ஆசிரியர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு.

கல்முனைக் கல்வி வலயப் பாடசாலைகளில் 
5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்களைச் சித்தியடையச் செய்த ஆசிரியர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு.
               -மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிசாம் பிரதம அதிதி-
                  ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கல்முனைக் கல்வி வலயப் பாடசாலைகளில் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்களைச் சித்தியடையச் செய்த 72 ஆசிரியர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சமீபத்தில் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில் நடைபெற்றது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கல்வி; பணிப்பாளர்களான எஸ்.எல்.ஏ.றகீம், உமர் மௌலானா, பரதன் கந்தசாமி, சத்தார்.எம்.பிர்தௌஸ், ஏ.எல்.சக்காப், வலயக் கணக்காளர் றிஸ்வி யஃசர், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைவதற்காகப் பல தியாகங்களைச் செய்து, மாணவர்களைத் தேறவைத்த தியாக உணர்வுள்ள ஆசிரியர்கள் நிந்தவூர் பிரதான வீதியில் வைத்து, கல்வி அதிகாரிகளால் மாலை அணிவித்து, நிந்தவூர் வைத்தியசாலை வீதி வழியே பேன்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கௌரவிப்பு மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவ்வாசிரியர்கள் 72 பேரும் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்கள் என்பன வழங்கி, கௌரவிக்கப்பட்டனர். 

இறுதியில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் ஆற்றிய கல்விப் பணிகளைப் பாராட்டி, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்களால் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இங்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் கருத்துத் தெரிவிக்கையில்:- 'கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தையும் கௌரவ ஆளுனர் அவர்கள் இரத்து செய்ய வில்லை என்பதை நான் உத்தியோக பூர்வமாக அறிவிக்க விரும்புகின்றேன்! அவ்வாறான செய்திகள் பொய்யான செய்திகள்! கௌரவ ஆளுனரைப் பற்றித் தவறான அபிப்பிராயங்களை மக்கள் மத்தியில் உருவாக்குகின்ற ஒரு செய்தியாக அது அமைந்திருக்கின்றது. இவ்வாறான செய்திகளை எழுதுகின்றவர்களுக்கு எதிராக சில வேளை கௌரவ ஆளுனர் அவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பார் என்று நான் நம்புகின்றேன்' எனத் தெரிவித்தார்.



















Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.