நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் வை.எல்.சுலைமா லெப்பையின் விசேட இப்தார் நிகழ்வு நேற்று (22) மாலை அவரது உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும், தென் கிழக்குப் பல்கலைக் கழக பதிவாளர் எச்.ஏ.சத்தார், மக்கள் வங்கி நிந்தவூர்க் கிளை முகாமையாளர் எஸ்.நசுறுதீன், இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.ஐ.எம்.பரீட் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மற்றும் உலமாக்கள், கல்விமான்கள், உள்ளுர் அரசியல் தலைவர்கள், விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், சமூக சேவை அமைப்பின் தலைவர்கள், ஊர்ப்பெரியார்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிந்தவூர் அல்-பலாஹ் பள்ளிவாசல் பேஷ் இமாம் சங்கைக்குரிய உலமா அஸ்சேஷ். அக்பர் பசீல் (மன்பயி) அவர்களினால் விசேட றமழான் சொற்பொழிவும், துவாப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.









Post a Comment