-மும்மதத் தலைவர்களும், மாணவர்களும் பங்கேற்பு-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கல்முனைக் கல்வி வலயம் நடாத்திய வெசாக், சிங்கள தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகள் நேற்று கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றது.
பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வுகளில் பாண்டிருப்பு அம்மன் கோயில் பிரதம குரு சிவசிறி வ.ஐ.யோகராஜா குருக்கள், கல்முனை சுபத்திராமய விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்னதேரர், கல்விப் பணிப்பாளர்களான ஏ.எல்.எம்.அறபாத், திருமதி. பி.ஜிஹானா அலீப், கல்முனை வலய சமாதாரக் கல்வி அதிகாரி எம்.ஏ.எம்.றசீன், ஆசிரிய ஆலோசகர்களான திருமதி.ரி.கே.பத்திரண, திருமதி.நஜிமுன்னிசா இப்றாகீம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கல்முனை, சாய்ந்தமருது கல்விக் கோட்டப் பாடசாலைகளிலுள்ள தழிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் அனைவரும் இந்நிகழ்வுகளில் விருப்புடனும், மணமகிழ்வுடனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்றும்,
பலூ}ன் ஊதி உடைத்தல், கிடுகு பின்னுதல், அப்பிள் சாப்பிடுதல், தேசிக்காய் கரண்டி பலன்ஸ் நடை, வாழைப்பழம் எண்ணுதல், யானைக்குக் கண் வைத்தல், போர்த் தேங்காய் உடைத்தல், முட்டி உடைத்தல், பலூனில் நீர் நிரப்பி மாற்றுதல், மா ஊதி நாணயம் தேடல், கயிறு இழுத்தல், கிடுகு பின்னுதல், சங்கீதக் கதிரை போன்ற பல்சுவை விளையாட்டுக்களில் ஆண்டு 03 தொடக்கம் ஆண்டு 13 வரையான மாணவர்கள் பங்கு கொண்டு மகிழ்தனர் என்றும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதம அதிதி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'எமது வலயத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மூவின மாணவர்களும் ஒற்றுமையாக கல்வி கற்று, விளையாடி மகிழ்கின்ற ஒரு உன்னதமான சூழலைக் காணும் போது உண்மையில் மனம் புழகாங்கிதமடைகிறது. எமது வலயத்தில் காண்கின்ற இந்த இன ஒற்றுமை முழு நாட்டிலும் நிலைக்க நாமெல்லோரும் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.























Post a Comment