( எஸ்.கே.ரவி ராஜ் )
மாகாண சபைகளின் ஆட்சி காலம் நிறைவுக்கு வந்தவுடன், எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தயாராகுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய ஆகிய மாகாண சபைகளின் ஆட்சி காலம் நிறைவுக்கு வரவுள்ளன.
இதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி கிழக்கு மாகாண சபையினதும் செப்டெம்பர் 28ஆம் திகதி சப்ரகமுவ மாகாண சபையினதும் ஆட்சி காலம் நிறைவுக்கு வரவுள்ளது.
அதேபோல், வட மத்திய மாகாண சபையின் ஆட்சி காலம் டிதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நீதி முறைக்கு அமைய, நடைபெறும் அது எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்கப்படமாட்டாது என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Post a Comment