காணி மற்றும் வீடு இல்லாதவர்களின் பிரச்சினைகளுக்கு முதலமைச்சரால் தீர்வு

                       ( ஏ.ஆர்.அபி அஹமட் )
மட்டக்களப்பில் காணி மற்றும் வீடு இல்லாதவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

குறித்த விடயத்தை முதலமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு கட்டமாக கடந்த முதலாம் திகதி ஜனாதிபதியின் ஏறாவூர் விஜயத்தில் 1,762 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் சிங்களம், முஸ்லிம் மற்றும் தமிழ் என மூவின மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், வீடுகள் இன்றி பல ஆண்டு காலமாக சிரமங்களை எதிர்நோக்கி வந்த 962 பேருக்கான புதிய வீடுகள் வழங்கி வைக்கப்பட்டதாகவும் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.










Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.