நிந்தவூர் வன்னியார் சதுக்கம் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் க.பொ.த(சாஃத) மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு இன்று நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
வன்னியார் சதுக்கம் சமூக சேவை அமைப்பின் முகாமையாளர் ஏ.எம்.அஸாம் தலைமையில் இடம் பெற்ற இக்கருத்தரங்கில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் பிரதம அதிதியாகவும், முன்னாள் அல்-மதீனா மகா வித்தியாலய அதிபர் எஸ்.அஹமது கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிந்தவூர் பிரதேசத்திலுள்ள சுமார் 250க்கும் மேற்பட்ட க.பொ.த(சாஃத) மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்கு கொண்டு பயன் பெற்றனர்.









Post a Comment