கிழக்கின் தலைமையை அங்கீகரிக்கும் "ஹக்கீம்"!!!




                           ( இர்பான் முகைதீன் )
வடக்கு-கிழக்கு மாகாணங்களின் உணர்வுகளையும்,தாகங்களையும் வெளி மாகாண முஸ்லிம் தலைமைகளால் அறியவும், தீர்க்கவும் முடியாது என உணர்ந்து "கிழக்கின்" முஸ்லிம் தலைமையின் அவசியத்தை எண்ணி அதை உருவாக்கி மறைந்தார் மர்ஹூம் MHM அஷ்ரப்!!

அவ்வாறு பல தியாகங்களுக்கும் , மரண அச்சுறுத்தலுக்கும் மத்தியில் முஸ்லிம் சமூக பாதுகாப்பு அரணாக வளர்த்த மு.கா. கட்சி அவரின் மரணத்துக்கு பின் கடந்த 17ஆண்டுகள் அவரின் "கனவு"க்கு மாறாக "கிழகிற்கு"வெளியில் ஒப்படைக்கப்பட்டது!!

அவ்வாறு அதை பொறுப்பேற்ற தலைமையான "ஹக்கீமின்" அதிகார பேராசையினால் "வடக்கிற்கு" என ஒரு புதிய தலைமையாக "றிஷாடை"உருவாக்கினார்!! தொடர்ச்சியாக தனது தலைமைத்துவ பதவிக்காக "கிழக்கை" அடிமைப்படுத்தி உலா வந்தார்!

இந்த 17வருடமும் தனது தலைமையில் வரும் அரசின் "கிழக்கின்" அமைச்சராக இருந்து "கிழக்கிற்க்கு" சாதித்தது என்ன??
"மறைந்த தலைவர்" தனது சமூகத்துக்காக வெறும் 06 வருடங்களே அமைச்சராக இருந்து தான் சார்ந்த சமூகத்துக்காக சாதித்து வழிகாட்டினார்!!

இவ்வாறு "ஹக்கீமின்" தலைமையின் பேராசைகளையும், பிழைகளை சுட்டிகாட்டி காலத்துக்கு காலம் பல ஆரம்ப உறுப்பினர்களும், போராளிகளும் வெளியேறும் போது மு.கா.தலைமையாலும் அதன் மீது "மோகம்" கொண்ட போராளிகளாளும் அவர்களை "பதவி"மோகம் பிடித்த "துரோகிகள்" என பழி சுமத்தப்பட்டு காலம் கடத்தியதுதான் மிச்சம்!!

"#அரசன் அன்றாருப்பான் தெய்வம் நின்றாருக்கும்" என்பதை போல் ஹக்கீமின் அதிகார எல்லையின் உச்ச நிலையில் மு.கா.வின் "பொக்கிஷமும், சொத்தும்" என மறைந்த தலைவரினால் எழுதி வைக்கப்பட்ட ஹஸன்அலி, பஸீர் சேகு தாவூத் ஆகிய மரத்தின் உறுதியான "வேர்கள்" வெளியேறினர்!!

ஆரம்பத்தில் இவர்களும் "பதவி" மோகத்துக்காக சென்றனர் என தனது இயலாமையை மறைக்கும் ஆயுதத்தை "ஹக்கீம்"தரப்பு வழமை போல் பாவித்தது! பின் "அட்டாளைச்சேனையின்" தேசிய பட்டியலை வைத்து தனது வழமையான "கபட" ஏமாற்று அரசியலை செய்வதனால் அவர்களின் "குற்றச்சாட்டு" பொய்பிக்கப்பட்டது!!

இவர்களின் வெளியேற்ற "எதிரொளி"யாக கடந்த பல வருடங்களாக மு.கா.வின் தலைமையின் வருகையுடன் நடைபெறும் கிழக்கின் "இப்தார்" நிகழ்வுகள் அனைத்தும் அவர் இல்லாமல் அவரின் கட்சியின் "முதல்வரின்" வருகையுடன் நடந்து முடிந்தது! இதுவே முதல் வரலாறு!! இவ்வாறு தனது பிரதிநிதிகளை கொண்டு "கிழக்கில்"நிகழ்வுகளை நடத்துவதனால் தான் இனி "கிழகிற்க்கு" அவசியம் இல்லை என மனதால் ஏற்றுக்கொள்வதாகவும் பார்க்க முடியும்மல்லவா??

"கிழக்கை" மையப்படுத்தியதான தனது அரசியல் வாழ்க்கைக்கு உரம் சேர்த்த, சேர்க்கும் "ஹக்கீம் " ஹஸன்அலி, பஸீர், வெளியேறுவதற்கு முன் "கிழக்கில்" "இப்தார்" நிகழ்வுகளில் "வலுக்கட்டாய"மாக கலந்து கொண்ட வரலாறும் உண்டல்லவா??? அப்படியானால் இப்போது ஏன் ஒதுங்குவது???

இதே வேளை கிழக்கு மாகாணத்தில் "ஹக்கீம் " நிகழ்வுகளில் கலந்து கொள்ளாததை மு.கா. பிரமுகர்களோ, போராளிகளோ பெரிதுபடுத்தி கொள்ளவில்லை! என்றால் "ஹக்கீமின்" தலைமையை விட்டு இவர்கள் தூரமாகிறார்கள் என்று தானே அர்த்தம்!!

எது எப்படியோ கிழக்கின் தலைமையை மனதளவில் அங்கீகரித்துக்கொண்டார் "ஹக்கீம்"!!
"மறைந்த தலைவரின்" கனவை நனவாக்க "கிழக்கின்" புதிய தலைமையை எதிர்வரும் காலங்களில் இம் மக்கள் தெரிவு செய்யும் நேரம் வந்து விட்டது!!!


Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.