(எம்.ஜே.எம்.சஜீத்)
தேசிய காங்கிரசின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (31) அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை தைானத்தில் இன்றைய தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திலும் ஜனாதிபதி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அதாஉல்லாவின் தலைமையில் நடைபெற்ற இப்பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரோ, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள், தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இறக்காமம், பொத்துவில் பிரதேச வேட்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டதுடன், பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பொண்ணாடை போர்த்தி ஞாபகார்த்த சின்னம் வழங்கி கௌரவித்தமை விசேட அம்சமாகும்.
Post a Comment