41 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து பற்றி எரிந்தது! உயிர்ப்பலி இல்லை


இந்தியா
அரசுப் பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 41 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்திலிருந்து 41 பயணிகளுடன் சென்னை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தபோது தீப்பிடித்தது.

மேல்மருவத்தூரில், சென்றுகொண்டிருந்தபோது பேருந்து இஞ்ஜினில் திடீரெனத் தீப்பிடித்துள்ளது. அதைக் கவனித்த ஓட்டுநர், சற்றும் தாமதிக்காமல் பேருந்தை நிறுத்தி, பயணிகள் அனைவரையும் பேருந்திலிருந்து பாதுகாப்பாக இறக்கிவிட்டுள்ளார். பயணிகள் தூரத்தில் சென்றதும் பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எறிந்துள்ளது. ஓட்டுநரின் சமயோஜித நடவடிக்கையால், 41 பேருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.