நிந்தவூரில் கல்முனை வலயக் கல்விக் காரியாலயத்தின் உலக சமாதான தின நிகழ்வுகள்.

                     ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் ) 
கல்முனை வலயக் கல்விக் காரியாலயம் ஏற்பாடு செய்த 'உலக சமாதான தினம்' நேற்று நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயாதரப் பாடசாலையில் இடம் பெற்றது.

கல்முனை வலயக் கல்விக் காரியாலய கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வுகளில் நிந்தவூர் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், இந்நாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ஜிஹானா அலீப், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.ஹபீபுல்லாஹ், எம்.ஏ.எம்.றஸீன், அழகியற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி.ஆர். பத்திரண, ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி.நஜிமுன்னிசா இப்றாஹீம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கல்முனைப் பிராந்தியத்தில் சமாதானத்திற்காக உழைத்துவரும் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் அவர்களுக்கு 2017ம் ஆண்டுக்கான சமாதான விருது வழங்கி, பொன்னாடை போற்றிக் கௌரவிக்கப்பட்டார்.

ஏனைய கல்வியலாளர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி, கௌரவிக்கப்பட்டனர்.

தமிழ், முஸ்லிம் மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பிரதம அதிதி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'முரண்பாடுகள் தோன்றுகின்ற போது தான் அங்கு சமாதானம் சீர் குலைகிறது. நாம் ஏதோ எதிர்பார்ப்புடன் ஒரு விடயத்தைச் செய்கின்ற போது, அந்த விடயம் நிறைவேறாமல் போனால் அதில் நாம் தோற்று விட்டதாகவும், மற்றவர் வெற்றி பெற்று விட்டதாகவும் கருதி, அதில் எப்படியோ வெற்றிபெறவேண்டும் என்ற குரோத மனப்பாங்குடன் செயற்படும் போதுதான் முரண்பாடுகள் உருவாகுகின்றன. இந்த முரண்பாடுகளே நாளடைவில் விரிசலை ஏற்படுத்தி, சமாதானத்தை சீர் குலைக்கின்றது. எனவே நாம் உலக சமாதான தினத்தில் முரண்பாடுகள் இல்லாத சமாதான தேசத்தை உருவாக்க திடசங்கற்பம் பூணுவோம்' எனத் தெரிவித்தார்.











Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.