திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்து வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் ஒருவரை இம்மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் உத்தரவிட்டார்.
மூதூர், பஸார் பள்ளி பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தையெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
குறித்த சந்தேக நபர் மூதூர் பகுதியிருந்து புல்மோட்டை பகுதிக்குச் சென்று ஹோட்டல் ஒன்றில் வேளை பார்த்து வந்த நிலையில் தினமும் ஹோட்டலுக்குச் செல்லும் ஒருவருடன் நட்பு கொண்டுள்ளார்.
இதன் காரணமாக அவரின் வீட்டுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு சென்று வரும் போது தான் ஐந்து வயது சிறுமியை தந்தையில்லாத சந்தர்ப்பத்தில் வீட்டுக்குச் சென்று துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கும் போது தந்தை திடிரென சென்று கண்டுள்ளார்.
பின்பு சிறுமியின் தந்தை, ஊர்மக்கள் அனைவரும் புல்மோட்டை பொலிஸ் அவசர தொலைபேசியிலக்கத்திற்கு அழைத்து சந்தேக நபரை பொலிஸில் ஒப்படைத்துள்ளார்கள்.
சிறுமியின் தாய் பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரை பொலிஸார் பொலிஸார் இன்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment