையைப் பூர்த்தி செய்து ஓய்வுபெற்ற வேலுப்பிள்ளை தியாக மூர்த்தி அண்மையில் கல்முனை பிரதம தபாலக தபாலதிபர், மற்றும் உத்தியோகத்தர்களால் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னம், பரிசுப் பொருட்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அருஞ்சேவையாற்றிய வேலுப்பிள்ளை தியாக மூர்த்தியை நாமும் நமது செய்திச் சேவையின் மூலம் பாராட்டி, அவருக்கு 'சேவைச் சிகரம்' பட்டம் வழங்கி கௌரவிப்பதில் மகிழ்வுறுகிறோம்.




Post a Comment