நிந்தவூரில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதேச சம்மேளனத்தின் இப்தார் நிகழ்வு.


              ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதேச சம்மேளனத்தின்  ஏற்பாட்டிலான இப்தார் நிகழ்வு இன்று (12) மாலை நிந்தவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள  (நெனசல அறிவகம்) பழைய பல நோக்கக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம் பெற்றது.

இலங்கைப் போக்கு வரத்துச் சபையின் கிழக்குப் பிராந்திய பிரதம பிராந்திய முகாமையாளரும், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதேச சம்மேளனத் தலைவருமான தேசமானிய ஏ.எல்.சித்தீக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமா அஷ்ஷெய்க் றிபாயுதீன்(காஷிபி) மௌலவி அவர்களினால் விசேட சொற்பொழிவும், துஆப் பிரார்த்தனையும் நிகழ்த்தப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமாக்கள், கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், ஊர் தனவந்தர்கள், நலன்விரும்பிகள், சமூக சேவை அமைப்புக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.