அன்பின் மு.கா.பேராளர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்!
நாளைய தினம் நீங்கள் இலங்கை வாழ் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக மு.கா.பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றீர்கள்.
தன்னை குறுட்டுத்தனமாய் நம்பும் சுரனையற்றோர்கள் என்று நம்பியே ஹக்கீம் உங்களை தேர்ந்தெடுத்து அழைத்துள்ளார் என்பதை யாரும் கூறவேண்டிய அவசியமில்லை.
தாங்களே அதை ஏற்றுக்கொள்வீர்கள்.
வழமைக்கு மாற்றமாக வடிகட்டி அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கான தகுதி ஹகீமின் அடிவருடிகள் என்பது மட்டுமே என்பதை உங்களின் மனசாட்சிகள் நன்கறியும்.
அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக விரோதிகள் என்றும் கூறலாம்.
என்றாலும் நாம் உங்கள் மனசாட்சி, இறையச்சங்களில் இன்னும் முழுமையாக நம்பிக்கை இழக்கவில்லை.
குர் ஆனையும் ஹதீஸையும் உயர் வழிகாட்டிகளாய் கொண்ட யாப்புக்கு சொந்தமான எமது கட்சிக்கு தொடர்ந்தும் தலைமை தாங்கும் தகுதி ஹகீமுக்கு உண்டா என்பதற்கு நீங்களே அழ்ழாஹ்வை அஞ்சியவர்களாக நாளைய மாநாட்டில் பதில் சொல்லுங்கள்.
கடந்த ஒன்றரை தசாப்தங்களாக இக்கட்சியின் தலைமையிலிருந்து ஹகீம் சாதித்தது என்ன?
துடிப்புடன் செயல்படக்கூடிய மக்கள் ஆதரவுள்ளவர்களை கட்சியை விட்டும் துரத்தி, கட்சியையும் மக்களையும் வரலாற்றில் என்றுமில்லாதவாறு பிரித்து ஆளுக்கொரு கட்சியாய் சிதைத்தும், தனது இழிவான செயற்பாடுகளால் முழு சமூகத்தையும் அடகுவைத்து தலைகுனிய வைத்ததையும் தவிர வேறு எதை செய்துள்ளார்?
இந்த இக்கட்டான நிலையில் உங்களுக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் ஹகீமுக்கு எதிரான சமூகத்தின் நிலைப்பாட்டை நாளைய பேராளர் மாநாட்டில் உயிர்த்துடிப்புடன் வெளிப்படுத்தி ஹகீம் மீண்டும் கட்சியின் தலைவராவதிலிருந்து தடுத்து கட்சியையும் சமூகத்தையும் அழிவிலிருந்து பாதுகாக்க உதவுமாறு அழ்ழாஹ்வின் பேரால் வினயமாய் வேண்டுகிறோம்.
கிழக்கின் எழுச்சி-

Post a Comment