( எஸ்.கே.ரவி ராஜ் )
நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றித் தறிக்கப்பட்ட மரங்கள் இன்று காலை 10 மணியளவில் அதிபரினால் நியமிக்கப்பட்ட இருநபர்களினால் கள்ளத்தனமாக தனியார் மரஆலையொன்றிற்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது.இந்த விடயத்தை அயலவர்கள் தேசிய மரக் கூட்டத்தாபன உயரதிகாரிகளுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, ஸ்தலத்திற்கு விரைந்த மரக் கூட்டுத்தாபன அதிகாரிகள் ஐவர் நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் ( மாந்தோட்டத்தில் அமைந்தள்ள சாதீக் என்பவரது மரஆலையை ) முற்றுகையிட்டதைத் தொடர்ந்து இமாம் றூமி வித்தியாலயத்தில் அடியோடு பிடுங்கித் துண்டாடப்பட்ட கூழா மரங்களையும், கந்து இறக்குதல் எனும் பெயரில் தறிக்கப்பட்ட வேப்பை மரக் குற்றிகளையும் எல்லாம் மொத்தம் 12 மரத் துண்டுகளை அம்பாரை மரக் கூட்டுத் தாபன உயரதிகாரிகள் கைப்பற்றி, அம்பாரை மரக் கூட்டுத் தாபனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக எமது செய்தியாளர் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது:- ' பாடசாலைக் காணியிலுள்ள எந்தவொரு மரத்தையும் எமது திணைக்கள அனுமதி பெறாமல் தறிக்க முடியாது. ஆனால், அனுமதியின்றித் தறித்ததுமட்டுமல்லாது அதனைக் கள்ளத்தனமாக அரிவதற்கு ஆலைக்கு எடுத்துச் சென்றது அதைவிடப் பெரிய குற்றமாகும். முதலில் மில் உரிமையாளரை விசாரிப்போம். அவரது தகவலைக் கொண்டு மரத்தை ஏற்றி வந்தவர் கைது செய்யப்படுவார்.
அவரது வாக்கு மூலத்தைத் தொடர்ந்து அதிபர் கைது செய்யப்படுவார். சில வேளை அதிபர் பதவியிழக்கவும் நேரிடலாம்' எனத் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக இந்த அதிபருக்கு எதிராக கல்வி அதிகாரிகளிடத்திலும், கல்வி அமைச்சிடத்திலும், மனித உரிமை ஆணைக்குழுவிலும், இலஞ்ச, ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவிலும் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. முடிவு என்னவாகுமோ பொறுத்திருப்போம்! உண்மைகளை அறிய எம்முடன் என்றும் இணைந்திருங்கள்.









This comment has been removed by the author.
ReplyDelete