தேசிய உணவு உற்பத்தி வாரத்தின் இறுதி நாளில் நிந்தவூரில் 100 நிழல் தருமரங்கள் நாட்டும் நிகழ்வு.

     -பிரதியமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதி-
                          ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் சிந்தனையில் உருவான தேசிய உணவு உற்பத்தி வாரத்தின் இறுதி நாளை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச பிரதான வீதிகளின் இரு மருங்குகளிலும் 100 நிழல் தருமரங்கள் நாட்டும் நிகழ்வு நேற்று இடம் பெற்றது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மரநடுகையை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட கௌரவ அதிதிகள், உயர் அதிகாரிகள், ஏனைய உத்தியோகத்தர்கள், விவசாயப் பிரதிநிதிகள் போன்றோரினால் 100 மரங்களும் நடப்பட்டன.

இம்மரநடுகை நிகழ்வின் இறுதியில் அல்லிமூலை நெல் வயல் பிரதேசத்தில் விவசாயிகளையும், கால் நடை வளர்ப்போரையும் விளிப்பூட்டக் கூடிய விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்றும் இடம் பெற்றது.

இதில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய நிந்தவூர் பிரதேச கமநல சேவை மத்திய நிலைய மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.ஹார்லிக் கருத்து வெளியிடுகையில்;:- 'இன்று எம்மவரிடையே அதிகமாகக் காணப்படும் சிறுநீரக நோய், புற்று நோய், பெண்களுககான மூட்டு வாதம்' போன்றவற்றிற்குக் காரணம்  நாம் உண்ணும் உணவிலுள்ள நச்சுத் தன்மையே ஆகும். எனவே நாம் நஞ்சற்ற இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைத் தெரிவு செய்து உண்ணவேண்டும். எப்போதும் இயற்கையோடு ஒன்றித்து வாழவேண்டும். இயற்கையை வளர்த்து, அதனை இரசிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நோயற்ற மனநிறைவுடைய சுகதேகியாக வாழ முடியும்' எனத் தெரிவித்தார்.













Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.