இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நேரடி, மறைமுக சூழ்ச்சிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை முஸ்லிம்களிடமிருந்து பிரிக்கும் சதி போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, முற்போக்கு முஸ்லிம் முன்னணியின் ஏற்பாட்டில் 2017 ஒக்டோபர் 19ம் திகதி 10;30 மணிக்கு பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவுடனான சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில்
தற்கால அரசியலில் இலங்கை முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியதும் விழிப்புணர்வு பெற வேண்டியதுமான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், மாகாண சபை தேர்தல் சீர் திருத்தம், வடக்கு கிழக்கு இணைப்பின் மூலம் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன்முஸ்லிம்களை பிளவுபடுத்தும் சூழ்ச்சியின் மூலம் நாடு எதிர்நோக்கியுள்ள பாதிப்பு, முஸ்லிம்கள் இலங்கை பிரஜை ஆவதற்குரிய அடிப்படை உரிமை ஆகிய தலைப்புக்களில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தகது.
குறித்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தெளிவுபெற்றுக்கொள்ளு மாறு அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Post a Comment