நல்லவற்றையும், நல்லவர்களையும் பாராட்டுவோம்! கௌரவிப்போம்!!

                                ( கே.ரேணுக்கா )
நிந்தவூர் கமுஃகமுஃஅல்-மஸ்லம் வித்தியாலயத்தில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் சிந்தனையில் உதித்த 'பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டம்-2017' எனும் பயனுள்ள செயற்பாடுகள் அதிபர் எம்.ஏ.எம்.இப்றாஹீம், சிரேஷ்ட ஆசிரியர் எம்.யாக்கூப், மற்றும் ஏனைய ஆசிரியர்களின் வழிகாட்டலிலும், மாணவர்களின் முயற்சியினாலும் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 

இப்பிரதேசத்தில் சில பாடசாலைகளின் அதிபர்கள், தமது சுயநலன்களுக்கு உதவியாக இருக்கின்ற ஆசிரியர்களை வைத்துக் கொண்டு, அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்திட்டங்களுக்கான பணங்களை வேறு எந்த ஆசிரியர்களுக்கும் தெரியாமல் சாமத்தியமாக அமுக்கி வருகின்றனர்.  கல்வி அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு, பாடசாலைச் சொத்துக்களை அபகரிப்பதுடன், மாணவர்களதும், ஏழைப் பெற்றோர்களினதும் வயிற்றில் அடித்துக் கொண்டு, மனித உரிமை மீறல் ஆணைக்குழு என்றும், இலஞ்ச ஊழல் மோசடிக்கெதிரான ஆணைக்குழு என்றும் ஏறி இறங்கித் திரியும் இந்தவேளையில், அமைதியாக இருந்து கொண்டு, பொன்சிரிப்புடன் பணியாற்றும் இவ்வதிபரையும், இவர் நேர்மையையும் பாராட்டாமல் இருக்க முடியுமா? 

ஏனைய பாடசாலைகளுக்கு முன்மாதிரியாகச் செயற்படும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களை எமது இணையத்தின் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்! பாராட்டுகின்றோம்!! கௌரவிக்கக் காத்திருக்கின்றோம்!!!







Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.