-மாகாண அமைச்சர் நஸீருக்கு 'சேவைச் சிகரம்' பட்டம் வழங்கி கௌரவம்!
( ஏ.ஆர்.மதீஹா றபீக் )
மனித நலன் புரி சமூக சேவைகள் ஒன்றியத்தின் (HWSSO) பாலர் நிலைய வருடாந்த பரிசளிப்பு விழாவும், மனித நலன் புரி சமூக சேவைகள் ஒன்றியத்தின் சமூக சேவையாளர்கள் கௌரவிப்பும் நேற்று நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது.
ஒன்றியத்தின் தலைவர் ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சிறுவர் பராமரிப்பு மற்றும் சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மது நஸீர் பிரதம அதிதியாகவும், மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.ஏ.அமீன், மக்கள் வங்கி நிந்தவூர் கிளை முகாமையாளர் எஸ்.நசுறுதீன் அ ல்-மினா வித்தியாலய அதிபர் எம்.எல்.எம்.நிஹார்தீன், கிராம சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முஜாஹித் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
முதல் அங்கமாக மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பலவும் இடம் பெற்றன.
இரண்டாம் அங்கமான சமூக சேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மது நஸீர் அவர்களின் மக்கள் பணியை மதிப்பீடு செய்து, 'சேவைச் சிகரம்' எனும் சிறப்புப் பட்டம் வழங்கி, பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதே போன்று மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் அவர்களின் மக்கள் பணியை மதிப்பீடு செய்து 'இளைஞர் திலகம்' எனும் சிறப்புப் பட்டம் வழங்கி, பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
















Post a Comment