பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவானோர் இணையத்தள முகவரியூடாக எவ்வாறு விண்ணப்பது?

                               -என்பது தொடர்பான இலவச கருத்தரங்கு நிந்தவூரில்-

 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக் கழக பிரவேசத்திற்குத் தகுதி பெற்றிருந்தும், விண்ணப்பத்தை இம்முறை இணையத்தளத்தினூடாக விண்ணப்பிப்பதில் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

இதனை அறிந்த நிந்தவூர் விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம் 'இணையத்தினூடாக பல்கலைக் கழகங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?' தொடர்பான இலவசக் கருத்தரங்கொன்றை இன்று நிந்தவூர் பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் நடாத்தியது.

நிந்தவூர் விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத், தலைவரும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியுமான ஏ.எம்.நஸீல் தலைமையில் இடம் பெற்ற இக்கருத்தரங்கில் நிந்தவூர் பிரதேச சபைச் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எம்.எல்.எம்.றபீக், அல்-மதீனா மகா வித்தியாலய அதிபர் எம்.சரீப்தீன், முன்னாள் அதிபர் எஸ்.அஹமது, சம்மேளனத்தின் பொருளாளர் சட்டத்தரணி.ஏ.எல்.றியாஸ் ஆதம்,  டைடான்ஸ் வி.க.தலைவரும், சம்மேளனத்தின் தலைவருமான மெட்கோ நிறுவனத்தின் விற்பனை பொறியியலாளர் எம்.சீ.எம்.றிபாய் உள்ளிட்ட பிரமுகர்களோடு, பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவ,மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இந்நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்டு, தெளிவான விளக்கங்களை ஆதாரங்களுடன் விளக்கிய சங்கைக்குரிய உலமா எம்.எச்.எம்.சபிர் மௌலவி கருத்துத் தெரிவிக்கையில்:- ' கடந்த வருடம் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் சரியான முறையில் விண்ணப்பிக்காததால் 2000 மாணவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஆகக் குறைந்தது 03 எஸ் எடுத்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். கலைப் பிரிவிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மாத்திரம் 32 துறைகளில் முன்னெறிச் செல்ல முடியும். கலைப் பிரிவில் படிப்போர் கட்டிடக்கலை பட வரைஞராகவும் வர முடியும். ( ஆனால், அவர் கலைப் பிரிவில் புவியியலை ஒரு பாடமாக எடுத்திருக்க வேண்டும்). பல்கலைக் கழக விண்ணப்பங்களை இணையத்தளம் மூலமாக இலவசமாக அனுப்புவதற்கு அரசாங்கம் மூன்று இடங்களை மட்டுமே சட்டப்படி அனுமதித்திருக்கிறது. அவை, 'நனசல, பாடசாலைகளிலுள்ள ஐஊவு நிலையம், கல்வி வலய கணனி வள நிலையம Nயுஊ ' போன்றன. வேறு சில தனியார் நிலையங்களில் இதனைப் பதிவிடுவதற்கு ரூ.700, ரூ.1000, ரூ.1300 என்றெல்லாம் பணம் வசூலிக்கிறார்களாம். எனவே, இதனைத் தெளிவாக விளங்கியவர்களுக்கு இது ஒரு சிரமமான வேலையல்ல' எனத் தெரிவித்தார்.













Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.