வனஇலாகா அதிகாரிகளால் கைப்பற்றப்ட்ட நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயத்திற்குரிய மரங்களுக்கு எதிரான வழக்கு நாளை நீதிமன்றில்.

                                (எஸ்.கே.ரவி ராஜ் )
இம்மாதம் 7ந் திகதி நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலய அதிபரின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளால் அனுமதிகள் எதுவும் பெறப்படாமல் சட்டவிரோதமாகத் தறிக்கப்பட்ட வேம்புமரக் குற்றிகள், 25ந் திகதி காலை மரஆலை ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்ட வேளையில், பொது மக்கள் கொடுத்த தகவலின்படி அம்பாரை மாவட்ட வனஇலாகா அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான வழக்கை நாளை 2017.05.30ந் திகதி சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யவுள்ளதாக பிராந்திய வனஇலாகா அதிகாரி பி.ஜீ.எஸ்.திசேரா எமது இணையத்திற்குத் தெரிவித்தார்

இதேவேளை மேற்படி பாடசாலை அதிபர் குறிப்பிட்ட பாடசாலையிலிருந்து கொண்டு பல்வேறு ஊழல், மோசடிகளில் தொடர்ந்தேர்ச்சையாக ஈடுபட்டு வருவதாகவும், இவரது ஊழல் மோசடி நடவடிக்கைகளுக்குப் பெற்றோரும், ஆசிரியர்களும், பாடசாலை அபிவிருத்திச் சபையினரும் 2011ம் ஆண்டு தொடக்கம் எதிர்ப்புக் காட்டி வந்த போதிலும் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் இவ்வதிபருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளாமலிருப்பது கல்விப் புலத்திலுள்ளோர் மீது பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
ஏன் கல்முனைக் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜலீல் சேர் மௌனம் சாதிக்கிறார்?  ஏன் மாகாணக் கல்வி அதிகாரி நிஸாம் சேர் கண்டும், காணாதது போல் உள்ளார்? எல்லாவற்றிற்கும் மேலாக மாகாணக் கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி சேர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் அதிகாரிகள், அமைச்சர்களின் இலட்சணங்களா? என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.










Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.