-அதிபருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? மக்கள் கேள்வி?-
நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலய அதிபரின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளால் கடந்த மாதம் 05ந் திகதி யாருடைய அனுமதிகளும் பெறப்படாமல், அனுமதியின்றித் தறித்து, சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இன்னுமொரு தொகுதி மரங்கள் இன்று (29) மரக்கூட்டுத்தாபன உயரதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்டுள்ள மரங்கள் யாவும் இலங்கை மரக்கூட்டுத்தாபனத்திற்கே சொந்தம் என்று கூறிய பொறுப்பதிகாரி கே.எல்.இரங்க தலைமையிலான குழுவினர் அவை அனைத்தையும் அம்பாரைப் பிராந்திய மரக் கூட்டுத்தாபன காரியாலயத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளனர்.
இதே வேளை மேற்படி பாடசாலையில் அனுமதியின்றித் தறிக்கப்பட்டு, சட்டவிரோதமாக நிந்தவூர் மாந்தோட்டச்சந்தியில் அமைந்துள்ள மரஆலை ஒன்றிற்கு ஏற்றிச் செல்லப்பட்ட 12 வேப்பை மரக் குற்றிகளை, அக்கரைப்பற்றுப் பிராந்திய வனஇலாகா அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றதோடு, குற்றவாளிகளுக்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தினால் ரூ.15,000.00 தண்டப்பணமும் விதிக்கப்பட்டு, தண்டப்பணம் செலுத்தியதைத் தொடர்ந்து குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 2014ம் ஆண்டிலும் இதே அதிபர் ஏ.சீ.ஹாமீதினால் பெரிய வேம்பு மரமொன்று எந்த அனுமதிகளும் பெறப்படாமல், திருட்டுத்தனமாக வெட்டப்பட்டு அதிபர் ரூ.20,000.00த்திற்கு மேலான பெறுமதியிற்கு விற்றதாகவும், அது தொடர்பான கணக்குகள் எதுவும் காட்டப்படாததால், அப்போதிருந்த பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் இந்த அதிபருடன் முரண்பட்டதாகவும் அறிய முடிகிறது.
இந்த அதிபரின் சர்வதிகாரப் போக்கினாலும், திட்டமிட்ட திருவிளையாடல்களாலும் ஏமாற்றப்பட்டு வருவதை அறிந்து கொண்ட, 06 வருட காலப்பகுதிகளுக்கான பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் தொடராக இந்த அதிபருடன் முரண்பட்டுக் கொண்டதாகவும், இவரது மோசடி செயற்பாடுகளால் தமது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும், பாடசாலை நடவடிக்கைகள் சீர்குலைவதாகவும் கூறி, இந்த அதிபர் ஹாமீதை வேறு பாடசாலைக்கு இடமாற்றஞ் செய்யுமாறு கோரி வந்திருப்பதாகவும், ஆனால், இவர் யாரோ ஒரு உயரதிகாரியின் தயவினால் இன்று வரை இடமாற்றஞ் செய்யப்படாமல் தைரியமாக, தொடராக ஊழல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அறிய முடிகிறது.
உண்மையில் மே மாதம் 25ந் திகதியும், இன்றும் இப்பாடசாலை வளாகத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள் என்ற குற்றச்சாட்டில் வனஇலாகா அதிகாரிகளாலும், மரக் கூட்டுத்தாபன அதிகாரிகளாலும் பறிமுதல் செய்யப்ட்ட கூழா, வேம்பு போன்ற மரங்களினதும், மொத்த விறகுகளினதும் பெறுமதி எப்படியும் சுமார் ரூ.8,000,00.00 தேறும். இதை உரிய முறைப்படி, உரியவர்களின் அனுமதியோடு தறித்து, சட்டப்படி மரங்களைப் பாகுபாடு செய்து, பாடசாலைச் சமூகத்தினருக்கு விற்பனை செய்திருந்தால், மரங்கள் சமூகத்திற்கு உதவியிருக்கும்! விற்ற பணம் பாடசாலைத் தேவைகளுக்கு உதவியிருக்கும்!! ஆனால், அதிபர் வழமை போன்று திருட்டுத் தனமாக விற்று, சிறிய தொகையைக் காட்டி, பெருந்தொகையை மர்மமாக மறைப்பதற்கு எடுத்த நடவடிக்கையால் இன்று எல்லாமே நாசமாப் போச்சி! இதற்கெல்லாம் முழுக் காரணம் இந்த அதிபரே! இவரை உடன் இப்பாடசாலையை விட்டு வெளியேற்ற கல்வி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! இல்லையேல் இந்த அதிபரின் கைகளுக்கு விலங்கிடப்படுவதையும், இவருக்குத் துணையான அதிகாரிகளுக்கு சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படப் போவதையும் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இணைந்திருங்கள் எமது இணையத்துடன்! இப்பாடசாலை அதிபர் பற்றிய மேலும் பல திடுக்கிடும் தகவல்களைக் காலக்கிரமத்தில் வழங்கவுள்ளோம்! இது யாரையும் பழிவாங்குவதற்கல்ல! ஊழல் நிறைந்த அதிபர்களைத் திருத்துவதற்கும், ஏழை மாணவர்களைப் பாதுகாப்பதற்குமேயன்றி வேறில்லை!!!













Post a Comment