படித்த பண்புள்ள மக்கள் எமது கை சின்னத்துக்கே வாக்களிப்பர். அந்த மக்களின் அத்தனை தேவைகளும் நிறைவேற்றப்படும்.

    -ஸ்ரீ.ல.சு.க அம்பாரை மாவட்ட அமைப்பாளர் எம்.எம்.சஹீல் உறுதி-
                    ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
படித்த பண்புள்ள மக்கள் எமது கை சின்னத்துக்கே வாக்களிப்பர். சிந்தித்து வாக்களித்த அந்த மக்களின் அத்தனை தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்போம் என்று உறுதிபடக் கூறுகிறேன். 
அதிகாரம் எமக்கு வழங்கப்படாமலே, ஜனாதிபதி அவர்களுடன் எமக்குள்ள உறவுகளைக் கொண்டு நாம் இந்த மண்ணில் பல கோடிகளுக்கு மேல் அபிவிருத்திப்பணிகளைச் செய்து விட்டுத்தான் இன்று உங்கள் முன்னிலையில் வாக்குக் கேட்டு வந்திருக்கின்றோம். 
ஆனால், இன்று வெட்கக் கேடு! மக்களுக்கு லஞ்சம் வழங்கி விட்டு, வாக்குப் பிச்சை கேட்கின்றனராம். இவர்கள் இந்த மக்களை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? 
எமது மக்கள் படித்தவர்கள், பண்புள்ளவர்கள், அறிவாளிகள், ஆலீம்கள், அவுலியாக்கள் போன்றோரின் வழித் தோன்றல்கள். நான் கூட அலியார் மௌலவி, இஸ்மாயில் ஆலீம், வகுத்தாலிம் போன்றவர்களின் வழித்தோன்றலாவேன். 
எனவே எமது மக்களை எவரும் ஏமாற்ற முடியாது. எதிர்வரும் தேர்தலில் அவர்கள் ஸ்ரீ.ல.சு.கட்சியின் கைச் சின்னத்துக்கே வாக்களிப்பர். அப்போது சகல அதிகாரங்களும் எமது ஸ்ரீ.ல.சு.கட்சிக்கே வந்து சேரும். இந்த வேளையில் இந்த மண்ணில் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக இருக்கும் மண்ணின் மைந்தர்களுடாக அத்தனை தேவைகளும், சகல அபிவிருத்திகளும் வந்து சேரும் என்பதை நான் உறுதிபடக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்' என்று ஸ்ரீ.ல.சு.கட்சியின் அம்பாரை மாவட்ட அமைப்பாளரும், நிந்தவூர் பிரதேச சபை ஸ்ரீ.ல.சு.க. வேட்பாளருமான எம்.எம்.சஹீல் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் நிந்தவூர் பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்;களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்றிரவு நிந்தவூர் மாந்தோட்ட வட்டாரத்தில் இடம் பெற்ற ஸ்ரீ.ல.சு.கட்சிக் கூட்டத்தில் பேசும் போதே அம்பாரை மாவட்ட அமைப்பாளர் சஹீல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.










Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.