இலங்கை கல்வி நிருவாக சேவைகள் பரீட்சையில் சித்தியெய்திய அல்-மினா வித்தியாலய ஆசிரியர் சாஜித்தைப் பாராட்டி கௌரவிப்பு நிகழ்வு.


                               ( ஏ.ஆர்.அபி அஹமட் றபீக் )
நிந்தவூரின் வரலாற்றில் சுமார் 31 வருடங்களின் பின்னர் இலங்கை கல்வி நிருவாக சேவைகள் போட்டிப் பரீட்சையில் சித்தியெய்தி, பதவியுயர்வு பெற்றுச் செல்லும் நிந்தவூர் கமுஃஅல்- மினா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் அல்ஹாஜ்.யூ.எல்.எம்.சாஜித்தைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு இன்று(20)  நிந்தவூர் அல்- மினா வித்தியாலயத்தில் சிறப்பாய் இடம் பெற்றது.

வித்தியாலய அதிபர் எம்.எல்.எம்.நிஹார்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அல்ஹாஜ்.யூ.எல்.எம்.சாஜித் கருத்து வெளியிடுகையில்:- 'நான் ஒரு உடற்கல்வி ஆசிரியனாக இருந்திட்ட போதிலும், 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களைக் கற்பித்து, அதிகமாணவர்களை சித்தியடையச் செய்த ஆசிரியனாகக் காணப்பட்டேன். கற்பிப்பதில் எனக்கு எப்போதுமே அதிக பிரியம்! நான் தொடர்ந்தும் மாணவர்களுக்குக் கற்பித்ததன் காரணத்தால்தான் இப்போட்டிப் பரீட்சையில் சித்தியடைய முடிந்தது. நான் கற்பித்த காலத்தில் பல இன்னல்களுக்கும், சவால்களுக்கும், குழிபறிப்புகளுக்கும் மத்தியில் தான் அல்லாஹ்வின் உதவியினாலும், எனது தாய், தகப்பனின் பிரார்த்தனைகளினாலும் சித்தியடைந்துள்ளேன். மாணவர்களாகிய நீங்களும் சிறப்பாகக் கற்கவேண்டும். எதிர்காலத்தில் கல்வித்துறையில் மேலும் பல படிகளைத் தாண்ட வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். இன்ஷாஅல்லாஹ் நான் உயர்பதவி வகிக்கின்ற காலத்தில் என்னுடைய நண்பர்கள், எதிரிகள், உறவினர்கள், குழிதோண்டியோர் எவர் எனது உதவியை நாடினாலும் அதனை மனங்கோணாது செய்து கொடுக்கச் சித்தமாக இருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.

சாதனை வீரன் சாஜித்தும், அவர் பாரியாரும் அதிபர், ஆசிரியர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர், மாணவ மாணவிகள் மலர்தூவி வரவேற்று, பகல் விருந்தும் வழங்கி மகிழ்ந்தனர்.

இறுதியில் சாதனை நாயகன் சாஜித் அதிபர் ஆசிரியர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.












Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.