நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயத்தில் சட்டவிரோதமான முறையில் அனுமதியின்றி பெறுமதியான மரங்கள் தறிப்பு!

-அதிபரின் அடுத்த கட்ட மோசடிச் சாதனை எனப் பெற்றோர் விபரிப்பு-

                                       ( எஸ்.கே.ரவி ராஜ் )
நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயத்தில் சட்டவிரோதமான முறையில் அனுமதியின்றி பெறுமதியான மரங்கள் தறிக்கப்பட்டுள்ளதாகவும், இச்செயற்பாடு அதிபரின் அடுத்த கட்ட மோசடிச் சாதனைகளில் ஒன்று என்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை எல்லைக்குள் உள்ள பெறுமதியான கூழா, வேம்பு போன்ற பெறுமதியான மரங்களைத் தறிப்பதற்கு முன்னர் சட்டப்படி, உரிய அதிகாரிகளிடத்தில் அனுமதி பெற்ற பின்பே மரங்கள் தறிக்கப்பட்டிருக்க வேண்டும். 

பின்னர் உரிய முறைப்படி பாடசாலை அபிவிருத்திச் சபையினரின் மேற்பார்வையில் வலயக்க கல்வி அதிகாரிகளின் முன்னிலையில் பொது மக்களுக்கு ஏலத்தில் கூறி விற்கப்பட வேண்டும். ஆனால், இப்பாடசாலையில் இதுவரை காலத்திலும் இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படாமல் பாடசாலை அபிவிருத்தி சபையை பெயரளவில் வைத்துக் கொண்டு, அதிபர் தான்தோன்றித் தனமாக மரத்தை வெட்டுவதும், சில நாட்களின் பின்னர் மரங்கள் மாயமாக மறைவதும், இறுதியில் எவருக்கும் தெரியாமல் மரம் விற்ற பணம் அதிபரின் பக்கட்டை நிரப்புவதும் வாடிக்கையான விடயமாகப் போய் விட்டதாம் எனப் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் (2016) இப்பாடசாலையின் அபிவிருத்திச் சபை மரங்களின் கொத்துக் கிளைகளைக் களைவதென்று ஒரு தீர்மானம் எடுத்ததாம். ஆத்தீர்மானத்தின் படி அதிபர் வேம்பு மரங்களின் கிளைகளைக் கழைந்திருக்கும் விந்தைகளைப் பொது மக்களின் பார்வைக்காகத் தருகிறோம். இதற்குப் பெயர்தான் கொத்துக் கிளைகளைக் கழைவதா? பாவம்!! இக்கொடுமையான வெப்ப காலத்தில் இந்த மரங்களை இவ்வாறு வெட்டியிருப்பதன் மர்மந்தான் என்ன? மரங்கள் செத்து விட்டால் அதிபர் கட்டும் வீட்டுக்குப் பயன்படுத்தலாம் என்ற நப்பாசையாக இருக்குமோ என பாடசாலை மீது பற்றுக் கொண்டு, விழிப்போடு செயற்பட்டு வரும் பெற்றோர் வியப்போடு கேட்கின்றனர்.
குறித்த அதிபர் கடந்த 05 வருடங்களாக இப்பாடசாலையில் ஒரு சர்வதிகாரியாக இருந்து கொண்டு பல ஊழல், மோசடிகளிலும், மாணவர்களிடத்தில் சட்டவிரோத பண அறவீடுகளிலும், இன்னும் பல ஈனச்செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கும் பெற்றோர் இவரை இப்பாடசாலையை விட்டு வெளியேற்றும் முதற்கட்ட முயற்சியாக விரைவில் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 

இதற்கு உரிய உயரதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், ஏன் இன்னும் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மௌனமாக இருக்கிறார்கள்? இந்த அதிபரின் திருவிளையாடல்களுக்கு கல்வி அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது! என்றும் சம்பந்தப்பட்ட பெற்றோர் தமது ஆதங்கங்களைத் தெரிவிக்கின்றனர். 








Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.