மர்ஹூம்.எம்.எச்.எம்.அஷ்றபின் 17வது நினைவு தினம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி தலைமையில் நிந்தவூரில் இடம் பெற்றது.

                     ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான  மர்ஹூம்.எம்.எச்.எம்.அஷ்றபின் 17வது நினைவு தினம் நேற்று நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் செயலாளர் நாயகமும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் ஸ்ரீ.ல.மு.கா. தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகு தாவூத் பிரதம பேச்சாளராக் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் முன்னாள் பிரதேச சபைத் தலைவர்களான எம்.ஏ.எம்.தாஹீர், சட்டத்தரணி.ஏ.எம்.அன்சில், ஏ.எம்.தாஜூதீன் போன்ற உள்ளுர் அரசியல் தலைவர்களுடன், அமைச்சர் அஷ்றபின் அடிப்படைப் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னாள் அமைச்சர் ஹசன் அலி இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'அரசாங்கம் இன்று மக்களுக்கான அபிவிருத்திகளைச் செய்து கொண்டிருக்கிறது. இது அரசாங்கத்தின் கடமை. இந்த அபிவிருத்திகள் எல்லாம் சரியான முறையில் மக்களைச் சென்றடைகின்றதா? என நமது அரசியல் தலைமைகள் கவனமாக இருப்பதை விட்டு விட்டு, இந்த அபிவிருத்திகளுக்குள் நாமும் நமது தலைகளை நுளைத்துக் கொண்டு, தனிப்பட்ட முறையில் தன்னையும், தனது குடும்பத்தையும் வாழ வைக்க நினைக்கின்ற ஏமாற்றுப் பேர் வழிகள் இன்று மாமனிதர் மர்ஹூம் அஷ்றபின் கொள்கைகளுக்கும், சிந்தனைகளுக்கும் மாற்றமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். இல்லையேல் மாற்ற வேண்டும். இது தொடர்ந்தால் மியன்மார் போன்றதொரு நிலை இங்கு ஏற்படலாம்!' எனத் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் பசீர் சேகு தாவூத் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'நமது மறைந்த தலைவர் அஹ்றபிற்கு நாம் செய்யக் கடமைப்பட்டுள்ள முன்று விடயங்களை நான் நிச்சயம் நிறைவேற்றியாகுவேன் என சபதமெடுத்துள்ளேன். 1. இன்று மாமனிதர் மர்ஹூம் அஷ்றபின் கொள்கைகளுக்கும், சிந்தனைகளுக்கும் மாற்றமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தீய முஸ்லிம் காங்கிரசை ஓட ஓட விரட்டி, அதனை மீண்டும் மீட்டு தூய முஸ்லிம் காங்கிரசாக மாற்றுவது. 2. தாறுஸ் ஸலாமை மீட்பது. 3. நமது தாய்மார்களினதும், தந்தைமார்களினதும் நெஞ்சங்களில் நிறைந்து வாழும் மாமனிதர் மர்ஹூம் அஷ்றபின் மறணம், சதியா? விதியா? என்பதை நீதியின் வழியில் நின்று வெளிக்கொணடு வருவது. நமது தலைவர் அஷ்றப் சொன்னது போன்று நாம் ஒற்றுமைப்பட்டு விட்டோம் என்பதை உணர்த்துவதற்கு தேர்தல் ஒன்றே சரியானதாகும்.  மாமனிதர் மர்ஹூம் அஷ்றபபை அழித்த, ; அஷ்றபின் கொள்கைகளையும், சிந்தனைகளையும் குழிதோண்டிப் புதைத்த, தூய காங்கிரசை தீய காங்கிரசாக 




                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                






Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.