நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலய அதிபருக்கெதிரான இலஞ்ச ஊழல் விசாரணைகளுக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர் றஹீமுக்கு அழைப்பாணை!

                       ( எஸ்.ஆறுமுகத்தான் )
நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலய அதிபருக்கு எதிராக 2017ம் ஆண்டு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக விளக்கமளிப்பதற்கு கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீமுக்கு  இலஞ்ச ஊழல்களுக்கு எதிரான அணைக்குழுவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இமாம் றூமி வித்தியாலய அதிபர் பல்வேறு ஊழல் மோடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அது தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றோர், ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சபையினர் போன்றோர் முன்வைத்தும் அதிகாரிகள் எவராலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவித்ததைத் தொடர்ந்தே மேற்படி  அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இவ்விசாரணை நாளை (30) செவ்வாய்க் கிழமை கொழும்பு -07 , மலலசேகர மாவத்தையிலுள்ள இலஞ்சம், மற்றும் ஊழல்களுக்கு எதிரான சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

மேலும் இது தொடர்பாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் போன்ற உயரதிகாரிகளிடமும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதென்று நமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.